குமுதம் பத்திரிக்கை & கஞ்சா கருப்பு மீது ‘கள்ளன்’ பட இயக்குனர் புகார்

குமுதம் பத்திரிக்கை & கஞ்சா கருப்பு மீது ‘கள்ளன்’ பட இயக்குனர் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ganja karuppuகடந்த குமுதம் இதழில் அதாவது 28.9.16 என்ற தேதியிட்டு வெளியான குமுதம் இதழில் நடிகர் கஞ்சா கருப்பு அவர்களின் பேட்டி வெளியானது.

அந்த பேட்டியில் கள்ளன் பட இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சந்திரா பற்றியும் அவரது கணவர் வீகே.சுந்தர் மீதும் பல்வேறு அவதூறுகளை சொல்லியிருந்தார் நடிகர் கஞ்சா கருப்பு.

இதுகுறித்து நேற்று (23.9.16) அன்று நடிகர் கஞ்சா கருப்பு மீதும், அநாகரீகமான வார்த்தைகளை பிரசுரித்த குமுதம் இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன், நிருபர் மகா, பொறுப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சந்திரா.

இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…

எனக்கும் எனது கணவர் திரு வீ.கே.சுந்தருக்கும் 19995 ல் திருமணம் ஆனது முதல் நான் சென்னையில் வசித்து வருகிறேன்.

முதலில் பத்திரிகைத்துறையில் செய்தியாளராக பணியாற்றி பின்னர் திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தேன்.

நான் தற்போது ’கள்ளன்’ என்ற திரைப்படத்திற்கு கதை.திரைக்கதை.வசனம் ஆகிய பணிகளை ஏற்று அப்படத்தை இயக்கி முடித்துள்ளேன்.

மேலும் நான் தமிழ் எழுத்தாளராகவும் உள்ளேன்.

இந்நிலையில் திரு. கஞ்சா கருப்பு என்ற திரைப்பட நடிகரை திரு ம.க.என்ற கடற்கரை எடுத்த பேட்டி 28.9.2016 நாளிட்ட குமுதம் தமிழ் வார இதழில் பக்கம் 12 முதல் பக்கம் 18 வரை செய்தியாக வெளிவந்துள்ளது.

மேற்சொன்ன பேட்டி மற்றும் செய்தியில் என் கணவர் திரு. வீ.கே.சுந்தர் பற்றியும் அவரது நண்பர்கள் மற்றும் சில பொதுநபர்களைப் பற்றியும் பொய்யான, தவறான, உண்மைக்கு மாறான அவதூறான செய்திகளை கஞ்சா கருப்பு பேட்டியாக அளித்துள்ளார்.

மேற்சொன்ன இதழில் வெளிவந்த பேட்டிச் செய்தி தெரிந்து, நானும் என் கணவர் வீ.கே.சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அவமானத்திற்கும் அவமரியாதைக்கும் ஆளாகியுள்ளோம்.

மேலும் அது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாங்க இயலாத துயரத்தையும் மான நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்சொன்ன பேட்டிச் செய்தியில் திரு. கஞ்சா கருப்பு அவர்களின் பணத்தை வைத்து என் பெயரில் கார் வாங்கியதாக அவதூறாக கூறியுள்ளார்.

எனக்குச் சொந்தமாக எந்தக் காரும் இல்லை. என் பெயரில் இதுவரை எந்தக் காரும் வாங்கப்படவில்லை.

திரு.கஞ்சா கருப்பு அவர்கள் அவரின் தாயார் பெயரில் அவரின் சொந்த ஊரில் உள்ள சொத்தை என் பெயரில் மாற்றி பதிவு செய்து தரும்படி என் கணவரிடம் நான் கோரியதாக தெரிவித்துள்ளதும் பொய்யான ஒன்றாகும்.

நான் தற்போது இயக்கிவரும் ’கள்ளன்’ திரைப்படத்தை எட்ஸெட்ரா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக திரு வி.மதியழகன் அவர்களால் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

அவர்களே முழு தயாரிப்புச் செலவையும் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படம் என் சொந்த தயாரிப்பிலோ செலவிலோ எடுக்கப்படவில்லை. இது திரைத்துறையினர் அனைவருக்கும் தெரிந்த செய்தி.

உண்மை இவ்வாறிருக்க மேற்சொன்ன திரு. கஞ்சா கருப்பு அவர்கள் அளித்துள்ள பேட்டி உண்மைக்கு மாறான ஒன்று.

இது தெரிந்தும் அவரால் வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட செய்தியாகும்.
அச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து என்னிடமோ அல்லது என் கணவரிடமோ உறுதி செய்யாது, வெறும் வியாபார நோக்கத்துடன் பத்திரிக்கை தர்மத்திற்கு மாறாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே மேற்சொன்ன நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், மேற்சொன்ன குமுதம் வார இதழ்களை பறிமுதல் செய்யும்படியும் வேண்டிக் கொள்கிறேன்.

