கட்சி தொடங்கியபின் மீண்டும் வருகிறார் பிக்பாஸ் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு 2017ல் தமிழகத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடைபெற்றாலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி.

விஜய் டிவி நடத்திய அது எல்லாம் ஒரு நிகழ்ச்சியா? என்று கேட்டவர்கள் கூட அதை ஒரு முறையாவது பார்த்தார்கள் என்பதே உண்மை.

கமல் தொகுத்து வழங்கிய பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக பிக்பாஸ் வின்னராக ஆரவ் செலக்ட் ஆனார்.

100 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 200 நாட்களுக்கு மேலாக விஜய் டிவி மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பியது எல்லாம் தனிக்கதை.

இதில் பங்குபெற்ற ஓவியா தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார். ஜீலி தமிழக மக்களின் வில்லி போல சித்தரிக்கப்பட்டார்.

மற்ற கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சியே சினிமா வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுத் தர தொடங்கியது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 தொடங்கவுள்ளதாகவும் அதனை கமல் அல்லாத வேறொரு நடிகர் தொகுத்து வழங்குவார் என்றனர்.

தற்போது கமலே தொகுத்து வழங்கவுள்ளதாக தெரிகிறது.

முதல் சீசனில் கமல் சினிமா துறைச் சார்ந்தவராக இருந்தார். தற்போது மக்கள் நீதி மய்யத்தின் என்ற கட்சியின் தலைவராகிவிட்டார்.

எனவே இந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி அரசியல் பரபரப்போடு காணப்படும் என்றே கூறலாம்.

இதற்கும் சிலர் போர்க்கொடி பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை….

கமலின் அரசியல் முடிவில் உடன்பாடு இல்லை; கௌதம்மேனன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கிளாசிக் டைரக்டர் என்றால் அது கௌதம்மேனன் தான்.

இவர் கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை இயக்கியிருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது கமல் அரசியல் களம் கண்டுள்ளார். இதுகுறித்து கவுதம் கூறியதாவது..

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. அது அவருடைய உரிமை.

ஆனால் நான் அவரிடம் இருந்து நல்ல திரைப்படங்களை இன்னும் எதிர்பார்க்கிறேன்.

அவர் சினிமாவில் இருந்து வெளியேறுவதை என்னால் பார்க்க முடியாது. ஒரு ரசிகனாக அவருடன் பணிபுரிந்தவனாக இதனை தெரிவிக்கிறேன்” என கூறியுள்ளார்.

நல்ல குடும்பத்த நாசம் பண்ணாதீங்க; யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் ஞானவேல்ராஜா மனைவி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக தயாரித்தவர் ஞானவேல்ராஜா.

இவரது மனைவி நேஹா ஞானவேல்ராஜா ஒரு சர்ச்சைக்குரிய பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்…

‘திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்கும் பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள் என்றும் அவர்கள் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும், இம்மாதிரியான நடிகைகளின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்றும் பதிவு செய்திருந்தார்.

பின்னர் இந்த டுவீட்டை நீக்கிவிட்டு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இன்னொரு கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கூறிய அந்த கருத்து எனது குடும்ப பிரச்சனை குறித்து அல்ல. எனக்கும் என் கணவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை.

ஆனால் என்னை சுற்றி நடக்கும் ஒருசில விஷயங்கள் என்னை பாதித்துள்ளது. ஒருசில நடிகைகள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடி அந்த குடும்பத்தின் அமைதியை குலைத்து விடுகின்றனர்.

ஒரு பெண் இதுகுறித்து தைரியமாக பேச முன்வந்தால் பொதுமக்கள் இதனை லீக் என்று கூறுகின்றனர். நான் யாருடைய கவனத்தை ஈர்க்கவும், டிராமா செய்யவும் முயலவில்லை.

என்னுடைய டுவீட் காரணமாக என்னுடைய கணவர் குறித்து வந்து சில கமெண்ட்டுக்கள் காரணமாகவும் இதுவொரு சென்சிட்டிவ் பிரச்சனை என்பதை புரிந்து கொண்டதாலும் அந்த டுவீட்டை நான் நீக்கினேன்.

அதே நேரத்தில் இதுமாதிரியான பெண்களுக்கு அந்த டுவீட் ஒரு வார்னிங்காக இருக்கும்.

சோஷியல் மீடியா எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று நேஹா ஞானவேல்ராஜா பதிவிட்டுள்ளார்.

யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் ஞானவேல்ராஜா மனைவி?

Gnanavelraja Wife Nehas contraversy tweet

சூர்யாவின் ஜோடி பிரியா வாரியர்..? கேவி ஆனந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதன் பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை லைக்கா தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதில் சூர்யா ஜோடியாக சமூக வலைதளங்களில் டிரெண்டாகிய ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து இயக்குநர் கே.வி.ஆனந்தி கூறியதாவது..

இதில் நாயகியாக நடிக்க ப்ரியா வாரியரை நாங்கள் அணுகவில்லை. எந்த நடிகையுடனும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் மட்டுமே துவங்கி நடைபெற்று வருகிறது” என்றார்.

டாப் ஹீரோயினை தேடி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

KV Anand clarifies who will be heroine in Suriya 37th movie

அஜித்துக்கு வில்லனாகும் தல ரசிகர் ஆர்.கே.சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள படம் விஸ்வாசம்.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் மார்ச்சில் தொடங்கவிருந்த நிலையில், சினிமா துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எனவே ஸ்டிரைக் முடிந்தவுடன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இதில் வில்லனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தான் அஜித்தின் தீவிர ரசிகர் என ஆர்.கே. சுரேஷ் தன் பேட்டிகளில் கூறி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK Suresh likely to play baddie in Ajiths Viswasam movie

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனை குஷியாக்கிய அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைபனை கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

இவர் நெடுநாட்களாக தான் ஒரு இயக்குனராக வேண்டும் என கூறி வந்தார்.

இந்நிலையில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தின் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை இவரின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.

இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க அவரின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.

இதில் பெண்கள் கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்டுள்ளனர்.

அண்மையில் இப்பட சூட்டிங் தொடங்கியது.

தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

தற்போது சினிமா வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுவருவதால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டதால் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் குஷியாகிவிட்டாராம்.

Sivakarthikeyan became happy because Arunraja Kamaraj work

More Articles
Follows