போலீஸ் மீது மக்கள் புகார்; அதிமுக திமுக கட்சிகளை அகற்ற வேண்டும் என கமல் ஆவேசம்

kamal haasanசாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு சம்பந்தபட்ட காவலர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் இதற்கு சாட்சியாக இருந்த போலீஸ் ரேவதீக்கு போலீசாரே பாதுகாப்பு கொடுக்கும் நிலையையும் ஏற்பட்டுள்ளது.

இந்த செய்தியை தொடர்ந்து பல புகார்கள் போலீஸ் மீது வருகின்றது. பொய் வழக்கு போடுவது, விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட புகார்கள் தினம் தினம் வருவதால் உயர்நீதி மன்றமே தாமாக வந்து விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் நடிகரும் மநீம கட்சியின் தலைவருமாக கமல்ஹாசன் தன் ட்விட்டரில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது.

சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.

என பதிவிட்டுள்ளார்.

Overall Rating : Not available

Latest Post