காளிகாம்பாள் நிறுவனத்திற்காக ரஜ்னி உருவாக்கும் ‘மதம்’

காளிகாம்பாள் நிறுவனத்திற்காக ரஜ்னி உருவாக்கும் ‘மதம்’

madhamமதம் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.

அறிமுக இயக்குனர் ரஜ்னி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

காளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பாக ஹரீஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, நிரோ இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி

ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி

studio greenசூர்யா, கார்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் ஞானவேல்ராஜா.

இவர் தனது ஸ்டூடீயோ க்ரீன் சார்பாக தயாரிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பை இன்று மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

ஹர ஹர மஹா தேவகி எனப் பெயரிட்டுள்ள அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, ரவிமரியா ஆகியோர் நடிக்கின்றனர்.

செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலு இசையமைக்கிறார்.

தங்கராஜ் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்.

அரசு பொதுத்தேர்வில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி

அரசு பொதுத்தேர்வில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி

rajini dhanush aishwaryaரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்களை இயக்கி வருகிறார்.

விரைவில் சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கவிருக்கிறார்

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினி வர்ணனை (வாய்ஸ் ஓவர்) கொடுக்கவிருக்கிறார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஐஸ்வர்யா பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதில் 2016ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கான விடை ஐஸ்வர்யா தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்-சிவகார்த்திகேயன் வழியில் பெண்ணாகிய விஜய்சேதுபதி

கமல்-சிவகார்த்திகேயன் வழியில் பெண்ணாகிய விஜய்சேதுபதி

vijay sethupathi lady getup‘ஆரண்ய காண்டம்’ படப்புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இதில் சமந்தா, பஹத்பாசில் ஆகியோர் நடிக்க, பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை பார்த்து விட்டோம்.

தற்போது இக்கூட்டணியில் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார்.

இந்நிலையில், இதில் விஜய்சேதுபதி பெண் வேடமிட்டு நடிக்கிறாராம்.

சூட்டிங்கில் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவ்வை சண்முகியில் கமல்ஹாசன், ரெமோவில் சிவகார்த்திகேயன் ஆகியோர் பெண் வேடமிட்டு நடித்தது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி-கமல் படங்களை தயாரித்த சித்ரா ராமு காலமானார்

சிவாஜி-கமல் படங்களை தயாரித்த சித்ரா ராமு காலமானார்

Producer Chithra Ramuபிரபல திரைப்பட தயாரிப்பாளர் சித்ரா ராமு உடல் நல குறைவால் காலமானார்.

‘ஜல்லிக்கட்டு’, ‘மண்வாசனை’, ‘சூரசம்ஹாரம்’, ‘பெரியதம்பி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சித்ரா ராமு.

சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இரவு 7 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

சித்ரா ராமுவுக்கு தங்கம் என்ற மனைவியும், விஜய சரவணன், விஜய கார்த்திக் என்ற இரு மகன்களும், குகப்பிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

‘நான் யானை இல்ல குதிரை’- ரஜினி;… ‘நான் யானை’- வடிவேலு

‘நான் யானை இல்ல குதிரை’- ரஜினி;… ‘நான் யானை’- வடிவேலு

rajini vadiveluசுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாபா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அதன்பின்னர் சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “நான் யானை இல்ல.. குதிரை. கீழ விழுந்தா டக்குனு எழுந்திருப்பேன்” என பொதுமேடையில் ரஜினி பேசினார்.

அதுபோல் சந்திரமுகி படம் மாபெரும் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கத்தி சண்டை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நான் யானை என வடிவேலு பேசியுள்ளார். அதுபற்றி விவரம் வருமாறு…

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கத்தி சண்டை’.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, நந்தகோபால் தயாரித்திருக்கிறார். நவம்பர் 18ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இவ்விழாவில் வடிவேலு பேசும்போது…

“ரொம்ப இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக பலரும் சொன்னார்கள்.

