தொகுதி பணி உங்களுக்கு… கூட்டணி பணி எங்களுக்கு..; மநீம நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் கட்டளை

தொகுதி பணி உங்களுக்கு… கூட்டணி பணி எங்களுக்கு..; மநீம நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanஅடுத்தாண்டு 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இதன்பின்னர் இன்று தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் கமலஹாசன்.

இன்று தொடங்கி 3 நாட்கள் எட்டு பகுதிகளாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாம்.

கோவை, மதுரை, கடலூர், நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 100 தொகுதி பொறுப்பாளர்களை கமலஹாசன் இன்று சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய கமல்ஹாசன்..

தேர்தல் கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நீங்கள் தேர்தல் பணி மற்றும் தொகுதி பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். உங்களுடைய பணி மிகவும் கடினமான பணி. அதைச் சிறப்பாக செய்யுங்கள்” என கட்டளை போட்டாராம்.

Kamal Haasan announced not alliance with Dravidan parties at today meeting

சிங்க பாதையா? பூ பாதையா? வேட்டையாட வா தலைவா… தமிழகத்தை அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்

சிங்க பாதையா? பூ பாதையா? வேட்டையாட வா தலைவா… தமிழகத்தை அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini fans political posters tamilnaduநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என 2017 டிசம்பர் 31ல் அறிவித்தார்.

ஆனால் அந்த அறிவிப்பு வந்து 3 ஆண்டுகளாகியும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை.

தற்போது கொரோனா ஊரடங்கு & தன் உடல்நிலை பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் கட்சி அறிவிப்பில் தாமதம் செய்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அவரின் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

இதனையொட்டி ரஜினி விரைவில் அரசியலுக்கு வரவேண்டுமென ரசிகர்கள் தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

அந்த போஸ்டர்களில்…

அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்… இப்போ இல்லன்னா எப்பவுமே இல்ல… ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குத்தான்.. சிங்க பாதையா? பூ பாதையா.? முடிவெடு தலைவா… என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்ட பகுதிகளில்.. ”மக்களின் ரத்தத்தை குடிக்கும் ஓநாய் கூட்டத்தையும் கழுகு கூட்டத்தையும் வேட்டையாட சிங்கப்பாதையில்தான் செல்ல வேண்டும்”… ”மக்களாட்சி இனிதே ஆரம்பம்” என்றெல்லாம் ரஜினி படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

என்ன செய்ய போகிறார் தலைவர்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Rajini fans put up posters all over Tamil Nadu

அர்ச்சனாவை அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சிங்கர் சுசித்ரா

அர்ச்சனாவை அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சிங்கர் சுசித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே நடிகை ரேகா வெளியேறினார்.

முன்னதாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக விஜே அர்ச்சனா அந்த வீட்டுக்குள் சென்றார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பாடகி சுசித்ரா சென்றுள்ளார்.

இன்றைய நிகழ்ச்சியில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார். இதற்கான புரொமோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவர் சுசித்ரா.

அவரின் வரவு அங்கு என்ன விளைவுகளை ஏற்படுத்த போகிறதோ? என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.

Singer suchitra makes her entry in Bigg Boss 4 Tamil

suchitra in bigg boss

கனடா மாப்பிள்ளையை மணக்கும் ‘பிக் பாஸ்’ லொஸ்லியா?

கனடா மாப்பிள்ளையை மணக்கும் ‘பிக் பாஸ்’ லொஸ்லியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

losliya marriageபிக் பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்

இலங்கையில் உள்ள டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா.

இவர் பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்கு இங்குள்ள தமிழர்களிடையே பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் கவினும், லாஸ்லியாவும் நெருக்கமாக பழகினர்.

இதனால் இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தபின்னர் இருவரும் தனித்தனியே தங்கள் வேலைகளில் பிஸியாகி விட்டனர்.

தற்போது ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா.

இந்நிலையில் லாஸ்லியாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம்.

தங்களது குடும்ப நண்பர் ஒருவர் கனடாவில் இருக்கிறாராம். அவரின் மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லாஸ்லியாவும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Bigg Boss Losliya to get married soon

தீபாவளிக்கு ‘இரண்டாம் குத்து’..; களத்தில் சந்திக்க MGR மகனும் வர்றார்..

தீபாவளிக்கு ‘இரண்டாம் குத்து’..; களத்தில் சந்திக்க MGR மகனும் வர்றார்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irandam kuthuகொரோனா ஊரடங்கால் கிட்டதட்ட 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன.

இந்த நிலையில் வருகிற நவம்பர் 10 முதல் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

ஆனால் 50% பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க தியேட்டரில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

எனவே தீபாவளி திருநாளை (நவம்பர் 14) தியேட்டரில் கொண்டாட திரையுலகம் தயாராகி வருகிறது.

இதனால் தற்போது வெளியீட்டுக்கு தயாராகவுள்ள சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர் சில தயாரிப்பாளர்கள்.

அதன்படி இளைஞர்களை மட்டுமே நம்பி படமெடுத்துள்ள சந்தோஷ், தான் இயக்கி நடித்துள்ள இரண்டாம் குத்து படத்தை தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளார்.

இத்துடன் ஜீவா அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் என்ற படமும் சத்யராஜ் சசிகுமார் இணைந்துள்ள எம்ஜிஆர் மகன் படமும் திரைக்கு வரத் தயாராகி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இத்துடன் இன்னும் சில படங்களும் தீபாவளி ரேசில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Irandam Kuthu to clash with MGR magan

‘பாட்ஷா’ எப்போ எப்டின்னு தெரியல?.; ஆனா ‘பாட்ஷா’ வில்லன் அரசியலுக்கு வர்றார்..

‘பாட்ஷா’ எப்போ எப்டின்னு தெரியல?.; ஆனா ‘பாட்ஷா’ வில்லன் அரசியலுக்கு வர்றார்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor devanரஜினிகாந்துடன் பாட்ஷா, விஜயகாந்துடன் ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் தேவன்.

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

தற்போது தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் தனிக்கட்சி ஒன்றை துவங்கவுள்ளாராம் தேவன்.

வருகிற கேரளா சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார்.

தன் கட்சியில் தற்போதை அரசியல்வாதிகளுக்கும் பிரபலங்களுக்கும் இடமில்லையாம்.

திறமை வாய்ந்த புதியவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

மேலும் இவர் தனது சொந்த தொகுதியான திருச்சூரில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம்.

பொதுவாக மலையாள நடிகர்கள் கேரளா அரசியலில் ஜொலிப்பதில்லை. ஆனால் இவர் தனிக்கட்சி ஆரம்பித்திருப்பது அங்குள்ள நடிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளதாம்.

கடந்த 1985ல் மலையாளத்தில் ‘வெள்ளம்’ என்ற படத்தை தயாரித்து அதன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2020ல் இறுதியாக மோகன்லால் நடித்த ‘பிக் பிரதர்’ என்ற படத்தில் நடித்திருந்தார் தேவன்.

Baadshah fame Devan started a political party

More Articles
Follows