ஜோஷி – ஜோஜு ஜார்ஜ் கூட்டணியில் இணைந்த கல்யாணி & ஆஷா சரத்

ஜோஷி – ஜோஜு ஜார்ஜ் கூட்டணியில் இணைந்த கல்யாணி & ஆஷா சரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘பாப்பன்’ படத்திற்கு பிறகு ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஆண்டனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஜோஷி இயக்கிய “பொரிஞ்சு மரியம் ஜோஸ்” படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ், விஜயராகவன் போன்றோர்கள்தான் இந்த “ஆண்டனி” படத்திலும் நடிக்கவுள்ளனர். இது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு.

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜோஜு ஜார்ஜ், ஜோஷி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் “பொரிஞ்சு மரியம் ஜோஸ்”. கட்டாளன் பொரிஞ்சு என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மீண்டும், ஜோஷி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஜோடி எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கியது. ‘இரட்டா’ படத்திற்கு பிறகு ஜோஜு ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தை ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனம் சார்பில் ஐன்ஸ்டீன் சேக் பால் தயாரித்துள்ளார். படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா மற்றும் பூஜை விழா கொச்சி கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த படத்தின் கதையை ராஜேஷ் வர்மா எழுத, ஒளிப்பதிவு ரணதிவே செய்கிறார். படத்தொகுப்பு ஷ்யாம் சசிதரன், இசை ஜேக்ஸ் பிஜோய், கலை இயக்கம் திலீப்நாத், ஆடை வடிவமைப்பு பிரவீன் வர்மா ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.

Kalyani and Asha Sarath joins the Joshi-Joju George team

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் புகழ் உடன் இணையும் ‘அயலி’ கலைஞர்கள்

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் புகழ் உடன் இணையும் ‘அயலி’ கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருட தொடக்கத்தில் வெளியான ‘அயலி’ வெப் தொடர் பலரது பாராட்டையும், மாபெரும் வெற்றியையும் பெற்றது.

இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த ‘அருவி’ மதன் கதையின் நாயகனாக நடிக்க, அபி நட்சத்திரா, காயத்ரி, செல்லா ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

‘குக் வித் கோமாளி’ புகழ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் சமீபத்தில் வரலாற்று கதாபாத்திரங்களை முன்னிறுத்தி புகைப்படம் எடுத்து வைரல் ஆனது மட்டுமின்றி நாட் ரீச்சபிள், மிடில்க்ளாஸ் படங்களில் நடித்த சாய் ரோஹிணி,”அருவி” பாலா, உதய்ராஜ், ஸ்ரீ பிரியா, கனிஷ், பேபி ஷிவானி, மாஸ்டர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள வெற்றிவீரன் மகாலிங்கம் இந்த படத்தை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக எழுதி, இயக்கி தயாரிக்க, இணை தயாரிப்பாளரான S.D.சுரேஷ் தயாரிப்பு மேற்பார்வை பணிகளை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்ப் புத்தாண்டு நேற்று படப்பூஜையுடன் தொடங்கியது.

மேலும் இப்படத்தை சஞ்சய் லோகநாத் ஒளிப்பதிவு செய்ய, வத்ஷன் இசையமைக்க, வடிவேல்-விமல்ராஜ் படத்தொகுப்பை மேற்கொள்கின்றனர்.

இணை இயக்குனர்கள் ரபீக் ராஜா மற்றும் மணிமூர்த்தி, நிர்வாக தயாரிப்பு ராபின் செல்வா, காஸ்டியூம் ரெங்கசாமி, மேக்கப் ரெங்கநாத பிரசாந்த், மக்கள் தொடர்பு V.K சுந்தர், ஸ்டில்ஸ் V.R மணிகண்டன், டிசைனர் V STUDIOS BLESSON என வலுவான தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Pugazh and ‘Ayali’ artistes join for the Vetriveeran Mahalingam’s new project

தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்றக்கோரி அதிகாரிகளுக்கு கேயார் கோரிக்கை

தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்றக்கோரி அதிகாரிகளுக்கு கேயார் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு பட அதிபர் கேயார் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

அனுப்புநர் :

கே.ஆர்
முன்னாள் தலைவர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
நிறுவனர் மற்றும் அறங்காவலர்
தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை

பெறுநர்:

தேர்தல் அதிகாரிகள்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,
பிலிம் சேம்பர் வளாகம்
605, அண்ணாசாலை
சென்னை -600006.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 30 ம் தேதி அடையாறில் உள்ள அன்னை சத்யா (ஸ்டுடியோ) கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு போதுமான இடவசதி இல்லை. கடந்த முறையும் அங்குதான் தேர்தல் நடைபெற்றது. வாக்களிக்க வந்தவர்களின் வாகனங்களை கூட அங்கு நிறுத்த முடியவில்லை.

