நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது..; பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம்

நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது..; பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை என அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் 32 பேர் விடுதலையாகின்றனர். 12 பேர் வழக்கு காலத்தில் இறந்தே விட்டனர் என்பது வேறுக்கதை

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

‘நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும், அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண்போகக்கூடாது’’ என பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan condemns BabriMasjid case Verdict

இளம்பெண் பாலியல் வன்கொடுமை.: மோடி மட்டும்தான் நடக்கனுமா.? கீழே தள்ளப்பட்ட ராகுல் காந்தி..; கைது செய்த போலீசார்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை.: மோடி மட்டும்தான் நடக்கனுமா.? கீழே தள்ளப்பட்ட ராகுல் காந்தி..; கைது செய்த போலீசார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rahul gandhi arrestஉத்தரப் பிரதேச மாவட்டத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சண்ட்பா பகுதியில் வயலில் தாயுடன் வேலை செய்து கொண்டிருந்தார் 19 வயது இளம்பெண்.

அந்த பெண்ணை 4 இளைஞர்கள் தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தாக்கினர்.

இதனையடுத்து மருத்துவமனையில் 15 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு இளம்பெண் உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு உடலை கொடுக்காமல் இறுதி மரியாதைக்கு அவகாசம் அளிக்காமல், சடலத்தை போலீசாரே எடுத்துச் சென்று நள்ளிரவில் எரித்தனர். அவர்களின் மொழியில் சொன்னால் தகனம் செய்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. (இருந்தும் என்ன ஆகப் போகிறது.?)

இந்தநிலையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்றார்.

அவருக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில்… யமுனா விரைவுச் சாலையில் நடந்தே சென்றால்.

அப்போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

காவல்துறை எதிர்ப்பையும் மீறி சென்றபோது காவல்துறை அதிகாரி ராகுல் காந்தியின் நெஞ்சின் மீது கைவைத்து தள்ளிவிட்டார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதுகுறித்து தெரிவித்த ராகுல் காந்தி…

‘காவல்துறையினர் என்னை தள்ளிவிட்டனர். என்னை லத்தியால் தாக்கினர்.

இந்த நாட்டில் மோடி மட்டும்தான் நடந்துச் செல்லனுமா? சாதாரண மனிதன் நடக்கக்கூடாதா?

எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. எனவே நடந்து செல்ல தொடங்கினோம்’ என தெரிவித்தார் ராகுல் காந்தி.

பின்னர், விதிகளை மீறியதாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை உபி. காவல்துறையினர் கைது செய்தனர்.

Rahul gandhi arrested on way to town claims police baton charged him

பிக்பாஸ் 3 சீசனுக்கு கஸ்தூரிக்கு சம்பளம் தரவில்லையா..? விஜய் டிவி விளக்கம்

பிக்பாஸ் 3 சீசனுக்கு கஸ்தூரிக்கு சம்பளம் தரவில்லையா..? விஜய் டிவி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasthuri vijay tvகடந்தாண்டு 2019ல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் கஸ்தூரி.

நிகழ்ச்சி முடிந்து ஓராண்டாகியும் தனக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறியிருந்தார் கஸ்தூரி.

இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக இன்னும் எனக்கு சம்பளம் தரப்படவில்லை.

நான் பிக்பாஸில் கலந்து கொண்டதே, ஆதரவற்ற குழந்தைகளின் ஆப்ரேஷன் செலவுக்காகத்தான்.

நான் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. இதிலும் இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என பதிவிட்டு இருந்தார்.

வருகிற அக்டோபர் 4-ம் தேதி தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் கஸ்தூரி தனக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என்று கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதில், “எங்கள் டிவி நிகழ்ச்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் கலந்து கொள்பவர்களுக்கு அதற்கான சம்பளத்தை கொடுத்து விடுவது வழக்கம்.

அதைப்போல நடிகை கஸ்தூரி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதமே கொடுக்கப்பட்டது.

ஆனால் அவருடைய ஜிஎஸ்டி பதிவு முறை பொருந்திப்போகாத காரணத்தால் அதை மட்டும் நிறுத்தி வைத்துள்ளோம்.

கஸ்தூரி அதற்கான ஆவணங்களை கொடுப்பதற்காக காத்திருக்கிறோம். அவை ஒப்படைத்த பின்னர் அதற்கான தொகையையும் கொடுத்துவிடுவோம்.”

இவ்வாறு விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Vijay Tv replies to Actress Kasturi

சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி & வித்யா பிரதீப் இணையும் ‘இன்ஃபினிட்டி’

சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி & வித்யா பிரதீப் இணையும் ‘இன்ஃபினிட்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Infinityமென்பனி புரோடக்‌ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இன்ஃபினிட்டி என பெயரிடப்பட்டுள்ள புதிய திரைபடத்தில் “நட்டி” கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக உருவாகிக்கொண்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்குகிறார்.

நட்டி அவர்கள் புதுவிதமான தோற்றத்தில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

உடன் வித்யா பிரதீப், ராமதாஸ் (முனிஸ்காந்த்), மெட்ராஸ் சார்லஸ் வினோத், முருகானந்தம், ராட்சசன் வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் இரண்டாம் கட்ட பட பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரப்பரப்பாக நடந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மென்பனி புரோடக்‌ஷன்ஸ் சார்பாக மணிகண்டனும், ழகரலயா ஃபிலிம் புரோடக்‌ஷன்ஸ் சார்பாக பிரியதர்ஷினியும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இசை : டாம் ஜோ
ஒளிப்பதிவாளர் : விஷ்ணு கே ராஜா
படத்தொகுப்பு : எஸ்.என். ஃபாசில்
ஸ்டண்ட் : சில்வா

Natty and Vidya Pradeep joins for Infinity

18 கேரக்டர்கள்.. ‘பவுடர்’ பூசிய போலியான முகங்கள்..; விஜய் ஸ்ரீயின் அடுத்த அதிரடி

18 கேரக்டர்கள்.. ‘பவுடர்’ பூசிய போலியான முகங்கள்..; விஜய் ஸ்ரீயின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vidya Pradeepசாருஹாசன் நடித்த ‘தாதா 87’ வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர், ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா, மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை இன்று துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபாலா, வையாபுரி , ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக நாயகியர்களும் நடிக்கிறார்கள். த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது.

