ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் பிக்பாஸ்2; கமல் மீது வக்கீல் புகார்

kamal haasanவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி வெற்றி பெற, அதன் இரண்டாம் பாகத்தையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சி மீது போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இநத் வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சர்வாதிகாரி டாஸ்க் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பது போன்று உள்ளது என்று கூறி சென்னையை சேர்ந்த வக்கில் லூயிசாள் ரமேஷ் என்பவர், கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் லூயிசாள் ரமேஷ் கூறியிருப்பதாவது…

விஜய் டிவியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கமல் தனது மக்கள் நீதி மையத்தின் கட்சியை வளர்க்க எடுத்துள்ள யுக்தி தான் இந்த நிகழ்ச்சி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

இவருடைய ஏற்பாட்டின் படி இந்தவாரம் சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, சர்வாதிகாரியாக நடிக்கிறார்.

இவர் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களை கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார். இந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே இந்த தொடரை நடத்தும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனமும், கமலும் கூறுகின்றனர்.

அதைத்தான் இவர்கள் நடித்து காட்டுகின்றனர்.

ஜூலை 31 அன்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ரித்விகா என்ற போட்டியாளர், “இந்த டாஸ்க் வடநாட்டிலிருந்து வந்த ஐஸ்வர்யாவிற்கு தெரியாது, தமிழ்நாட்டில் இதற்கு முன் சர்வாதிகாரி ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என இவர்களுக்கு தெரியாது” என கூறுகிறார்.

இந்த டாஸ்க் முடிந்தவுடன் கமலும், சனிக்கிழமை அன்று, தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல பேசுவார்.

தமிழகத்தை அமைதி பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக, சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தடை செய்வதோடு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Latest Post