மிரட்டும் கமல்ஹாசன்.; வழி விட்டு ஒதுங்கியது ‘யானை’

மிரட்டும் கமல்ஹாசன்.; வழி விட்டு ஒதுங்கியது ‘யானை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத்பாசில் நரேன் சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘விக்ரம்’.
இந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியானது. இரண்டு வாரங்கள் கடந்த போதிலும் வசூல் வேட்டையாடி வருகிறது.
உலகளவில் ரூபாய். 300 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா ஆந்திராவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் படம் வெளிவருவதால் 7 ஆண்டுகளுக்குப் பின் கமல் ஒரு பெரிய வெற்றியை கொடுத்துள்ளதாலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தின் மிரட்டும் வெற்றியால் இயக்குனர் லோகேஷ்க்கு கமல் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.
மேலும் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக் பரிசாக வழங்கினார்.
மேலும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு அவரது கேரக்டர் பெயரான ரோலக்ஸ் என்ற பிராண்டட் வாட்சை பரிசாக வழங்கினார்.
திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘விக்ரம்’.
எனவே புதிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது
இந்த நிலையில் இந்த வாரம் ஜூன் 17ஆம் தேதி ஹரி இயக்கத்தில் அருண்விஜய்  நடித்துள்ள ‘யானை’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ‘விக்ரம்’ படத்தின் மிரட்டும் வெற்றியால் தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் ஹரி அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் கமல்ஹானை சந்தித்து ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘யானை’.
ரஜினி வாழ்வை மாற்றியவர் பஞ்சு.; அவர் இல்லையென்றால் இளையராஜா கிடைத்திருக்க மாட்டார்.; பஞ்சு அருணாச்சலம் விழா சுவாரஸ்யங்கள்

ரஜினி வாழ்வை மாற்றியவர் பஞ்சு.; அவர் இல்லையென்றால் இளையராஜா கிடைத்திருக்க மாட்டார்.; பஞ்சு அருணாச்சலம் விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 ஆண்டு விழா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற  பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை PA Art Productions மற்றும் Black Sheep  இணைந்து ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளனர்.
இவ்விழாவிற்கு பத்திரிக்கையாளர்களை அழைக்கும் சந்திப்பில்…
திரைப்பிரபலங்கள் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், ஆர் கே செல்வமணி,  அன்பு செழியன், காட்ரகடா பிரசாத், உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவிற்கான லோகோவை அறிமுகப்படுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களை பாராட்டும் நோக்கில்
மூத்த பத்திரிக்கையாளர்கள் தேவி மணி, தேவராஜ், கலைப்பூங்கா TN ராவணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இச்சந்திப்பில்  கலந்து கொண்ட  தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியது..,
“எதைச் செய்தாலும் அதில் வித்தியாசம் காட்டக்கூடியவர்கள் ஆர் ஜே விக்னேஷ், சுட்டி அரவிந்த். பிளாக்‌ஷிப்பின் கடுமையான உழைப்பு தான் அவர்களது வளர்ச்சிக்கு காரணம். சோ உடைய நாடகங்கள் போல், இவர்கள் நாடகம் இருக்கும். திரையுலகில் பெரியளவில் பாராட்டுகளை பெறாத திறமைசாலி பஞ்சு அருணாச்சலம். அவருடன் நான் வெகுநாட்கள் பயணம் செய்து இருக்கிறேன். அவருக்கு இவ்வளவு நாட்கள் பாராட்டுகள் வழங்கப்படாதது வருத்தம். இப்போது இது நிகழவிருப்பது பெரிய சந்தோசம்.
கலைப்புலி தாணு அவர்கள் பேசியது..
“50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்தவர் சரித்திரம் படைத்தவர். எழுத்தால் தமிழ் சினிமாவில் எண்ணிலடங்கா வெற்றிகளை தந்தவர் பஞ்சு அருணாச்சலம் அவருக்கு நடைபெறும் இந்த பாராட்டு விழாவிற்கு நான் உறுதுணையாக இருப்பேன். எல்லோருக்கும் நன்றி.
