வருமுன் தடுத்திடு.; வந்த பின் கட்டுப்படுத்துவது ஆபத்து..; கமல் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதி வேகமாக அதிகரித்தவருகிறது.

தமிழகத்தில் சென்னையில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் எண்ணிக்கை அதிகளவில் அதிகரித்து வருகிறது.

தற்போது சென்னையைக் கடந்து தமிழகத்தில் மதுரை, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில்…

‘போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது.

வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது’ என பதிவிட்டுள்ளார்.

ஆன்லைன் க்ளாஸ்.: மொபைல் வேண்டாம்.. டிவி-யே போதும்… அமைச்சர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில்..

மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வை ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல மாணவர்கள் இறுதிநாள் தேர்வை தவறிவிட்டதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மாணவர்கள் தவறவிட்ட தேர்வுகள் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ அல்லது www.dge.tn.gov.in என்கிற இணையதளப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படவுள்ளது.

அதேபோல நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்..

மார்ச் மாதம் எழுதாமல் விடுபட்ட 12-ஆம் வகுப்பு தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். எழுதவில்லையென்றால் தேர்ச்சி இல்லை.

அதுபோல் ஆன்லைன் வகுப்புகள் குறித்தும் பேசினார். அதில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே நடத்தப்படும்.

பள்ளி பாடங்களை நடத்துவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

15 கோடி ரூபாய் தங்க கடத்தல் விவகாரம்.; மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் மனிதருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கடத்தல் விவகாரத்தை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் விசாரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்…

தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்…. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு தன் கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய் மகன் சஞ்சய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தளபதி என்றால் அது நடிகர் விஜய் தான்.

இவரது மகன் சஞ்சய் வேட்டைக்காரன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார்.

இவர் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத் தயாரிப்பாளர் (விஜய்யின் உறவினர்) பிரிட்டோ தயாரிப்பில் சஞ்சய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தயாரிப்பாளர் பிரிட்டோ இந்தச் செய்தியை மறுத்துள்ளார்.

மேலும் தான் இதுகுறித்து விஜய்யிடம் தான் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

இவையில்லாமல் விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ள படத்திலும் விஜய் மகன் சஞ்சய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் ட்ராபிக் ரூட்ஸ் & ரூல்ஸ் இரண்டு வாரங்களுக்கு மாற்றம்..; முழு விவரம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை போக்குவரத்துக் காவல் பிரிவு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப்பணி நடக்க இருப்பதால் வரும் 11-07-2020 முதல் 25-07-2020 வரை 15 நாட்களுக்கு கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. அண்ணா சாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக EVR சாலை வருபவர்கள் தொடர்ந்து இதே சாலையில் செல்லலாம், மாற்றம் இல்லை. செண்ட்ரல் ரயில் நிலையல் வருபவர்கள் இப்பாதையை பயன்படுத்தலாம்.

2. முத்துசாமி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள் முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம்.

3. ஈவினிங் பஜார் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் ஈவினிங் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, EVR சாலை சென்று வலதுபுறம் திரும்பி முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம்.

4. ஈவினிங் பஜார் சாலையில் இருந்து செண்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணா சாலை செல்ல முடியாது.

5. வால்டாக்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள் இடதுபுறம் திரும்பி EVR சாலை சென்று வலது பக்கம் திரும்பி, முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம். இவர்கள் செண்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணா சாலை செல்ல முடியாது.

6. முத்துசாமி சாலையில் இருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக பல்லவன் சாலை செல்ல இயலாது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியிலும் கட்சியிலும் ஒரு போதும் சசிகலாவிற்கு இடமில்லை..- அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சிறைத் தண்டனையை முடித்து விட்டு வெளியே வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் தினம் மீடியாக்களில் வலம் வருகிறது.

இந்த நிலையில்… ஓ.எஸ்.மணியன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்த போது..

சசிகலா விடுதலைக்கு பிறகு யார் அதிமுகவை வழிநடத்துவார்கள் என்ற செய்தியாளர்கள் கேட்டனர்.

அந்த கேள்விக்கு… ”சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும்.

நான் சாதாரணமான மாவட்ட செயலாளர் என்றும் இதில் எந்த கருத்து கூறமுடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மற்றொரு சந்திப்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பதிலளித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்…

சசிகலா குறித்து பேசியது ஒ.எஸ்.மணியன் அவர்களின் சொந்த கருத்ததாக இருக்கலாம்.

சசிகலா இல்லாமல் ஆட்சி நடத்துவது தான் அதிமுக அரசின் திட்டம். சசிகலாவிற்கு ஆட்சியிலும், கட்சியிலும் ஒரு போதும் இடமில்லை. அதிமுக-வின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை.” என தெரிவித்துள்ளார்.

சசிகலா ரிலீசுக்கு (ஆகஸ்ட்டுக்கு) பின் தமிழக அரசியலில் கட்சி & காட்சி மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

More Articles
Follows