ஸ்ரீதேவி கையால் விருது பெற்று மலரும் நினைவுகளில் மூழ்கிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1970 மற்றும் 80ஆம் ஆண்டுகளில் பல படங்களில் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்கள் ஜோடியாக நடித்த பெரும்பாலான படங்கள் வசூலை அள்ளியது.

தமிழகத்தில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் இந்தி படங்களில் நடித்தார்.

அங்கும் புகழ் கொடி நாட்ட நடிகர் அனில்கபூரின் சகோதரரும், தயாரிப்பாளருமான போனி கபூரை மணந்து மும்பையிலேயே செட்டிலானார்.

இந்நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் சந்தித்து கொண்டனர்.

அங்கு கமல்ஹாசனுக்கு ஸ்ரீதேவி கையால் விருது வழங்கப்பட்டது.

அப்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதன்பின்னர் கமல் பேசும்போது, “ஸ்ரீதேவி கையால் விருது பெற்றது மகிழ்ச்சி. அவரை பார்த்ததும் நான் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்றேன்” என்றார்.

இதனைக் கேட்ட பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

விஜய்சேதுபதியின் ஒரே படத்திற்கு இளையராஜா குடும்பமே இசையமைக்கிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில இயக்குனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நடிகருடன் கூட்டணி அமைத்தால் படம் நிச்சயம் ஹிட்டாகும் என்ற சென்டிமெண்ட் உண்டு.

அந்த ராசி சென்டிமெண்டில் வெற்றிக்கரமாக பயணித்து வருபவர்கள் என்றால் சீனுராமசாமி மற்றும் விஜய்சேதுபதியை சொல்லலாம்.

இவர்கள் முதலில் இணைந்த `தென்மேற்கு பருவக்காற்று’ சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது.

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து `இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார் சீனுராமசாமி.

சில பிரச்சனைகளால் அந்த படம் இதுவரை வெளியாகவில்லை.

இதன்பின்னர் விஜய்சேதுபதி-தமன்னாவை வைத்து தர்மதுரை படத்தை இயக்கினார்.

இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது ‘மாமனிதன்’ என்ற படத்திற்காக இவர்கள் இணைந்திருக்கின்றனர்.

தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்காக இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர்.

இத்தகவலை யுவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இளையராஜா குடும்பத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மூன்று பேரும் ஒரே படத்திற்கு இசையமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் ஜாதியை குறிப்பிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ்; காாி துப்பி கிழித்த கஸ்தூாி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பான செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் பிரசுரமாகின.

ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் Indian Express இளையராஜாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் அவரது ரசிகா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

மேலும் விருது பெற்ற செய்தியை மட்டும் வெளியிடாமல் அவரது ஜாதிப்பெயரை குறிப்பிட்டது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று ரசிகா்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

நடிகை கஸ்தூாி அந்த நாளிதழை காாி துப்புவதுடன் அதனை கிழித்து போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஸ்தூாியின் இச்செயலுக்கு இளையராஜாவின் ரசிகா்கள் வரவேற்பு தொிவித்துள்ளனா்.

சத்ரு பட மோசன் போஸ்டரை கௌதம்மேனன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு.

இந்த படத்தின் நாயகனாக கதிர் நடிக்க நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்

இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம்.

இந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரிஷ்
பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ
எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே
கலை – ராஜா மோகன்
ஸ்டன்ட் – விக்கி

Kathirs Sathru motion poster launched by Gautam Vasudev Menon

வேலைக்காரன் படத்தை இலவசமாக பார்க்க மாணவர்களுக்கு வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ராஜ இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்த படம் வேலைக்காரன்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.

இப்படம் கடந்த 2017 ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியானது.

இப்படம் இன்னும் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் புதிய முயற்சியாக பள்ளி மாணவர்களுக்கு இப்படத்தை இலவசமாக திரையிட இருக்கிறார்களாம்.

அதன்படி வருகிற பிப்ரவர் 1 முதல் 15 வரை இந்த சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyans Velaikkaran movie free show for Students

அதுபற்றிய அறிக்கை இதோ…

ஜெயிக்கப்போவது யாரு பட இசையை இமான் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்கபோவது யாரு“

இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார்.

மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட்

இசை – சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின்

படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது…

கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார்.

ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார்.

இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன்.

இதுவரை ஒரு படம் எடுப்பதற்கான 15 துறைகளையும் ஒரே ஒரு மனிதன் ஜாக்கிசான் அவர்கள் “ ஜோடியாக் “ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012 ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.

அதற்கு பிறகு நான் 29 துறைகளில் பணியாற்றி இந்த படத்தை முடித்துள்ளேன். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும் இடம்பெறும் என்று நம்பிக்கையுடம் கூறுகிறார் இயக்குனர் சக்திஸ்காட்.

இந்த படத்தின் இசையை நூறு படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Jeyikka povathu yaaru movie songs launch by Music director Imman

More Articles
Follows