அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழப்பு.. 73 ஆண்டுகள் தீராத பிரச்சனை…; கமல் கண்டனம்

அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழப்பு.. 73 ஆண்டுகள் தீராத பிரச்சனை…; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanசில தினங்களுக்கு முன் காஞ்சிபுரம் அருகே, அலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால் வேறு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார் அரசு பெண் ஊழியர் சரண்யா. (வயது 24)

அப்போது தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வேளாண்மை துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இவரின் அலுவலகத்தில் (வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கில்) கழிப்பிட வசதி இல்லாத நிலையில் அவதிப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மரணம் குறித்து மநீம தலைவர் கமல் கூறியுள்ளதாவது…

“இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை.

அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும்.

என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan on TN govt employee dies slipping into septic tank

காரைக்கால் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா.. தனுசு ராசி டூ மகர ராசி..; ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதி.!

காரைக்கால் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா.. தனுசு ராசி டூ மகர ராசி..; ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thirunallar kovil sani peyarchiகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயம்.

இந்த ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும் விழா நடைபெறவுள்ளது.

வரும் டிசம்பர் 27-ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

இதனால் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்னும் 2 வாரத்தில் (டிசம்பர் 27ஆம்) தேதி நடைபெற உள்ளது.

இதனையொட்டி சனிப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தலைமையில் நடைபெற்றது.

எனவே பக்தர்கள் www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

அந்த படிவத்துடன் அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Pre-registered people only allowed inside the Thirunallar temple during Sani peyarchi

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா.; ஹைதராபாத்தில் தனிமை.. அப்டேட் கொடுத்த ராதிகா & வரலட்சுமி

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா.; ஹைதராபாத்தில் தனிமை.. அப்டேட் கொடுத்த ராதிகா & வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarathkumarதெலுங்கு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் சரத்குமார் ஹைதராபாத் சென்றார்.

அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து சரத்குமார் மகள் வரலட்சுமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது..

அப்பா சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று தெரிய வந்துள்ளது. அவர் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். இது குறித்து அப்டேட் கொடுக்கிறேன்..நன்றி” என பதிவிட்டுள்ளார்.

சரத்குமார் மனைவி ராதிகாவும் இதுபோல பதிவிட்டுள்ளார்.

Actor Sarathkumar tests positive for covid 19

#VIJAYRuledTwitter2020… ட்விட்டரை அதிர வைத்த விஜய்யின் ‘மாஸ்டர்’ செல்ஃபி

#VIJAYRuledTwitter2020… ட்விட்டரை அதிர வைத்த விஜய்யின் ‘மாஸ்டர்’ செல்ஃபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijay Selfieலோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ பட சூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற போது நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது.

இதனால் படப்பிடிப்பிலிருந்து வருவான வரித்துறை அதிகாரிகளால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் விஜய்.

இது அவரது ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த சோதனைகளுக்கு பின்னர் மீண்டும் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்.

இதனால் ஏராளமான ரசிகர்கள் தினமும் விஜய்யைப் பார்க்க கூடினர்.

அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் நின்ற பஸ் மீது ஏறி ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்தார் விஜய்.

அதை தன் அதிகாரபூர்வ ட்விட்டரில் பதிவிட்டார். அந்த போட்டோ வைரலானது.

ரசிகர்கள் மட்டுமன்றி, பிரபலங்களும் ரீட்வீட் செய்து பகிர்ந்தனர்.

இதனை விஜய் ரசிகர்கள் #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேகில் கொண்டாடினர்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டிலேயே அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்ட் இதுதான் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது வரை இந்த செஃல்பி ட்வீட் 1 லட்சத்துக்கு 60 ஆயிரத்துக்கும் அதிகமான முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தளபதி விஜய் ரசிகர்கள் #VIJAYRuledTwitter2020 என ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Vijay’s selfie with fans most retweeted tweet of 2020 in india

மில் தொழிலாளி மகளாய் பிறந்து இந்தியாவை அசத்திய உமா பிரேமனின் பயோபிக்..; ‘டிராபிஃக் ராமசாமி’ பட இயக்குனர் இயக்குகிறார்

மில் தொழிலாளி மகளாய் பிறந்து இந்தியாவை அசத்திய உமா பிரேமனின் பயோபிக்..; ‘டிராபிஃக் ராமசாமி’ பட இயக்குனர் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Uma Premanஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய உமா பிரேமனின் வாழ்க்கை திரைப்படமாகிறது.
ஏறக்குறைய இரண்டு லட்சம் டயாலிசிஸ்கள், இருபதாயிரத்திற்கும் மேலான இதய அறுவை சிகிச்சைகள், நூற்றுக்கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடங்கள், நாட்டிலேயே குறைந்த விலையில் வீடுகள் என பல எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் உமா பிரேமன்.
இந்திய குடியரசு தலைவர் தன் மாளிகையில் விருதும், விருந்தும் கொடுத்து கெளரவித்த பெண்மணிகளில் இவரும் ஒருவர்.
இப்படி பல சாதனைகளை செய்த இவரின் அசாதாரணமான வாழ்க்கையே தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பயோபிக் திரைப்படமாகிறது.
இப்படத்தை டிராபிஃக் ராமசாமி படத்தை இயக்கிய விக்னேஸ்வரன் விஜயன் இயக்குகிறார்.
இதை பற்றி அவர் கூறும் போது…
‘சகமனிதனை நேசிப்பதை விட ஆகசிறந்த தத்துவமோ, செயலோ எதுவுமில்லை என எண்ணுகிறேன்.
சுற்றியுள்ளவர்கள் தன்னை வேதனைக்குள்ளாக்கினாலும் அவர்களுக்கு அதீத அன்பையே பரிசளித்திருக்கிறார் உமா பிரேமன் அவர்கள்.
இப்படம் பல பேருக்கு உத்வேகமளிக்கும் என நம்புகிறேன்’

