தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்தப் படத்தில் இவர்கள் ஜோடி இல்லையென்றாலும், காலக்கூத்து படத்தில் கலையரசன் ஜோடியாக தன்ஷிகா நடித்துள்ளார்.
மற்றொரு ஜோடியாக பிரசன்னா, ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர்.
நாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை சமீபத்தில் தனுஷ் வெளியிட்டார்.
இதனையடுத்து 3வது முறையாக கலையரசன், தன்ஷிகா ‘உறு’ என்ற படத்திற்காக இணைகின்றனர்.
விக்கி ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு மெட்ரோ புகழ் ஜோஹன் இசையமைக்கிறார்.
பிச்சைக்காரன் படப்புகழ் பிரசன்னகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
காட்டுப்பகுதியை மையமாக கொண்டு த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாம்.
டிரம்ஸ் சிவமணி இதன் டைட்டில் ட்ராக்கை கவனித்து கொள்வார் என தெரியவந்துள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதி முதல் இதன் சூட்டிங் துவங்கப்பட உள்ளது.
