சர்வதேச ஆளுமைகள் பங்கேற்கும் கேரள இலக்கியத் திருவிழாவில் கமல்ஹாசன்

சர்வதேச ஆளுமைகள் பங்கேற்கும் கேரள இலக்கியத் திருவிழாவில் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில், டி.சி. கிழக்கம்முறி அறக்கட்டளை சார்பில் ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மாபெரும் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கியத் திருவிழாவாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், பொருளியல் நிபுணர்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

இதில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர், இயக்குநர்,
தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர் என கலைத் துறையிலும், அரசியல் துறையிலும் பங்காற்றிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் பங்கேற்கிறார்.

அவர் வரும் 15-ம் தேதி மாலை 4 மணியளவில் `நான் கண்டறிந்த அரசியல்’ (Finding my politics) என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க நிகழ்வான, மிகப் பெரிய இலக்கியத் திருவிழாவில் கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்பது தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் ஒன்றாகும்.

இந்தியாவின் ஒரு சிறந்த கலை ஆளுமையாகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று, உரை நிகழ்த்துவார் என்று விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, தான் தொகுத்து வழங்கும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், மலையாளத்தின் பிரபல எழுத்தாளுமைகளையும், அவர்களது படைப்புகளையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தின் பாரம்பரியக் கலைகள், இலக்கியம், திரைத்துறை ஆகியவற்றின் மீது ஆர்வம்கொண்ட கமல் ஹாசன் அவர்கள் கேரளாவின் இலக்கிய ஆளுமைகளான பால் ஜக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உள்ளிட்ட பல முன்னணி எழுத்தாளர்களோடு நீண்டகால நட்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

– ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Kamal Haasan attends the Kerala Literary Festival featuring international personalities

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட நிறுவனத்துடன் இணைந்த நடிகர் அடிவி சேஷ்

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட நிறுவனத்துடன் இணைந்த நடிகர் அடிவி சேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பான் இந்திய திரைப்படமாக தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘HIT 2’ எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அடிவி சேஷ்.

இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘G2’ ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கூடாச்சாரி படத்தின் முதல் பாகம், இந்திய அளவில் நடைபெறும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பாகத்தின் கதை சர்வதேச அளவில் நடைபெறுவதாக உருவாக்கப்படுகிறது. இதற்கான கதையை நடிகர் அடிவி சேஷ் எழுதுகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மேஜர்’ எனும் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய வினய் குமார் சிரிகீனீடி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கார்த்திகேயா 2’, ‘மேஜர்’ போன்ற அகில இந்திய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களை வழங்கிய தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வபிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் பீப்பிள் மீடியா ஃபேக்டரி , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ. கே. என்டர்டெய்ன்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், ‘ப்ரீ விஷன்’ எனப்படும் முன்னோட்ட பார்வைக்கான காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதில் நாயகன் சேஷ், சம்பிரதாயமான உடையில் மிடுக்காகவும், ஸ்டைலாகவும் தோன்றி உயர்ந்த கட்டிடத்திலிருந்து கீழே விழும்போது துப்பாக்கியால் சுடுவதை காணலாம். இந்த காட்சிக்காக நடிகர் தன் உடலை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார்.

மேலும் இந்த காணொளியில் நடிகர் சேஷ், இந்தியாவிலிருந்து ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் வரை செல்லும் கூடாச்சாரியின் இறுதி காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இதனை தொடர்ந்து அவரது முதல் தோற்றம், கூடாச்சாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது. ‘G2’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கதையின் காலகட்டம், உருவாக்கம், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, சர்வதேச அளவிலான தொழில்நுட்ப குழுவினரின் திட்டமிடல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படத்தின் உருவாக்கம், எதிர்பார்த்ததை விட அதிகமாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும் என தெரிய வருகிறது.

தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் நடிகர் அடிவி சேஷ் கதை எழுதி, கதையின் நாயகனாக நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட பார்வையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறார்.

Adivi Sesh’s Pan India Movie G2 First Look & Pre-Vision Unleashed

வெடித்தது மோதல்..; விஜய் – அஜித் ரசிகர்களின் மோசமான ட்ரெண்டிங்

வெடித்தது மோதல்..; விஜய் – அஜித் ரசிகர்களின் மோசமான ட்ரெண்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்த நாள் இன்று வந்தது.. ஜனவரி 11ஆம் தேதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரு படங்கள் இன்று வெளியாகிவிட்டன.

இந்த இரு படங்களுக்கும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வந்துள்ளன.

ஆனாலும் பெரும்பாலும் பொதுமக்கள் வாரிசை விட துணிவு நன்றாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாரிசு தான் இந்த பொங்கலில் வின்னர் என விஜய் ரசிகர்களும்… துணிவு படம் தான் பொங்கல் வின்னர் என அஜித் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

மேலும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான கருத்து மோதல்கள் உருவாக தொடங்கி விட்டன.

அஜித் ரசிகர்கள் வாரிசு படத்தை இழிவாக பேசி வருவதும் விஜய் ரசிகர்கள் துணிவு படத்தை இழிவாக பேசி வருவதும் தொடர்ந்து வருகிறது.

மேலும் சிலர் மோசமான கருத்துக்களையும் மீம்ஸ்களையும் பதிவிட்டு எதிரணி படத்தை கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

தங்களுக்கு விருப்பமான நடிகர் படத்தை புகழ்ந்து பேசுவது முறையான ஆரோக்கியமான விவாதம்.. ஆனால் எதிரணி படத்தை இழிவாக பேசுவது நாகரீகம் அற்ற செயலாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The conflict erupted..; Bad trending of Vijay – Ajith fans

JUST IN கருணாநிதி – ஜெயலலிதா ஆதரவுடன் ஆளுநருக்கு எதிராக அமீர் பட போஸ்டர்

JUST IN கருணாநிதி – ஜெயலலிதா ஆதரவுடன் ஆளுநருக்கு எதிராக அமீர் பட போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கருத்து தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சர்ச்சை உருவானது.. மேலும் மு க ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி.

இதனால் வெளிநடப்பு செய்த முதல் ஆளுநர் என்ற பெயரையும் அவர் தட்டிச் சென்றார்.

இது குறித்த விவாதங்கள் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நடிகர் அமீர் தன் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அமீர் நடித்துவரும் உயிர் தமிழுக்கு என்ற பட போஸ்டரில்.. “இது தமிழகம் இல்ல.. தமிழ்நாடு என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மேலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா கட்டவுட்டுகள் மத்தியில் அமீரின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது.

இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்க தயாரித்து இயக்கியுள்ளார் ஆதம் பாவா.

‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Here u go for the another look of
#உயிர்தமிழுக்கு #UyirThamizhukku
#தமிழர்திருநாள் வாழ்த்துகள்?

@directorameer #MoonPictures
@VHouseProd_Offl
@sureshkamatchi @adham_bava @VIDYASAGARMUSIC
@IamChandini @actImmanannachi @actor_marimuthu
@johnmediamanagr
@Dir_Rajkapoor

Aamir released his new movie poster with the support of Karunanidhi-Jayalalitha

மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்து கனவிலும் நினைக்கல

மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்து கனவிலும் நினைக்கல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ‘வலிமை’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் ‘துணிவு’ படத்தில் அஜீத்துடன் இணைந்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய எச் வினோத், அஜித்துடன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் பணியாற்றுவது ஆரோக்கியமானதா அல்லது இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

ஒரு திரைப்படம் என்று வரும்போது, ​​குழு ஒன்றாக வேலை செய்ய வசதியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

H Vinoth says he never thought twice about working with Ajith again

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த பாலிவுட் நடிகர்

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த பாலிவுட் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ‘துணிவு’ படத்தை போனி கபூர் தயாரித்தார், மேலும் ‘நேர் கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நடிகருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது.

அஜித் ஒரு பல்துறை நடிகர் என்றும் அவர் ஒரு நல்ல நண்பர் என்றும் போனி கபூர் கூறினார்.

தற்போது, ​​ஒரு ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர், அஜித் குமாருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.

பேட்டியில் பேசிய அர்ஜுன் கபூர், எதிர்காலத்தில் அஜித்துடனும் மற்ற நட்சத்திரங்களுடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

Famous Bollywood actor says he is open to work with Ajith Kumar

More Articles
Follows