தென்னிந்திய வர்த்தக சபை சார்பில் காட்ரகடா பிரசாத் பேசியது…
திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களை முதலில் எங்கள் சங்கத்தில் சந்தித்தேன், அதிலிருந்து 2016 வரை அவருடன் இருந்தேன். அவர் அவருடைய படங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு கதை தந்தவர். எண்ணற்ற பாடல்கள் தந்தவர், படங்களை தந்தவர். அவர் சாதனைகளை இப்போதுள்ளவர்கள் எவரும் நினைத்து கூட பார்க்க முடியாது. இம்மாதிரி சாதனையாளர்களை இப்போதுள்ள தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதனை PA Art Productions மற்றும் Black Sheep  செய்வது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் அன்பு செழியன் பேசியது…
அன்பு அண்ணன் பஞ்சு அவர்கள் என்னிடம் ஒரு குடும்ப நண்பரை போல் தான் பழகினார். அவர் நினைவை போற்றும் வகையில் விழா நடத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த விழாவில் நானும் கலந்து கொள்வது எனக்கு பெருமை.
இயக்குநர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி  பேசியது…
இங்கு வந்த பிறகு இரண்டு நிகழ்ச்சி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு கௌரவிக்கப்படும் பத்திரிக்கையாளர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். தேவராஜை நான் அறிமுகப்படுத்தியதை சொன்னார். இந்த மண்டபமே நன்றியால் நிறைந்த மண்டபமாக இருக்கிறது.
ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் என ரஜினி சார் வாழ்வை மாற்றிய படங்களை தந்தவர் பஞ்சு சார், அதே போல் கமல் சாரை சகலவல்லவன் போன்ற படங்கள் மூலம் மாஸாக மாற்றியவர். அந்த காலத்தில் பஞ்சு சார் கதையென்றால் முன்னணி நட்சத்திரங்கள் கேள்வி கேட்காமல் நடிப்பார்கள். அவருக்கு விழா எடுப்பது எழுத்தாளர்களுக்கு எடுக்கும் விழா. அந்த விழாவில் அவரால் பயனடைந்தவர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி
திரையரங்குகள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் பேசியது…
“தமிழ் திரையுலகம் தள்ளாடி கொண்டிருந்த காலத்தில் அன்னகிளி படத்தை தந்து சினிமாவை திரையரங்கை காப்பற்றியவர் பஞ்சு சார் அவர் புகழ் திரையரங்குகள் இருக்கும் வரை, சினிமா இருக்கும் வரை இருக்கும். நன்றி.
தயாரிப்பாளர் TG தியாகராஜன் பேசியது..
“பஞ்சு சார் எவ்வளவோ சாதனை படைத்திருக்கிறார் அவர் படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடன் சில காலம் பயணித்து இருக்கிறேன். அவர் பல ஜானர்களிலும் படம் தந்து சாதனை செய்துள்ளார். அவருக்கு இந்த விழா நடப்பதும் அதில் நானும் கலந்துகொள்ளவிருப்பதும் மகிழ்ச்சி. நன்றி
இசையமைப்பாளர் இயக்குநர் கங்கை அமரன் பேசியது…
அண்ணன் பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் எங்கள் பரம்பரையே இல்லை. அவர் போட்ட பிள்ளையார் சுழி தான் எங்கள் வாழ்வை ஆரம்பித்து வைத்தது. அண்ணன் இருக்கும்போதே அவருக்கு விழா எடுக்க வேண்டும் என நினைத்தோம்.
இப்போது நடப்பது மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தில் நடக்கும் விழாவில் பேசுவது போல் உள்ளது. இளையராஜா அண்ணனை தூக்கி விட்டது பஞ்சு அண்ணன் தான். அதே போல் என்னை வளர்த்து விட்டவர் பாரதிராஜா அவருக்கு நன்றி. இந்த விழா நடக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உறுதி கூறுகிறேன் நன்றி.
நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் பேசியது..
