தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அப்போது மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தித்திருந்தார்.
இதற்கு தமிழக பா.ஜ., மற்றும் அதிமுக தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சூர்யாவுக்கு கமல் தன் ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான தகுதி சூர்யாவுக்கு உண்டு.
புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. மக்கள் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
மேலும் கபாலி மற்றும் காலா இயக்குனர் ரஞ்சித்தும் சூர்யாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
