சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி.: ரஜினி-கமல் கருத்து

சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி.: ரஜினி-கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and kamalசபரிமலை சந்நிதானத்தில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது.

இதனை ஒரு அமைப்பினர் வரவேற்றாலும் பெண்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த உத்தரவை எதிர்த்து கேரளாவில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களான ரஜினி & கமல் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது…

“சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்; அதே நேரத்தில் சபரிமலை ஐதீகத்தை பின்பற்ற வேண்டும்.

#MeToo – மீ டூ பரப்புரை பெண்களுக்கு சாதகமான ஒன்று, ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்திவிடக் கூடாது.” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சூட்டிங் முடிச்சிட்டு தனியா வர சொன்னார் அர்ஜூன்.. #MeToo ஸ்ருதி

சூட்டிங் முடிச்சிட்டு தனியா வர சொன்னார் அர்ஜூன்.. #MeToo ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjun shruti hariharanஅருண் வைத்தியநாதன் இயக்கிய நிபுணன் படத்தில் அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் அர்ஜூன் மனைவியாக ஸ்ருதி நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் அர்ஜூன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார் ஸ்ருதி.

படப்பிடிப்பின் போது இறுக்கமாக கட்டிப் பிடித்ததாகவும், படப்பிடிப்பு முடிந்ததும் தனியாக வந்து பார்க்குமாறு அழைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

#Metoo #Arjun #SruthiHariharan #Nibunan

நெல் ஜெயராமன் புற்றுநோயால் அவதி.; பிரார்த்தனை செய்ய கார்த்தி வேண்டுகோள்.!

நெல் ஜெயராமன் புற்றுநோயால் அவதி.; பிரார்த்தனை செய்ய கார்த்தி வேண்டுகோள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nel jayaramanநமது நெல்லை காப்போம் நெல் இரா.ஜெயராமன் கடும் புற்றுநோய் தாக்குதலால் உயிர் காக்க போராடி வருகிறார்.

திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழிதோன்றலாய் இயற்கை விவசாய பன்னையை உருவாக்கி யானைக்கவுனி , கருங்குருனை, உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பறியநெல் வகைகளை கண்டறிந்து அதனை தனது பன்னையில் விளைவித்து வந்தார்.

ஆண்டுக்கொரு முறை தனது ஆதி திரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்க்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வையும், ஏற்படுத்தி வந்தார்.
.
நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு 1 கிலோ பாரம்பறிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி,அதனை பெற்று செல்லும் விவசாயிகள் தனது நிலத்தில் விதைத்து இயற்க்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக இலவசமாகவே திரும்ப பெற்று அதனை புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாகவே சுழற்சி முறையில் வழங்கி வந்தார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்க்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்கி சந்தைப்படுத்தியதின் மூலம் உலகத்தின் பார்வையை காவிரி டெல்டாவின் பக்கம் திரும்ப செய்த பெருமைக்கு சொந்தக்காரர் .

இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கிய சிற்பி.

உணவே நஞ்சாகிப் போன உலகில் தனது அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டால் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரம்பரிய உணவு முறைக்கு மாற்றிக்காட்டிய பெருமகன் ஆவார்.

இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, மற்றும் தமிழக அரசு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய அமைப்புகள் பல விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலும், தனது விழிப்புணர்வு பயணத்தை துணிவோடும் நம்பிக்கையுடன் தொடர்ந்தார்.

சாதாரண ஏழை விவசாயி மகனாக பிறந்து தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்து ஏழ்மை வாழ்க்கை நிலையிலேயே தனது அர்ப்பனிப்பு மிக்க சேவையை தொடர்வதை உணர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் , திரைப்பட
கலைஞர்கள், சேவையாளர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் என பலரும் நேரில் சந்தித்தும் ,நிதி அளித்தும் உதவியதால் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளின் மருத்துவ சிகிச்சைக்கு இணையான சிகிச்சையளிக்கப்பட்டு வருவது நம்பிக்கையளிக்கிறது என்பதை நன்றியுடன் நினைவுக் கூற விரும்புகிறேன்.

இதனை தங்களோடு பகிர்ந்து கொள்வதின் மூலம் அனைவரின் பிரார்த்தனைகளும் ஜெயராமன் நோயிலிருந்து மீண்டு வர வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் காத்திருப்போம்.

தற்போது அவர்கீழ்கண்ட முகவரியில் தங்கி சிசிச்சை பெற்று வருகிறார்.

முகவரி :
சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை
செல் : 9952787998

தமிழில் முதல் படத்திலேயே ரஜினியுடன் இணைந்த மாளவிகா மோகனன்

தமிழில் முதல் படத்திலேயே ரஜினியுடன் இணைந்த மாளவிகா மோகனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and malavika mohananமலையாள நடிகையான மாளவிகா மோகனன், ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர்.

மேலும் கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமே ரஜினியின் பேட்ட தான்.

ரஜினியுடன் இணைந்து நடித்தது பற்றி மாளவிகா மோகனன் கூறியுள்ளதாவது…

சிறு குழந்தை போன்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்திய சினிமாவின் முக்கியமான நடிகரான ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறேன். எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்” என தெரிவித்துள்ளார்.

‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன், த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு

மீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kodi dhanushவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படம் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

இதனையடுத்து தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘மாரி 2’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

இதனிடையில் நான்கு ஹீரோக்கள் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.

இதன் பின்னர் ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இவற்றை எல்லாம் முடித்துவிட்டு ‘கொடி’ பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதே நிறுவனம் தயாரித்த தொடரி பட தோல்வியால் தனுஷ் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கார்ப்பரேட் கிரிமினல் தளபதி.; இணையத்தில் *சர்கார்* டீசர் சாதனை

கார்ப்பரேட் கிரிமினல் தளபதி.; இணையத்தில் *சர்கார்* டீசர் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am Corporate Criminal Vijays Sarkar Teaser creates record in YouTubeஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் டீசர் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

இதில் அமெரிக்காவில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விஜய், தேர்தலில் ஓட்டுப்போட இந்தியா வருகிறார்.

ஆனால் அவரது வாக்கை யாரோ கள்ளத்தனமாக போட்டுவிட அவர் என்ன செய்கிறார் என்பது மீதி கதை எனத் தெரியவந்துள்ளது.

இதில் சர்காரை சாடும் விதமாக நான் கார்ப்பரேட் கிரிமினல் என பன்ச் டயலாக் பேசியுள்ளார்.

டீசரும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருவதால் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புது சாதனை படைத்து வருகிறது

இந்நிலையில் இது வெளியான 6 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளதாக சர்கார் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இது பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am Corporate Criminal Vijays Sarkar Teaser creates record in YouTube

Sun Pictures‏Verified account @sunpictures
#SarkarTeaser hits 10M+ views in less than 5 and a half hrs!

More Articles
Follows