பின் குறிப்பு – இது இயக்குனர் சந்திரா குமுதம் இதழின் இயக்குனர்கள், பதிப்பாளர்,ஆசிரியர்,பொறுப்பாசிரியர், நிருபர் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது அளித்துள்ள காவல் நிலைய புகார் நடவடிக்கை மட்டுமே…

பிஆர்.ஓ வீகே.சுந்தர் தன்மீது கஞ்சா கருப்பு கூறியுள்ள அவதூறுகளுக்கும் அதனை வெளியிட்ட குமுதம் இதழின் மீதும் தனியாக அவதூறு வழக்கு பதிவு செய்ய தனது வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.

விக்ரம்-விஜய்சேதுபதியை ரொம்ப பிடிக்கும் – ‘மியாவ்’ ஹீரோ சஞ்சய்

விக்ரம்-விஜய்சேதுபதியை ரொம்ப பிடிக்கும் – ‘மியாவ்’ ஹீரோ சஞ்சய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anchor sanjayசன் டிவி புகழ் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘மியாவ்’.

இப்படம் குறித்த தன் அனுபவங்களை இங்கே பகிர்ந்துள்ளார்.

முதல்பட அனுபவம்?

செம ஜாலியா இருந்துச்சு. படத்துக்கு ஆடிஷன் வெச்சாங்க. மூணாவது ரவுண்ட்ல தான் செலக்ட் ஆனேன்.

எனக்கு சின்ன வயசுலேர்ந்தே சினிமால நடிக்கணும்னு தான் ஆசை. ஆனா படிச்சது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். முடிச்சுட்டு செஃப்பா வேலை பார்த்துட்டு இருந்தப்ப நடிக்க சான்ஸ் கேட்டு ஒவ்வொரு ஆபிஸா ஏறி இறங்கினேன்.

நான்கு ஆண்டுகள் அப்படியே போனது. எந்த வழியில உள்ளே போறதுனு தெரியாம சேனல்ல ட்ரை பண்ணலாம்னு அந்த முயற்சிகள்ல ஈடுபட்டேன்.

சன் டிவி ஆடிஷன்ல கலந்துகிட்டேன். அதுலயும் 14வது முறை தான் செலக்ட் ஆனேன்.

இன்னும் மூன்று முறை போயிருந்தா கஜினி முஹமதுவாகியிருப்பேன்.
அந்த விஜேங்கற அடையாளம் தான் எனக்கு இந்த பட சான்ஸ் கொடுத்தது.

பூனையை வெச்சு படமா?

ஸ்பாட்டுக்கு போன பின்னாடிதான் இந்த படம் பூனையை வெச்சுதான் படம்ங்கறதே தெரிஞ்சுச்சு. ஆனா என் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கானது.

பூனை கூட நடிச்சது சவாலான விஷயம். நிறைய மைம் ஸீன்ஸ் இருந்துச்சு. பூனையே இருக்காது.

கிராபிக்ஸுக்காக பூனை இருக்கறதா கற்பனை பண்ணிட்டு நடிக்கணும். உண்மையான பூனை கூட நடிக்கிறதும் கஷ்டம் தான். அந்த பூனை நல்லா பயிற்சி கொடுக்கப்பட்ட பூனைங்கறதால எந்த பிரச்னையும் இல்லை.

meow hero sanjay

நான்கு ஹீரோக்கள்ல ஒருவரா?

முதல்ல சொல்லும்போதே நான்கு பேருக்குமே சமமான கேரக்டர்னு சொல்லிட்டாங்க.

எங்க நான்கு பேரை அடிப்படையா வெச்சு தான் கதையே நகரும். கதையில
முக்கியமான திருப்பமே என்னோட கேரக்டர்லேருந்துதான்.

மியாவ் படம் எப்படி வந்துருக்கு?

தியேட்டர்ல பார்க்கிற ஆடியன்ஸுக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவமா
இருக்கும். பூனைங்கறது எல்லா வீட்டுலயும் செல்லமா வளர்க்கப்படற பிராணி தான்.

அதனால ஆடியன்ஸ் ஈஸியா படத்துடன் கனெக்ட் ஆகிடுவாங்க. உண்மையான பூனைக்கும் கிராபிக்ஸ் பூனைக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாது.

எல்லோருக்குமான படமா நல்ல எண்டெர்டய்னரா அமையும்.

ரோல் மாடல்?

விக்ரம் தான் பிடிக்கும். எனக்கு கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடிக்கறதுதான் பிடிக்கும். அதனால விக்ரம் சார் ரோல்மாடல்

இப்ப உள்ள ஹீரோக்கள்ல விஜய்சேதுபதி அப்படி இருக்கார்.

வெறும் ஹீரோயிசத்தை மட்டுமே வெச்சு ட்ராவல் பண்ணாம அந்தந்த கேரக்டராகவே மாறிடறாரு. ஒவ்வொரு படத்துலயும் தனியா தெரியறாரு. அதனால விஜய்சேதுபதியும்!