கொரொனா வைரஸூக்காக மக்கள் மூகமடி அணிந்து செல்வது இந்த காலம்.

ஆனால் பெரும்பாலான மக்கள்
பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும்18 விதமான கதாபாத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர்.

படத்தில் வரும் காதாபத்திரங்களை நம் வாழ்க்கையில் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருப்போம் அல்லது கடந்து வந்திருப்போம் .

பவுடர் முகத்திற்கு மட்டும் அல்ல உடலுக்கும் கேடுதான். ஆம், போதைப்பொருள் வடிவத்தில்‌ என்பது நிதர்சனமான உண்மை.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைத்ராபாத்தில் நடைபெறும்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் RP (ராஜா பாண்டி) . இவர் தாதா 87 படத்தின் முலம் அறிமுகம் ஆகி
பலரது பாராட்டுக்களையும் பெற்றவர்.

தாதா 87 படத்தில் இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அரசு வழிகாட்டுதலின் பெயரில் படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டு உள்ளதாக படத்தயாரிப்பாளர் ஜெய ஸ்ரீ விஜய் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமைகள் சீரானதும் பவுடர் பொங்கல் வைக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Director Vijay Sri G’s next film is titled Powder

‘பெல்லி சூப்புலு’ ரீமேக்.; ஹரீஷ் கல்யாண் & ப்ரியா பவானி சங்கர் இணையும் ‘ஓ மணப்பெண்ணே’

‘பெல்லி சூப்புலு’ ரீமேக்.; ஹரீஷ் கல்யாண் & ப்ரியா பவானி சங்கர் இணையும் ‘ஓ மணப்பெண்ணே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோம் – காம் எனும் ரொமான்ஸ் காமெடி வகை படங்களுக்கு இளைஞர்கள் மற்றும் குடும்பங்களிடையே, எல்லாக் காலத்திலுமே, சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த வகை படங்கள் ரொமான்ஸ், காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயங்களால் எல்லைகள் கடந்து உலகம் முழுக்க அனைத்து வயதிலிருக்கும் மக்களையும் எளிதாக ஈர்த்து விடுகிறது.

அந்த வகையில், தெலுங்கில் வெளியாகி பெரு வெற்றியடைந்த ரொமான்ஸ் காமெடி படமான “பெல்லி சூப்புலு” படம் தமிழில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ரீமேக்காகிறது.

இப்படத்தை A Studios சார்பில் தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை SP Cinemas மேற்கொள்கின்றனர். இப்படத்திற்கு தற்போது “ஓ மணப்பெண்ணே” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் படமாக உருவாகி வரும் இப்படத்தில் தமிழில் மேலும் ஒரு ஆச்சர்யமாக மற்றுமிரு நிறுவனங்கள் இப்படத்துடன் கைகோர்த்துள்ளன. Madhav Media மற்றும் Third Eye Entertainment நிறுவனம் தமிழில் இப்படத்தின் நெகடிவ் உரிமையை பெற்றிருக்கிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் தற்போது இளைஞர்களின் இதய நாயகனாக வளர்ந்து வரும் ஹரீஷ்கல்யாணை ஹிரோவாக வைத்து பெரும் நம்பிக்கையுடன் படத்தை தயாரித்துள்ளார்கள்.

இது படத்திற்கு படம் வளர்ந்து வரும் ஹரீஷ் கல்யாணின் பிரபல்யம் மீதும் மற்றும் படத்தின் கதை மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

மேலும் சமீபத்தில் வெளியான “தாராளபிரபு” படம் விமர்சன ரீதியிலும் சரி, வர்த்தக ரீதியாகவும் சரி, பெரு வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் ஹரீஷ் கல்யாணின் நடசத்திர அந்தஸ்தை பல படிகள் உயர்த்தியுள்ளது. இது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

தயாரிப்பாளர்கள் Madhav Media நிறுவனர் பாலாஜி கப்பா மற்றும் Third Eye Entertainment நிறுவனர் தேவராஜுலு மார்க்கண்டேயன் ஆகியோர் நடிகர் ஹரீஷ் கல்யாணின் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படம் மூலம் பெரு வெற்றியை அடைந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

தயாரிப்பாளர்கள் கொனேரு சத்யநாரயணா மற்றும் ரமேஷ் வர்மா பென்மட்ஷா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இயக்குநர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்குகிறார்.

இவர் இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வசனங்களை தீபக் சுந்தர்ராஜன், எழுதியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கிருபாகரன் செய்கிறார். கலை இயக்கத்தை சதீஸ்.K செய்துள்ளார். ஒலிக்கலவையை Knack Studios செய்துள்ளனர். படத்தின் ஒருங்கிணைப்பை முரளி கிருஷ்ணா செய்கிறார். க்வான் சவுத் ஏஜென்ஸி பார்டனராக பணியாற்றி உள்ளனர். தயாரிப்பு பணிகளை SP Cinemas மேற்கொண்டுள்ளனர்.

தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் அறிவிப்பு பற்றி மிக விரைவில் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

oh mana penne first look

Harish Kalyan and Priya Bhavani Shankar new film is title Oh Mana Penne

More Articles
Follows