எனக்கு கேப்பும் கிடையாது; ஆப்பும் கிடையாது. எப்போதுமே இந்த வடிவேலு டாப்பு தான். அந்த வெற்றிக்கு காரணம் மக்கள் தான்.

எந்தப் பேப்பர், வாட்ஸ்- அப் எடுத்தாலும் என் படம்தான் கார்டூன் பொம்மையாக வருகிறேன்.

அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட என்னை வைத்து தான் காமெடி பண்ணிப் போடுகிறார்கள்.

24 மணி நேரமும் சினிமாவைப் பற்றி மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

‘கத்தி சண்டை’ என்றவுடன் கத்தி எடுத்துக் கொண்டு சண்டைப் போடும் படம் கிடையாது. இந்தப் படம் ஒரு புத்தி சண்டை.

கதை சரியில்லாமல் தான், நிறைய படங்களை வேண்டாம் என்று சொன்னேன். உண்மையில், எனக்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை.

மக்களிடையே நடக்கும் விஷயங்களை எடுத்து தான், தங்கம் மூலாம் பேசி காமெடியாக மக்களிடையே கொடுத்துவிடுவேன்.

சில நாட்களுக்கு முன்பு எனது அப்பத்தா இறந்துவிட்டது. நான் ஊருக்கு சென்ற போது “ஏம்ப்பா வடிவேலு… எதுல வந்த” என கேட்டது. “ப்ளைட்ல வந்தேன்” என்றேன்.

“டிக்கெட் எவ்வளவு வாங்குறாய்ங்க” எனக் கேட்டவுடன் “4000 ரூபாய் வாங்குறாங்க” என்றேன். “எவ்வளவு நேரத்துல வந்த” என்ற போது “அரை மணி நேரத்துல வந்தேன்” என்றேன். உடனே “4000 ரூபாய் வாங்கிவிட்டு, அரை மணி நேரத்துல கொண்டு வந்து விடுறானா.

ஏண்டா 180 ரூபாய் வாங்கிட்டு ரயிலில் இரவு முழுவதும் படுக்கப் போட்டு கூட்டிட்டு வர்றான். உன்னை ஏமாத்திட்டாங்கடா.. நாலு பெரிய மனுஷங்களை வைத்துப் பேசி காசு வாங்கப் பாருடா” என்று சொன்னது என் அப்பத்தா.

இப்படித்தான் சில காமெடிகளை எடுத்துக் கொள்கிறேன்.

மக்களிடையே என்ன நடக்கிறதோ, அதை தான் அப்படியே என் காமெடிக்குள் வைத்துக் கொள்வேன்.
என்னை பற்றிய பேசிய அனைவருமே என்னை LEGEND என்றார்கள். அப்படியென்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது.

யானைக்கு அதன் பலம் தெரியாது. என்னுடைய வலு என்ன? எனக்கு தெரியாது.

பலம் தெரிந்துவிட்டால், வேறு மாதிரி ஆகிவிடும்.

விஷாலுடன் திரையில் எனது முதல் படம் ‘திமிரு’. அது வெற்றி பெற்றது.

அடுத்து ஒரு தேர்தல். ஜனாதிபதி தேர்தல் மாதிரி ஒரு தேர்தல் நடந்தது. அதிலும் வெற்றி. அது தான் ‘நடிகர் சங்கத்தைக் காணவில்லை’.

இப்போது ‘கத்தி சண்டை’ படத்தில் விஷாலுடன் இணைகிறேன். இதுவும் வெற்றி பெறும். அதற்கு காரணம் விஷாலுடைய நல்ல மனசு” என்று கலகலப்பாக பேசினார் வடிவேலு.

ஒரு தோல்விக்கு பிறகு வெற்றி குறித்து ரஜினி அப்படி பேசியிருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் வடிவேலு அவரது அடுத்த வெற்றி, வலிமை பற்றி இப்படி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows