மக்கள் மனமேறிய பரியேறும் பெருமாள்.; காலா இயக்குனர் ரஞ்சித்தை வாழ்த்திய கமல்!

மக்கள் மனமேறிய பரியேறும் பெருமாள்.; காலா இயக்குனர் ரஞ்சித்தை வாழ்த்திய கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan with pa ranjith“இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள்” பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.இரஞ்சித்தையும் ,மாரி செல்வராஜையும் வாழ்த்திய நடிகர் கமல்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று படம் பார்த்த கமலஹாசன், “தனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்… உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

கன்னட சூப்பர் ஹிட்டான *நிஷ்யப்டா2* படம் தமிழில் *மஞ்சக்காடு* பெயரில் ரீமேக்!

கன்னட சூப்பர் ஹிட்டான *நிஷ்யப்டா2* படம் தமிழில் *மஞ்சக்காடு* பெயரில் ரீமேக்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

manjakkadu krishnaரீமேக் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நிஷ்யப்டா 2’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

நிஷ்யப்டா 2’ படம் தமிழில் ‘மஞ்சக்காடு’ என்ற பெயரில் உருவாக இருக்கிறது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார்.

இப்படத்தின் ரீமேக் உரிமையை ரவிபாபு என்பவரிடம் முறைப்படி பெற்று, தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார்.

அலைன்ஸ் பிக்சர்ஸ் சார்பில் உருவாக இருக்கும் இப்படம் கிரைம் திரில்லர் கதையாக தயாராகி வருகிறது.

இப்படத்தின் கதாநாயகன், நாயகி, பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.

மேலும் படப்பிடிப்பு, டீசர் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.

*ராட்சசன்* கதையின் பின்னணி இசையில் சவால்களை உணர்ந்தேன்.. : ஜிப்ரான்

*ராட்சசன்* கதையின் பின்னணி இசையில் சவால்களை உணர்ந்தேன்.. : ஜிப்ரான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ghibranஒரு சிறப்பான திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகும்போது, ஒட்டு மொத்த குழுவிடமும் பொதுவாக நிலவுகின்ற ஒரு நம்பிக்கை மற்றும் திருப்தியை நீங்கள் காணலாம். குறிப்பாக, தொழில்நுட்ப கலைஞர்களிடமும், இசையமைப்பாளர்களிடமும் இதை அதிகமாகவே காண முடியும். இசையமைப்பாளர் தான் தன் இசையால் படத்துக்கு முழு உயிரை கொடுக்கிறார். எப்போதும் அமைதியுடன் காணப்படும் இசையமைப்பாளர் ஜிப்ரான், அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ‘ராட்சசன்’ படத்தின் மீது மிகுந்த உற்சாகமாத்துடன் இருக்கிறார்.

ராட்சசன் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஜிப்ரானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பாராட்டி வருகிறார்கள். இது குறித்து ஜிப்ரான் கூறும்போது, “எந்த ஒரு படத்திலும் பாராட்டு எந்த அளவுக்கு வருகிறதோ, அந்த அளவுக்கு பொறுப்பும் என் தோள்களில் வந்து சேர்கிறது. மக்கள் என் பின்னணி இசையை அதிகம் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதனாலேயே படத்தை தேர்வு செய்வதில் நான் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதாகி விட்டது. உண்மையில், எந்த ஒரு இயக்குனரும் எனக்கு ஒரு கதை சொல்லும்போது, அதில் பின்னணி இசைக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனிப்பேன். சில நேரங்களில், அது என் கருத்துக்கு ஆதரவாகவும், ஒரு சில நேரங்களில் முரண்பாடாகவும் இருந்திருக்கின்றன. ஆனால், ‘ராட்சசன்’ கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடியது. கதையை கேட்கும்போது பின்னணி இசையில் நிறைய சவால்கள் இருப்பதை நான் உணர்ந்தேன்” என்றார்.