பஞ்சு அருணாச்சலம் பத்திரிக்கையாளராக வாழ்கையை துவங்கியவர். அவர் எடுத்த எல்லாப்படங்களும் வெற்றிப்படங்கள். பாதியில் நின்ற படங்களை வெற்றிகரமாக முடித்துகொடுக்க உதவியவர். அவர் பல பாடல்களை எழுதியுள்ளார், பல வீட்டில் அது இன்னும் ஒலித்துகொண்டிருக்கிறது. பல தோல்விகளை கடந்தே அவர் வாழ்கையை அமைத்துள்ளார். ஒருகாலத்தில், அவருடைய பங்கில்லாமல் வெளிவரும் படங்கள் குறைவாகவே இருந்தது. அவருக்கு விழா எடுப்பது மகிழ்ச்சி.
இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது..
பஞ்சு ஒரு மென்மையான மனிதர். நான், இளையராஜா, கங்கை அமரன் அவரால் வளர்ந்தவர்கள். என்னுடைய  அனைத்து படங்களையும் அவருக்கு போட்டுக்காட்டுவேன், அவர் பரிந்துரைகளை கேட்டு அதில் திருத்தங்கள் சொல்வார். அது படத்திற்கு பெரும் உதவியாய் இருக்கும். அவர் இல்லையென்றால் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்க மாட்டார். பஞ்சு அருணாச்சலம் உடைய பங்கு தமிழ் சினிமாவில் அதிகம். அவர் திறமையான எழுத்தாளர். அவருக்கு விழா எடுப்பது நமது கடமை. அவருடைய விழாவிற்கு தமிழ் திரையுலகம் முழுமையாக வர வேண்டும்.
‘விக்ரம்’ படத்தில் மாஸ் காட்டிய ஏஜென்ட் டீனா.; கொடைக்கானலில் பாராட்டு மழை

‘விக்ரம்’ படத்தில் மாஸ் காட்டிய ஏஜென்ட் டீனா.; கொடைக்கானலில் பாராட்டு மழை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையமைக்கும் 1417வது படமாக ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “நினைவெல்லாம் நீயடா”.
இந்தப் படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது.
இசைஞானி இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய “இதயமே இதயமே… உன்னைத் தேடித் தேடி…” என்ற பாடலுக்கு கதாநாயகன் பிரஜன் கதாநாயகி சினாமிகா பங்குபெற்ற நடனக் காட்சிகளை நடன இயக்குனர் தினேஷ் படமாக்கி வருகிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும்  வெற்றி பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த வசந்தி பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றுபவர்.
இன்று கொடைக்கானலில் நடந்துவரும் படப்பிடிப்பில் பணியாற்ற வந்த நடிகை வசந்திக்கு படக்குழு சார்பில் கதாநாயகி சினாமிகா ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர் ஆதிராஜன் மலர் கொத்து வழங்கி வாழ்த்தினார்.
படத்தின் தயாரிப்பாளர் ராயல் பாபு, நடிகர் பிரஜன், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி,  ஆர்ட் டைரக்டர் முனிகிருஷ்ணா, மாஸ்டர் தினேஷ், மேனேஜர் இளங்கோ ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
படக்குழுவினர் அனைவரும் கைதட்டி வசந்திக்கு வாழ்த்துக் கூறினர்.
‘இரவின் நிழல்’ விழா ஹைலைட்ஸ் : LIFTING UR TASTE OF CINEMA.. உள்ளே வெளியே ஆட்டத்தை ஆரம்பித்த பார்த்திபன்

‘இரவின் நிழல்’ விழா ஹைலைட்ஸ் : LIFTING UR TASTE OF CINEMA.. உள்ளே வெளியே ஆட்டத்தை ஆரம்பித்த பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இயக்குனருமான  இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அசாத்தியங்களை சாத்தியமாக்குவதை எப்போதும் தன் இயல்பாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு, பார்த்திபன் எழுதி இயக்கி அவர் ஒருவர் மட்டுமே நடித்த “ஒத்த செருப்பு” திரைப்படம் தேசியவிருது உட்பட பல சர்வதேச விழாக்களில் விருது பெற்று தரமான படமாக ரசிகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கு மேல் அவரால் என்ன செய்துவிடமுடியும் என பலரும் எண்ணிய நிலையில், அவரது அடுத்த பெரும் படைப்பு “இரவின் நிழல்”.*
BIOSCOPE USA மற்றும் AKIRA PRODUCTIONS தயாரித்த இத்திரைப்படத்தின் – கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – இராதாகிருஷ்னண் பார்த்திபன். மீண்டும் ஒரு அசாதாரணமான முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் பார்த்திபன். உலகின் முதல்’ NON-LINEAR SINGLE SHOT MOVIE’ என்ற பெருமையுடன், தமிழ் திரை உலகுக்கே உலக அரங்கில் பெருமை சேர்க்கப் போகும் திரைப்படம் இந்த “இரவின் நிழல்” – ஆம் !
திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த படைப்பாளிகள் பலரும் பரவசமாய், நெகிழ்ச்சியாய் பகிர்ந்தது இத்தகவலே!
இப்படத்தின் இசை வெளியீடு
ஜுன் 5 – 2022, IIT Madras Research Park- சென்னை -யில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கூடுதல் சிறப்பாய்
“ரோஜா முதல் இரவின் நிழல்” வரையிலான இசைப்புயல் A R ரஹ்மான் அவர்களின் இசைப்பயணத்திற்கான கொண்டாட்ட விழா, ஒரு திருவிழா போல நடைபெற்றது. (MUSICAL JOURNEY OF A.R.RAMAN)
ஒரு இசைவெளியீடு _ பாராட்டு விழா எப்படி இருக்குமோ அப்படி இந்த நிகழ்ச்சி நிச்சயம் இருக்காது! பார்த்திபன் எப்படியும் நம்மை ஆச்சர்யப்படுத்துவார் என்று நம்பிக்கையில்தான் சென்றோம் .
ஆனால் நாம் நினைத்ததை விட 10 மடங்கு ஆச்சர்யத்தை உண்டாக்கிவிட்டார் மனிதர்! ஆம்…தனது படைப்பு மாத்திரமல்ல, ஒரு நிகழ்ச்சியைக்கூட வித்தியாசத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல நிச்சயமாய் பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபனே! தனது போட்டியாளராய் தன்னையே நினைப்பதால், அடுத்தடுத்து சிகரம் தொடுகிறார் பார்த்திபன்.
‘Musical journey of A.R.Rahman’ என்ற கலைமிகு நுழைவாயில் நமை வரவேற்க… பியானோ வடிவிலான கருப்பு – வெள்ளைக் கட்டைகளின் வளைவுகளுக்கிடையே நாம் பயனிக்க, மரப்பலகைகளில் வரைந்த ஓவியம் மனதில் இசைக்க, எதிரே Press – க்கான பார்த்திபன் ஸ்டைல் மேசையில் press – Red Carpet Interview.
அதை கடந்து Lift-இன் நுழைவு வாயிலில்
Name boardS
ஒரு புறம்
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
IN
மற்றொருபுறம்
A R ரஹ்மான்
IN
வழக்கமான IN & OUT பலகை என IN-ஐ தள்ளிப்பார்த்தால் மறுபுறமும் “ IN “
A.R.ரஹ்மான், பார்த்திபன் இருவரும் நமை மகிழ்விக்க  உள்ளே உள்ளனர் என்பதை வெளியே தெரிவித்ததுடன்,  IRAVIN NIZHAL-ன்  சுருக்கம்  “IN” – என தனது “உள்ளே – வெளியே” ஆட்டத்தை ஆரம்பித்தார் பார்த்திபன்.
LIFTற்குள் செல்லும் வழியில் இரவின் நிழலின் STENSIL-ன் பின்புறம் ஒளி பீய்ச்ச …
நிழலாய் வருபவர்களின் மேல் படரும் ஒளி – அழகு!
LIFT-ற்குள் ஏறினால்
“LIFTING YOUR TASTE OF CINEMA” என LIFT-ற்குள் நிகழ்ச்சியின் நாயகன்
A R ரஹ்மான் மற்றும் இரவின் நிழலின் POSTERS!