நடிக்க பயிற்சி எடுத்துக் கிட்டீங்களா? இல்லை. ஆனா விஜேவா இருந்
தது பெரிய ப்ளஸ்னு சொல்வேன். திடீர்னு கேமரா முன்னாடி நிக்கிறதுக்கும் விஜேவா இருந்துட்டு வந்து கேமரா முன்னாடி நிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. கேமரா பயம் இருக்காது.

ரெக்கார்ட்ட் ஷோல்லாம் முதல்லயே ஸ்க்ரிப்ட் கொடுத்துடுவாங்க.. அதை அப்படியே பண்ணனும். லைவ் ஷோ நிறைய பண்ணினதால கேமரா முன்னாடி பதற்றம் இல்லாம நடிக்க முடிஞ்சது.

sanjay debut movie meow

அடுத்து?

சில படங்கள்ல பேசிக்கிட்டு இருக்கேன். லீட் ரோல்ஸ் பண்ணனும். இல்லைன்னா பெரிய ஹீரோக்கள் படங்கள்ல சப்போர்டிவ் ரோல் பண்ணனும். மியாவ் படத்துக்கு முன்னாடியே நிறைய ஆடிஷன் போயிருக்கேன்.

ஆனா கேரக்டர் எதுவும் பிடிக்காம திரும்பிடுவேன். பிடிச்ச கேரக்டர் தான் பண்ணனும்னு உறுதியா இருக்கேன்.”

என்றார் இந்த அறிமுக ஹீரோ சஞ்சய்.

வாழ்த்துக்கள் சஞ்சய்

பிரம்மாண்ட படத்தில் இணையும் ஜெயம் ரவி-ஆர்யா

பிரம்மாண்ட படத்தில் இணையும் ஜெயம் ரவி-ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam ravi and aryaஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா படத்தை சுந்தர் சி. மிகப்பிரம்மாண்டமாக இயக்கவிருக்கிறார் என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சாபுசிரில் கலையை கவனிக்கிறார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோர் சுந்தர் சியுடன் இணைந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு யை மெறுகேற்றி வருகின்றனர்.

இப்படியாக பல ஜாம்பவான்கள் இணைந்த நிலையிலும் எந்த ஹீரோவின் கால்ஷீட்டும் கிடைக்கவில்லை.

ஒருவழியாக ஜெயம் ரவி நடிக்க ஒப்புக் கொண்டார்.

தற்போது இவருடன் இணைந்து ஆர்யாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி ரசிகர்களையே தோனி மிஞ்சிடுவாரு போல..?

ரஜினி ரசிகர்களையே தோனி மிஞ்சிடுவாரு போல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhoniகிரிக்கெட் வீரர் தோனி அவர்கள் தன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டி இருக்கும் MSDhoni The Untold Story என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார்.

இப்படத்தை தமிழிலும் வெளியிட உள்ளனர். செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

நேற்று இதற்கான ப்ரோமோஷன் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷிணி தொகுத்து வழங்கினார். ஜோதிகா மற்றும் அவரின் குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

அப்போது தமிழ் நடிகர்களில் ரஜினி மற்றும் சூர்யாவை பிடிக்கும் என்றார்.

அப்போது திடீரென எழுந்து ‘என் வழி தனி வழி’ என சூப்பர் ஸ்டார் வசனத்தை ரஜினி ஸ்டைலில் கூறி அரங்கத்தையே அதிர வைத்தார்.

அப்போது இதை பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் அட… நாமளே ரஜினி வெறியருனுங்க. இவரு நம்மளையே மிஞ்சிடுவாரு போல என பேசிக் கொண்டனர்.

அதன்பின்னர் தனுஷ் வீட்டில் ரஜினியை தோனி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி தயாரிப்பாளருடன் சூர்யா; ‘தெறி’க்க விடுவார்களா?

கபாலி தயாரிப்பாளருடன் சூர்யா; ‘தெறி’க்க விடுவார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaakha Kaakha suryaஒரு சிலர் கூட்டணியில் வெளியாகும் படங்கள் என்றால், அதன் மீதான எதிர்பார்ப்பே தனிதான்.

கடந்த 2003ஆம் ஆண்டில் அப்படி அமைந்த கூட்டணிதான் காக்க காக்க திரைப்படம்.

எனவே மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து, இதன் இரண்டாம் பாகம் வெளி வராதா? என ரசிகர்கள் ஏங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில், கபாலி தயாரிப்பாளர் எஸ்.தாணு, இந்த பாகத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாகவும், இதற்கான பணியை கௌதம் மேனன் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பபடுகிறது.

பவர் பாண்டி படத்தில் தனுஷ் நடிக்கவுள்ள கேரக்டர் என்ன?

பவர் பாண்டி படத்தில் தனுஷ் நடிக்கவுள்ள கேரக்டர் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush photosராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள படத்தை தனுஷ் இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

மேலும் இப்படத்தை தனுஷே தயாரிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன் ரோல்டன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் எனத் தெரிய வந்துள்ளது.

More Articles
Follows