ராட்சசன் படத்தில் பணிபுரியும்போது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை பற்றி ஜிப்ரான் கூறும்போது, “பின்னணி இசையின் வழக்கமான கூறுகளை கொண்டு இசையமைப்பதை தாண்டி, நிறைய இடங்களில் ‘இசையுடன் ஒலியை’ கலந்து தர வேண்டி இருந்தது. கதை சொல்லல் மற்றும் பிவி சங்கரின் சிறப்பான காட்சியமைப்புகளுக்கு இசை மூலம் சிறந்த விஷயங்களை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். நடிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவருமே புதிய பரிமாணம் எடுத்திருக்கிறார்கள். ஒரு ரசிகனாக என்னை கவர்ந்தனர். இந்த படத்தில் எல்லோரும் திறமையாளர்கள். அதனால் நானும் மிகச்சிறப்பாக பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு மற்றும் அவர்களின் கருத்துகளை கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த ராட்சசன் திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. ஜி.டில்லிபாபு (ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி) மற்றும் ஆர்.ஸ்ரீதர் (ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்) ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

தமிழக சர்கார் சுமாராக இருப்பதால் சமுதாயத்திற்கு விஜய் தேவை.. : ராதாரவி

தமிழக சர்கார் சுமாராக இருப்பதால் சமுதாயத்திற்கு விஜய் தேவை.. : ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and radha raviசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாய் நடந்தது.

விழாவில் இப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ள நடிகர் ராதாரவி பேசியதாவது…

இது சர்கார் இசை வெளியீட்டு விழா அல்ல, சிறிய மாநாடு போன்று இருக்கிறது.

சினிமாவில் சாதித்த பின்னரும் தன்னை கை தூக்கிவிட்டவர்களை மறக்காதவர் விஜய்.

விஜய், நீ இந்த சமுதாயத்திற்கு தேவை. சமுதாயத்திற்கு தேவை என்பதற்கே இவ்வளவு கைதட்டல்.

நீ இறங்கினால் எவ்வளவு கைதட்டல்? இருக்கும். இப்போது உள்ள தமிழக சர்கார் சுமாராக இருப்பதால் இந்த சர்கார் வருகிறது” என்று பேசினார் ராதாரவி.

நயன்தாராவை அம்மா என்றே அழைக்கும் காமெடி நடிகரின் மகள்

நயன்தாராவை அம்மா என்றே அழைக்கும் காமெடி நடிகரின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

naynathara and manasviவிவேக் உடன் பல படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் கொட்டாச்சி. இவரின் மகள் மானஷ்விதான் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார்.

தன் அம்மா நயன்தாராவை கொடுமைப்படுத்த வரும் ஒரு போலீஸ்காரரிடம் மானஸ்வி ‘சொட்ட சொருகிடுவேன்’ என்று பேசுவாரே அந்த பெண் தான்.

இவர் தற்போது சதுரங்க வேட்டை 2 படத்தில் திரிஷாவின் மகளாக நடிக்கிறார்.

மேலும் கும்கி 2, பரமபதம் விளையாட்டு, இருட்டு, கண்மணி பாப்பா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறாராம்.

இதுகுறித்து மானஸ்வியின் தந்தை நடிகர் கொட்டாச்சி கூறியதாவது…

நான் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால் என் மகள் பெரிய நடிகையாகி இருப்பது மகிழ்ச்சி.

நயன்தாரா அடிக்கடி மானஸ்வியுடன் பேசுவார். நயன்தாராவை மானஸ்வி அம்மா என்றுதான் அழைக்கிறார்’ என்றார்.

பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டி ரஞ்சித்துக்கு சீமான் முத்தம்

பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டி ரஞ்சித்துக்கு சீமான் முத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanஇந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாகடர்.தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, மதிமுக-வின் துணை பொதுச் செயலாளர் மல்லை. சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப்படத்தினை பார்த்து உணர்ச்சிவசப் பட்டவர்களாக மாறிப்போனார்கள். அவர்களில் “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருபடி முன்னே சென்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜையும் கட்டித் தழுவி, முத்தமிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தினார்.

“பரியேறும் பெருமாள்” படத்தினைப் பற்றி தலைவர்கள் பேசியது..

திரு.டாக்டர்.தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி),

“இந்த “பரியேறும் பெருமாள்” ஒரு உலகத்தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா. ஒவ்வொரு வசனமும், காட்சியும் மிக இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அதீதமான கற்பனையோ, அதீதமான காட்சிப் பதிவுகளோ இல்லாமல் உண்மைத்தன்மையுடன் இருக்கிறது இந்தப் படம். சாதீய ஒடுக்குமுறைகள் என்பது ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்கும் ஒன்று.

இது எவ்வளவு கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் நாமறிவோம். அந்த சிக்கலை மிக இலகுவாக, முதிர்ச்சியாக, பக்குவமாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். எவர் மனதும் புண்படாத வகையில், சாதியவாதிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை எடுத்து தமிழ்ச் சமூகத்திற்கு கொடையாக அளித்திருக்கிறார்கள் நம்முடைய மாரி செல்வராஜ் அவர்களும், பா.இரஞ்சித் அவர்களும்.

கலைத்துறையின் வாயிலாக இவர்களால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். “பரியேறும் பெருமாள்” அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியிருக்கிறது”.

திரு.சீமான் (நாம் தமிழர் கட்சி),

“நிறைய படம் பார்த்து விட்டு இது படமல்ல பாடம் என்று சொல்வோம். ஆனால், இந்த “பரியேறும் பெருமாள்” படம் பார்க்கும் போது, அவையெல்லாம் எவ்வளவு பொய்யான வார்த்தைகள் என்பது புரிகிறது. உண்மையிலேயே அப்படி சொல்ல வேண்டுமெனில் இந்த படத்தை சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் திரையில் ஒரு புரட்சியை இந்தப் படம் செய்திருக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய வயது, அனுபவம் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஆகச்சிறந்த படைப்பை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார்.

மிகப்பெரிய பெரிய தாக்கத்தையும், வலியையும் இந்தப்படம் கடத்தி இருக்கிறது. ஒரு படைப்பாளியாக மாரி செல்வராஜும், ஒரு தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நம் தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை பிள்ளைகள் நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்”.

திரு.ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி),

“உண்மையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. இப்படி ஒரு அபூர்வமான திரைப்படத்தை தயாரித்த தோழர் பா.இரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படத்தின் கடைசிக் காட்சியைத் தவிர, முதல் காட்சியிலிருந்து சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதிய வன்மங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். சாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்களின் மரணங்களை ஒரு பாடலின் வழியே காட்டிவிட்டு, இறுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் உண்மையில் பாராட்டிற்குரியது. திரைப்படம் தயாரிப்பது என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்ட இந்த காலத்தில், இதுபோன்ற நேர்த்தியான படைப்பைத் தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் ஆகியோரை பாராட்டுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்”.

திரு.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி),

“தமிழ்ச் சமூகம் முற்போக்கு பேசக்கூடியதாக இருந்தாலும், அது எப்படிப்பட்ட சாதிய சமூகமாக இருக்கிறது என்பதை இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம் மிக எதார்த்தமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது. திரைப்படங்கள் வாயிலாக எது எதையோ சமூகத்தில் திணித்துக் கொண்டிருக்கிற இந்த சூழலில், இந்தப் படம் மிக முக்கியமான கருத்தினைத் தாங்கி வந்துள்ளது. இதனை துணிந்து தயாரித்த இயக்குநர் பா. இரஞ்சித் அவர்களுக்கும், தன் மண்ணில் நடந்த சாதிய கொடுமைகளை பதிவு செய்த அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தின் வாயிலாக மனிதம் காக்கப்பட வேண்டும், மனிதம் போற்றப்பட வேண்டும்”.

ஆக மொத்தத்தில் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை
அனைத்து தளத்திலும் உலுக்கியிருக்கிறான், பரியேறும் பெருமாள்.

More Articles
Follows