LIFTஐத்  திறந்தால்
1000 இசைக்கருவிகள் இருபுறமும் வரிசையாய் வரவேற்க – நடுவில் நாம்!
அடடே…அற்புதம்!
BYTE BOOTH
வழியில் இரண்டு BYTE BOOTH. பேசுபவர்களுக்கு FRAME வைக்காமல் பேசுபவரே ஒரு FRAME-ற்க்குள் அமரும்படியான அட்டகாசமான செட்டப்.
அரங்கிற்குள் நுழைந்ததும்
இமைகள் இமைக்க மறந்தன அரங்கைக் கண்டதும்,
ஆளுயர அழகான சிற்பங்கள் இசைக்கருவியை வாசிப்பது போல் ஆங்காங்கே
FRAME-இல் அமர்ந்தபடி தொங்கிக் கொண்டிருக்க, அருகில் EMPTY FRAMES – தொங்கவிட்டிருந்தது – கவிதை!
எல்லா நிகழ்ச்சிகளிளும் தொகுப்பாளர் ஒரு புறமிருக்க, பார்வையாளர்களின் பார்வை யாவும் ஒரு புறமாய் குவியும்.  ஆனால் இயக்குனர்
திரு. கரு பழனியப்பன் நிகழ்ச்சியைத் துவங்க, திடீரென இட வலமாய் அவர் நகர்ந்தார் – நடக்காமல் ! YES. ட்ராக் அண்ட் ட்ராலியில் பார்வையாளர்கள் யாவரும் திரும்பிப்பார்க்காமல் அவரவர் பார்வைக்கு நேரே!
கரு பழனியப்பன் மற்றும் R J சிவசங்கரி தொகுத்தது அழகு!
பாடகர்கள், இசையமைப்பாளர்கள், GV பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன், மற்றும் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, கலைப்புலி எஸ் தாணு, இப்படி வந்த விருந்தினர்கள் பலரும்  நகரும் மேடையில் பேச, நாம் நகராமல் பார்த்துக் கொண்டிருந்தோம். பார்த்திபன் டச்..!
ஒரே மேடை 3 விதமாய் மாற்றம்… எப்படி சாத்தியம்?
திரை மூடி திறக்கும் போதெல்லாம் வெவ்வேறு வித்தியாசமான அரங்க அமைப்புகள். அட்டகாசம் பார்த்திபன்!
ட்ரம்ஸ் சிவமணி, வழக்கம் போல் அதிரவைக்க அரங்கத்தில் கை தட்டல் மூலம் சிவமணிக்கு ரசிகர்கள் ஈடு கொடுத்தனர்.
அத்துணை இசைக் கலைஞர்களும் ரஹ்மானின் புகழ்மிகு பாடல்களை இசைத்துப் பாடி நமை மயக்கிக்  கொண்டிருக்க, புயலாய் வந்தார்
A R ரஹ்மான்- ரோஜா  பூக்களுக்கு நடுவே! இசையையும் , பாராட்டுகளையும் அமைதியான புன்னகையுடன்  ரசித்துக் கொண்டிருந்தார்.
நிகழ்ச்சியின் ஒவ்வொரு அசைவிலும் பார்த்திபனின் மெனக்கெடல் அபாரம். உடன் உழைத்த கலைஞர்களுக்கும் பாராட்டுகள்!
இசை வெளியீட்டை இந்தி சூப்பர் ஆக்டர் அபிஷேக் பச்சன் வெளியிட்டது சிறப்பு! இவர்தான் பார்த்திபன் HINDI_யில் இயக்கிய SSS7 (ஒத்த செருப்பு REMAKE) படத்தின்  நாயகன்.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு நிகழ்வும் அபாரம்.
இம்முறை மைக்கால் டென்ஷன் இல்லாமல் பலரும் மைக்கை வைத்து காமெடி செய்தது ஹைக்கு சிரிப்பு!
