பழ. கருப்பையா பொன்ராஜ் ஸ்ரீப்ரியா.: மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள்

பழ. கருப்பையா பொன்ராஜ் ஸ்ரீப்ரியா.: மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

26-06-2021 நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.

அப்போது பேசியதாவது…

கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன்.

அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன்.

புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சில அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் வெளியாகும்.

புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கனவே நமது கட்சியின் வேட்பாளர்களாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டவர்கள்தான்.

எனினும் அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

சிவ. இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.

செந்தில் ஆறுமுகம் தகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர்.

’நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி’ மலரவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமை சட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.

சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவராகத் திகழ்பவர்.

ஃபுட்கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

புதிய நியமனங்கள்:
1. திரு. பழ. கருப்பையா – அரசியல் ஆலோசகர்
2. திரு. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
3. திரு. ஏ.ஜி. மெளரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
4. திரு. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5. திரு. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
6. திரு. சிவ. இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
7. திரு. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
8. திருமதி ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்
9. திரு. ஜி. நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப்பண்பு மிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்குங்கள்.

இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்து கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றார்.

நன்றி.
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Kamal announces Makkal Needhi Maiam Party new Posting list

உலகத் தமிழர்கள் நன்கொடையில் உருவான பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படம் ‘மேதகு’

உலகத் தமிழர்கள் நன்கொடையில் உருவான பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படம் ‘மேதகு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Methaguதமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான வே. பிரபாகரன் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் உலகத்தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகின்றார் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் படம் பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர்.

இந்த திரைப்படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. மேலும் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு இளங்கோவன் மற்றும் திரை வண்ணம் விநாயகம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை மெருகூட்டியுள்ளனர்.

இந்த திரைப்படத்தினை தஞ்சை குமார் மற்றும் சுமேசு இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர்.

தயாரிப்பு நிர்வாகத்தில் ஈஸ்வர் பாட்சா மற்றும் சதீசு இருவரும் துணைப் புரிந்துள்ளனர்.

இந்த திரைப்படம் BS value என்கின்ற இணையவெளி திரையில் இன்று (OTT) ஜூன்-25 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.

இந்த மேதகு திரைப்படத்தின் சிறப்பு காட்சியினை பார்வையிட்ட நடிகர் சத்யராஜ், நடிகர் ராஜேஷ், இயக்குனர் பொன்வண்ணன், இயக்குனர் சேரன், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் கவுதமன், மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பினை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மேதகு திரைப்படம் வெளியாகும் BS value OTT தளம் ஏற்கனவே பிரபலமான Black sheep என்கின்ற நிறுவனத்தின் Pay Per View என்கின்ற வசதியின் கீழ் முதன்முறையாக வெளிவரவிருக்கின்றது.

தமிழர்களின் வரலாற்றை கலைவடிவில் கண்முன்னே படம் பிடித்துக் காட்டப்போகும் ‘மேதகு’ போன்ற பல்வேறு படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது பாராட்டுக்குரியது.

Prabakaran’s Methagu biopic will release in OTT

அசோக் ஷீலா சாந்தினி இணையும் ‘மாயத்திரை’ தியேட்டர்களில் ரிலீஸ்

அசோக் ஷீலா சாந்தினி இணையும் ‘மாயத்திரை’ தியேட்டர்களில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maayathiraiபிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார்.

டூலெட், திரௌபதி, மண்டேலா படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் S .N அருணகிரி இசைமைக்கிறார் .

V.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு சென்சார் குழுவினரால் UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது .

திரையரங்குகள் திறந்த சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வர இருக்கிறது .

மாயத்திரை -இது ஒரு பேய் படம் . ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .

இந்தப் படத்தில் அதிகமாக பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம். இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.

நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன்

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – தி.சம்பத் குமார்
தயாரிப்பு – V.சாய்
இசை – S .N அருணகிரி
ஒளிப்பதிவு – இளையராஜா
கலை இயக்கம் – பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் – ராதிகா
சண்டைப்பயிற்சி – பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் – அசோக்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்.

Ashok and Shanthini starrer Maayathirai gets theatrical release

விஜய்-அஜித் சம்பளத்தை நெருங்கும் தனுஷ்.; இனிமே வேற லெவல்தான்..!

விஜய்-அஜித் சம்பளத்தை நெருங்கும் தனுஷ்.; இனிமே வேற லெவல்தான்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இந்த செய்தியை சில தினங்களுக்கு முன் நம் இணையதளத்தில் பார்த்தோம்.

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும்.

இப்படத்தை நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4 ) மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது .

இது PAN INDIA படமாக உருவாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க தனுஷுக்கு ரூ 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

தற்போது தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் வரை சென்றுவிட்டதால் இந்த தொகை என கூறப்படுகிறது.

இதன் மூலம் அஜித் விஜய்யின் சம்பளத்தை தனுஷ் நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush salary for his telugu debut film

பிரேம்ஜி கூட இருந்தும் குடிக்காம இருப்பது பெரிய விஷயம்..; சீக்ரெட் உடைத்த சிம்பு

பிரேம்ஜி கூட இருந்தும் குடிக்காம இருப்பது பெரிய விஷயம்..; சீக்ரெட் உடைத்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuஎந்த துறை என்றாலும் 80% மது ப்ரியர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

பொழுதுபோக்கு நிறைந்த உலகம் சினிமா என்பதால் அதிலுள்ள நட்சத்திரங்கள் பலரும் குடிப்பதுண்டு. மதுவை தொடாத நட்சத்திரங்களும் இங்குண்டு.

நடிகர் சிம்பு முன்பெல்லாம் குடிக்கும் பழக்கம் கொண்டவர்தான்.

கடந்த இரண்டு ஆண்டாக மது அருந்தவில்லை எனவும் குடி பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என சமீபத்தில் நடிகர் சிம்பு சொல்லி இருந்தார்.

அத்துடன் பிரேம்ஜி போன்றோர் உடனிருந்தும் ஒரு வருடமாக குடிக்காமல் இருப்பது பெரிய விஷயம் என சிம்பு கலாய்க்கும் வகையில் சொல்லியிருந்தார்.

இதனை கிண்டலாக கண்டிக்கும் வகையில்… “நான் சிவனேன்னு தான் போய்ட்டு இருந்தேன்.. ஏன்டா என்னைய இழுக்குறீங்க..” என வடிவேலு ஒரு படத்தில் சேறு பூசிய முகத்துடன் டீ கடை அருகே உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் பிரேம்ஜி.

Premgi Amaren reacts to a troll on Silambarasan quitting alcohol

நடிகை நிவேதாவுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்.; உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவு

நடிகை நிவேதாவுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்.; உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ்.

அவ்வப்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரும் பிரபுதேவாவும் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இவருக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

அதில், ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலம் உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார்.

அதை திறந்தபோது கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் நிவேதா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் கூறியிருப்பதாவது..

“உணவு டெலிவரி நிறுவனம் மற்றும் உணவகங்கள் என்ன தரத்தை பின்பற்றுகின்றன.

எனக்கு இரண்டு முறை உணவில் கரப்பான் பூச்சி வந்துள்ளது.

அந்த உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்தும் நிவேதா பெத்துராஜ் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனையடுத்து நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பேரில் பெருங்குடியில் உணவகம் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்குள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்ய அந்த உணவகத்திற்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

Actress Nivetha Pethuraj complains food delivery company

nivetha pethuraj

More Articles
Follows