நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் மக்கள் நீதி மய்யம்

kamal haasanஅடுத்த 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்குமா? அல்லது ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா? என இந்திய தேசமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை சந்தித்த செய்தியாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறோம். தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம்.

வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தேர்தலை எதிர்கொள்வது பற்றி அறிவுரை வழங்கினார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தவில்லை; பெரிய அளவில் வீச்சு இருக்க வேண்டும் என கருதுகிறோம். ” என்றார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post