இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி-ரெஜினாவின் *கள்ளபார்ட்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் “கள்ளபார்ட்” அரந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.

வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார்..மற்றும் ஹரிஷ் பெராடி,ஆதேஷ் பாப்ரிகோஷ் ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா

இசை – நிவாஸ் கே.பிரசன்னா

எடிட்டிங் – எஸ்.இளையராஜா

கலை – மாயபாண்டி

சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல்

தயாரிப்பு மேற்பார்வை – ராமச்சந்திரன்

தயாரிப்பு – எஸ்.பார்த்தி எஸ்.சீனா

வசனம் – ஆர்.கே.

திரைக்கதை, டைரக்‌ஷன் – P.ராஜபாண்டி.

வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்தின் முக்கியமான காட்சிகள் ஆக்‌ஷன் காட்சிகள் செண்டிமெண்ட் காட்சிகள் படமாக்கப் பட்டது. அரவிந்த் சாமி ரெஜினா காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப் பட்டது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

சிவகார்த்திகேயனுடன் கம்பேர் செய்த ரசிகருக்கு பிரசன்னாவின் *குணமான* பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2011ஆம் ஆண்டில் நடிகர் பிரசன்னா கலந்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சியை அப்போதைய தொகுப்பாளர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார்.

தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரசன்னா தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.

இந்த 2 படங்களை எடுத்து சிவகார்த்திகேயனின் ரசிகர் ஶ்ரீனிவாசன் என்பவர் பிரசன்னாவை கிண்டலடித்து பேசினார்.

அதில் “பிரசன்னா தொகுத்து வழங்குவது போரடிக்கிறது. அவர் சுமாரான நடிகர். அதிக வெற்றிகளை அவர் பெறவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் சிறந்த என்டர்டெயினர்” என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அவருக்குப் பதிலளித்த பிரசன்னா, “டியர் ஶ்ரீனி, தொகுத்து வழங்குவது என் முழு நேர வேலை இல்லை. நான் சுமாரான நடிகர் என்றால், அதை மேம்படுத்திக்கொள்கிறேன்.

இன்னும் வெற்றியைப் பெறவில்லை என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என நினைக்கிறேன். ஒருநாள் உங்களின் அன்பையும் பெறுவேன்” என குணமாக சொல்லி அதற்கு பதிலளித்துள்ளார்.

கஜாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கஜா’ புயல் தாக்கியதில் தமிழகத்தின் டெல்டா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால் பல்வேறு அமைப்பினரும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முற்றிலும் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு 50 வீடுகளை கட்டித்தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

3000 பாடல்களுக்கு இசையமைத்த தேவாவை பாராட்டிய லதா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனசுக்கேத்த மகராசா படத்தில் அறிமுகமானலும் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படம் தான் இசையமைப்பாளர் தேவாவை நன்கு அறிய செய்தது.

அதன் பின்னர் ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் கார்டு வருகிறதே. அதற்கு பின்னணி இசையமைத்தவரே இவர்தான். எனவே இவர் மீது ரஜினி ரசிகர்களுக்கு அளவற்ற பாசம் இருந்து வருகிறது.

மேலும் தமிழ் திரையிலகிற்கு கானா பாடல் மற்றும் குத்து பாடல்களை அறிமுகம் செய்தவரே இவர்தான்.

இவர் 200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். மேலும் 3000 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவரின் 3000வது பாடல் ஸ்கூல் கேம்பஸ் என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது.

இதனையடுத்து தேவாவுக்கு பாராட்டு விழாவும் ஸ்கூல் கேம்பஸ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் சென்னையில் நடைபெற்றது.

இதில் லதா ரஜினி, பாடகி பி.சுசீலா, கங்கை அமரன் ஆகியோர் கலந்துக கொண்டு தேவாவை வாழ்த்தினர்.

ஸ்கூல் கேம்பஸ் படத்தை டாக்டர் ஆர்.ஜே.நாராயணா தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். அவருடன் ஜெய்சங்கரின் அண்ணன் மகன் ராஜ் கமல் மற்றும் நாகேஷ் பேரன் கஜேஷ் நாகேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

அமிர்தராஜ் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அடுத்த டிசம்பர் மாதம் படத்தை திரையிட உள்ளனர்.

பீர் பாட்டிலுடன் *அயோக்யா*; ராமதாஸ் புகாருக்கு விஷால் சூப்பர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சண்டக்கோழி2 படத்தை அடுத்து விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயோக்யா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் சாய்ந்துக் கொண்டு பீர் பாட்டிலை கையில் வைத்திருப்பார்.

இதுதான் உங்கள் சமூக பொறுப்பா? என கடுமையாக பாமக நிறுவனம் ராமதாஸ் விமர்சித்து இருந்தார்.

தற்போது இந்த கண்டனத்திற்கு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

‘நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் செய்யவில்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது.

இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன். ஒரு குற்ற விசாரணையில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது.

அந்த காட்சியைத்தான் போஸ்டரில் டிசைன் செய்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளர்.

வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுடன் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Vishal clarifies Ayogya first look Beer bottle issue

பாகுபலியை முறியடிக்க தமிழருக்கு பெருமை சேர்க்க 2.0 திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவையே அதிர வைக்கும் அளவுக்கு மிகப்பிரம்மாண்டமான படங்கள் அண்மைக்காலமாக தயாராகி வருகிறது.

இதுவரை இல்லாத செலவில் ரூ. 600 கோடியில் 2.0 படத்தை லைகா தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இதில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அடுத்த வாரம் நவம்பர் 29ல் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இந்தியாவில் மட்டும் 6700 தியேட்டர்களில் 32,500 காட்சிகளாக 2.0 படம் திரையிடப்பட உள்ளதாம்.

வெளிநாடுகளில் 4,000 தியேட்டர்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆக மொத்தம் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்திய சினிமாவை பொறுத்தவரை பாகுபலி 2 படம்தான் அதிக தியேட்டர்களிலும், அதிக காட்சிகளிலும் திரையிடப்பட்ட படமாக இருந்தது.

அந்தப் படம் 6500 தியேட்டர்கள், 31,000 காட்சிகளாக திரையிடப்பட்டது. அந்த சாதனையை 2.0 படம் முறியடிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் முதல் நாள் வசூலில் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டும் நடைபெற்றால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமையாக இது கருதப்படும்.

2pointO movie plans to break Baahubali2 record on first day

More Articles
Follows