முத்தாய்ப்பாய்…
Musical Journey of Mozart of Madras என்ற தனித்துவமான மேடையில் Mozart of Madras A R ரஹ்மானின் கந்தர்வ இசையில் “இரவின் நிழல் “ படத்தின் பாடல்கள் இசைக்கப்பட…
இசை மற்றும் படத்தின் வீர்யம் தெரிந்தது …புரிந்தது!
உயிரை உருக்கும்… உறைய வைக்கும் இசை!
நிச்சயம் உலகம் வியக்கும்படியான படைப்பாகும் இரவின் நிழல்!  நம்புவோம்!
பார்த்திபனின் தங்கம் பதித்த பியானோ பரிசை ரஹ்மான் பரவசத்துடன் பெற, படக்குழுவினர் யாவருக்கும்  ரஹ்மான் கையால் கிரீடமாய் தொப்பி வைக்கப்பட்டது!
மொத்த நிகழ்ச்சியே ஹைலைட்தான் அதிலும் ஹைலைட்,
பார்த்திபன் கேள்விகள் கேட்க, ரஹ்மான் இசையால் பதிலளித்தது…!
புதுமையின் புதுமை!
GREAT SHOW !
நிகழ்ச்சி விரைவில் STAR VIJAY-யில் வரவிருக்கிறது!
MUST WATCH !.
இரவின் நிழலும் திரைக்கு வர தயாராக இருக்கிறது!
நம் தமிழ்க்  கலைஞனைக் கௌரவிக்க உலகம்  காத்துக் கொண்டிருக்கிறது!
வாழ்த்துகள் பார்த்திபன்!
விஜய்சேதுபதியுடன் மோதும் சுந்தர் – ஜெய்..; வெல்லப் போவது மனிதனா? பூச்சியா?

விஜய்சேதுபதியுடன் மோதும் சுந்தர் – ஜெய்..; வெல்லப் போவது மனிதனா? பூச்சியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடை விடுமுறை என்றாலே தமிழ் சினிமாவில் புதிய படங்களுக்கு பஞ்சமிருக்காது.
மளமளவென படத்தின் ரிலீஸ் தேதியை முன்னணி தயாரிப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற ஜூன் 24ஆம் தேதி ரிலீசாக உள்ள சில படங்களைப் பற்றிய பார்வை இதோ…
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் ஜூன் 24ம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படமும் ரிலீசாக உள்ளது.
இந்த படங்கள் பற்றிய பார்வையை பார்ப்போம். இறுதியில் வெல்லப்போவது மனிதனா அல்லது பட்டாம்பூச்சியா என்பதை காண ஜூன் 24 வரை காத்திருப்போம்.
சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி 4வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘மாமனிதன்’.
இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார்.
இவர்களுடன் குரு சோமசுந்தரம், சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்காக முதன்முறையாக இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தன் சொந்த பேனரில் தயாரித்துள்ளார். அவரின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்த குற்றம் குற்றமே படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ரிலீஸானது.
மேலும்  ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, கலகலப்பு-2, கோபி நயினார் இயக்கத்திலும் ஒரு படத்தில் என நடித்து வருகிறார்.
அடுத்ததாக இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள படம் பட்டாம்பூச்சி.
இயக்குனர் சுந்தர்.C மற்றும் ஜெய் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பட்டாம்பூச்சி படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் பட்டாம்பூச்சி திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
 இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், நவநீத்.S இசையமைத்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படமும் ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பத்து தல’ சூட்டிங் தள்ளிவைப்பு.; அமெரிக்கா பறந்தார் சிலம்பரசன்.; காரணம் இதுதான்

‘பத்து தல’ சூட்டிங் தள்ளிவைப்பு.; அமெரிக்கா பறந்தார் சிலம்பரசன்.; காரணம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே தந்தையின் உடல் நலம் குறித்து அவரின் மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்…
“எதையும் யாரும் நம்ப வேண்டாம். என் தந்தை மிக நலமாக உள்ளார். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.
அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தன் தந்தை டி.ராஜேந்தர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்ய  அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தந்தையின் சிகிச்சை முடிந்து முழுவதும். குணமான பின்னரே  சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது அதுவரையில் பத்த தல படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்ப
More Articles
Follows