Uma Preman biopic to be directed by Vigneshwaran Vijayan

SPB முதன்முறையாக பாடிய MGR-ன் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை ரீமிக்ஸ் செய்த இசையமைப்பாளர் சத்யா

SPB முதன்முறையாக பாடிய MGR-ன் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை ரீமிக்ஸ் செய்த இசையமைப்பாளர் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director sathyaஇசையமைப்பாளர் சி.சத்யா இந்த வருடம் ரொம்ப பிசி.
அவர் கைவசம் பத்துப் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.

அவருடன் ஓர் உரையாடல்….

நான் இசையமைத்த ‘நாங்க ரொம்ப பிசி’ படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இயக்குநர் பத்ரியின் ‘ஆடுகிறான் கண்ணன்’ தொலைக்காட்சித் தொடர் மூலம்தான் நான் இசையமைப்பாளரானேன். அதன்பின் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.

‘நாங்க ரொம்ப பிசி’ படத்தின் மூலம் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்து வேலை செய்தோம். படத்தில் இரண்டு பாடல்கள், ஒன்று கானா பாடல் இன்னொன்று மூட் சாங். இரண்டும் நன்றாக அமைந்திருந்தன.

இந்தப் படம் தொடங்கி நாற்பத்தைந்து நாட்களில் படம் வெளியாகிவிட்டது. முதலிலேயே பின்னணி இசைக்கு ஒரு வாரம்தான் நேரம் என்று சொல்லிவிட்டார்கள்.

நகைச்சுவைப் படம் என்பதால் படம் நெடுக பின்னணி இசைக்கு அதிக வாய்ப்பு இருந்தது. அதனால் லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் வைத்து பின்னணி சேர்க்கத் திட்டமிட்டு அதற்கு தயாராக இருந்தேன்.

பத்துநாட்களுக்குள் எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுத்தேன். அவ்வளவு நாட்களும் தூங்காமல் இரவு பகலாக வேலை செய்தோம்.

இந்தப்படம், நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியானதால் அதிகம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் குறைவாகவே இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியானால்தான் என் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது கவனம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது, த்ரிஷா நடிப்பில் லைகா தயாரிப்பில் சரவணன் இயக்கியுள்ள ‘ராங்கி’ தயாராகிவிட்டது. எழில் சார் ஜீ.வி.பிரகாஷ் கூட்டணியில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘தீதும் நன்றும்’, ஆரி நடித்துள்ள ‘அலேகா’, ‘அரண்மனை- 3’ ஆகியன இருக்கின்றன.

‘ராங்கி’ படத்தின் பாடல் விரைவில் வெளியாகவிருக்கிறது.

‘அரண்மனை- 3’ படத்தில், சுந்தர் சி சார் படங்களில் இடம்பெறும் கொண்டாட்டமான பாடல்கள் மற்றும் மாஸ் பாடல்கள் இருக்கும். மெலடி பாடலும் இருக்கிறது. மொத்தம் ஐந்து பாடல்கள். மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன.

‘ஆயிரம் ஜென்மங்கள்’, எழில் சார் படம் என்பதால் வேலை செய்கிறோம் என்கிற எண்ணமில்லாமல் குடும்பத்தில் ஒருவரோடு பேசிக்கொண்டிருப்பது போல் பேசிப் பாடல்கள் உருவாக்கினோம்.

ஒவ்வொரு பாடலுக்கும் ‘சூப்பர் ப்ரோ, கலக்கிட்டீங்க ப்ரோ’ என்று ஜீ.வி. மெசேஜ் அனுப்பினார்.

கொரோனா காலத்தில் கொரோனா என்ற சொல்லைச் சொல்லாமலே ‘விழித்திரு தனித்திரு’ என்கிற பாடலை உருவாக்கினேன்.

அஜீத் பிறந்த நாளுக்காக ஒரு பாடல், பெண் காவலர்களுக்காக ஒரு பாடல் ஆகியன உருவாக்கினேன்.
இன்னும் சில பாடல்கள் தயாராக இருக்கின்றன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.

அமேசான் இணையத்தில் பிரபல பாடல்களின் ரீமிக்ஸ் தொடர் போல் வெளியிடவிருக்கிறார்கள். அதற்காக எம்ஜிஆர் நடிப்பில் கேவிமகாதேவன் இசையில் எஸ்பிபி பாடிய முதல்பாடலான ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை கெடுக்காமல் ரீமிக்ஸ் செய்திருக்கிறேன். அது வெளியாகும்போது பெரிய வரவேற்பு இருக்கும்.

2021 ஆம் ஆண்டின் திரைப்பாடல்கள் மற்றும் தனிப்பாடல் தொகுப்புகளில் சத்யாவின் பங்கு பெரிதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Aayiram Nilave Vaa remix by music director Sathya

More Articles
Follows