எல்லோரும் நெருக்கியடித்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதில் “சின்ன தம்பி” உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே பி பிலிம்ஸ் பாலு, உடல்நிலை பாதிக்கப்பட்டு மறுநாளே மருத்துவமனையில் அட்மிட் ஆகி கொரோனா தொற்று என கண்டறியப்பட்டு உயிரையே இழந்து விட்டார் என்பது வேதனையான உண்மை.

இப்போதும் அதே போல கொரோனா பரவும் காலம் ஆரம்பித்திருக்கிறது. அதைவிட கொடுமையான வெயில் காலமாக இருக்கிறது. இந்த முறை 1406 தயாரிப்பாளர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர்.

குறைந்தது 1200 பேர் தேர்தலில் வாக்களிக்க வருவார்கள். அத்தனை பேரும் கார்களில் வந்து இறங்குவதற்கும், நிறுத்துவதற்குமான இட வசதி அங்கு இல்லை. அத்துடன் பிரபல நடிகர்களும் இயக்குனர்களும் வாக்களிக்க வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஏற்ற சூழலும் அங்கு இல்லை. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வருவதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே அடையாறு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் போதுமான இட வசதி இருக்கிறது. எவ்வளவு கார்களை வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். சினிமாவுக்கு தொடர்புடைய ஒரு இடம் என்பதால் தொடர்ந்து எல்லாத் தேர்தல்களையும் அங்கேயே நடத்திக் கொள்ளலாம்.

தமிழக அரசும் திரைப்படத்துறைக்கு ஆதரவாக இருப்பதால் அனுமதி பெறுவதும் கஷ்டமாக இருக்காது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் அதிகாரிகள் எல்லா சூழலையும் கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்தும் இடத்தை திரைப்பட கல்லூரி வளாகத்திற்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வரும் வாக்காளர்களில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள் என்பதையும், ஏராளமான பெண்களும் வாக்களிக்க வருவார்கள் என்பதையும் தேர்தலை நடத்தும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே இந்த விஷயத்தை சங்க நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்கள் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒவ்வொரு தயாரிப்பாளரும் தனிநபர் அல்ல. அவரைச் சுற்றி 100 குடும்பங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது.?

இப்படிக்கு,

(கே.ஆர்.)
உறுப்பினர் எண் : 0006

நாள்: 15.04.2023
சென்னை

Keyar request the authorities to change the venue of the Producers election

மரண மாஸ் அப்டேட் : விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்த தகவல் இதோ!

மரண மாஸ் அப்டேட் : விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்த தகவல் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுடன் விஜய் சேதுபதி புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது விஜய் சேதுபதியின் 50 வது படமாக உருவாக உள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பழிவாங்கும் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், இரண்டு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

85 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டு, இதுவரை 50 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது.

Exciting updates on Vijay Sethupathi’s 50th movie is here!

மாதவனுக்கு விருந்து வைத்து அசத்திய இறுதிச்சுற்று இயக்குனர்

மாதவனுக்கு விருந்து வைத்து அசத்திய இறுதிச்சுற்று இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறுதிச்சுற்று மற்றும் சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்காரா தனது சென்னை இல்லத்தில் மாதவனுக்கு ஒரு சிறப்பு மதிய உணவை வழங்கினார்.

மேலும் அவர் அதைப் பற்றிய படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

“வேங்கை அன்னம், வடியாலு, பொடி, சாம்பார், வத்த கொழம்பு, தயிர் சாதம், பெண்டாளம் பச்சடி என செய்த உணவுகளை பட்டியலிட்டார். மேலும் மாதவனுடன் இரண்டு தசாப்த கால நட்பு தொடர்ந்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Sudha Kongara and Madhavan celebrate a milestone with special mouth watering lunch

லோகேஷ் கனகராஜ்க்கு முன்பாக ரஜினியை இயக்கும் பிரபல இயக்குனர்

லோகேஷ் கனகராஜ்க்கு முன்பாக ரஜினியை இயக்கும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் அல்லது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்திற்காக ரஜினியும் லோகேஷ் கனகராஜும் இணையவுள்ளதாக சொல்ல படுகிறது.

இதனிடையே தற்போது பிரபல டோலிவுட் இயக்குனர் கே.எஸ் ரவீந்திரா உடன் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திட்டம் லோகேஷ் படத்திற்கு முன்பே தொடங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரவீந்திரா தெலுங்கில் ரவி தேஜாவின் ‘டான் சீனு’ மற்றும் பவன் கல்யாணின் ‘சர்தார் கப்பர் சிங்’, ஜூனியர் என்டிஆரின் ‘ஜெய் லவ குசா’ மற்றும் சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரையா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Superstar Rajinikanth chooses this director before Lokesh Kanagaraj ?

More Articles
Follows