சுசீந்திரன் இயக்கத்தில் கலையரசன்-நிகிலா விமல்..?

சுசீந்திரன் இயக்கத்தில் கலையரசன்-நிகிலா விமல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalaiyarasan nikhila vimalமெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த கலையரசன் தற்போது தனி நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் புதிதாக தயாராகவுள்ள ஒரு படத்தில் இவருக்கு ஜோடியாக கிடாரி படத்தில் நிகிலா விமல் நடிக்கிறாராம்.

இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை பிரபல இயக்குனரான சுசீந்திரன் இயக்க போகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுசீந்திரன் தற்போது, விஷ்னு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடிக்கும் மாவீரன் கிட்டு படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்த ஷங்கர்

ரஜினி படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarஷங்கர் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து தகவல்களை இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“இதில் ரஜினியுடன் தான் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் மூன்றில், இரண்டு பங்கு படப்பிடிப்பை 150 நாட்களில் முடித்து விட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பரில் வெளியிட இருக்கின்றனர்.

இப்படம் அடுத்த வருட (2017) தீபாவளிக்கு வெளிவரும் எனத் தெரிகிறது.

காஷ்மோரா படத்தில் நயன்தாரா கேரக்டர் குறித்த தகவல்கள்

காஷ்மோரா படத்தில் நயன்தாரா கேரக்டர் குறித்த தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் கோகுல்.

எனவே இவரது அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வேளையில் கார்த்திக் உடன் கூட்டணி அமைத்தார்.

இதில் கார்த்திக்குடன் முதன்முறையாக நயன்தாராவும் ஸ்ரீதிவ்யாவும் இணைந்தவுடன் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

எனவே படத்தை மிகப்பிரம்மாண்டமாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்தது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பாகுபலி கட்டப்பா போன்ற கார்த்தியின் தோற்றங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சற்றுமுன் நயன்தாராவின் கேரக்டர் குறித்த படத்தை வெளியிட்டுள்ளனர்.

ரத்னமஹாதேவி என்ற இவரது கேரக்டர் பெயரையும் வெளியிட்டுள்ளனர்.

அதில் நயன்தாரா கம்பீரமாக அரியணையில் அமர்ந்து இருக்கிறார்.

இதில் ராணிக்கே உரிய தோற்றத்துடன் காணப்படுகிறார்.

தனுஷ் ரசிகர்களை ஏமாற்றிய கொடி படக்குழு

தனுஷ் ரசிகர்களை ஏமாற்றிய கொடி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kodi dhanushதுரை செந்தில் குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரித்துள்ள படம் கொடி.

இதில் தனுஷ் இருவேடம் ஏற்று நடித்துள்ளார்.

இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானதை தொடர்ந்து படத்தின் ட்ரைலரை மாலை 7 மணிக்கு வெளியிடவிருப்பதாக அறிவித்தனர்.

எனவே தங்கள் அபிமான நடிகரின் கொடி ட்ரைலரை தெறிக்க விட காத்திருந்தனர் தனுஷ் ரசிகர்கள்.

ஆனால், 7 மணியை தாண்டிய பின்பும் எந்த வித அறிவிப்பு இல்லை.

கிட்டதட்ட 35 நிமிடங்கள் கழித்து, இன்று இரவு 10 மணிக்குள் ட்ரைலரை விட்டுவிடுவோம் என்று அறிவித்துள்ளனர்.

அதுவும் சரியான நேரத்தை அவர்கள் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘தனுஷ்-சிவகார்த்திகேயன்… ரெண்டு பேரும் ஒண்ணுதான்’ – துரை செந்தில்குமார்

‘தனுஷ்-சிவகார்த்திகேயன்… ரெண்டு பேரும் ஒண்ணுதான்’ – துரை செந்தில்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush sivakarthikeyan durai senthilkumarதன்னுடைய தரமான படைப்புகளால் பல தேசிய விருதுகளை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவரிடம் உதவியாளராக இருந்த துரை செந்தில்குமார் அவர்கள் எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கினார்.

இந்த இரு படங்களையும் தனுஷ் தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

தற்போது தனுஷ் நடிக்க, கொடி படத்தை இயக்கியுள்ளார் துரை செந்தில்குமார்.

இந்நிலையில் இவரை சந்தித்து..

“தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரையும் இயக்கியிருக்கிறீர்கள்.? என்ன வித்தியாசம்? எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டபோது…

“இருவரும் நடிகர்கள்தான். ரெண்டு பேரும் ஒண்ணுதான். வித்தியாசமில்லை” என்றார்.

‘விஜய் அம்மாவே தனுஷ் ரசிகைதான்…’ கொடி இயக்குனர் துரை பேச்சு

‘விஜய் அம்மாவே தனுஷ் ரசிகைதான்…’ கொடி இயக்குனர் துரை பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay mother shobaமுதன்முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கொடி.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் த்ரிஷா மற்றும் இயக்குனர் எஸ்ஏ. சந்திரசேகரன் ஆகியோர் தவிர முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

அப்போது இயக்குனர் துரை செந்தில்குமார் பேசும்போது…

நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் எல்லாம் தனுஷ் இருந்திருக்கிறார்.

வெற்றிமாறன் அவர்கள் தனுஷ் படத்தை இயக்கியபோது அங்கு உதவியாளராக பணிபுரிந்தேன்.

அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை நான் இயக்கியபோது தனுஷ் தயாரிப்பாளராக இருந்தார்.

தற்போது அவரது கொடி படத்தை இயக்கியிருக்கிறேன்.

அரசியல் படங்களுக்கு காட்பாதர் என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரை சொல்லலாம்.

கொடி படத்தில் அவரை நடிக்க வைக்க அணுகியபோது முதலில் மறுத்தார்.

பின்னர் விஜய் அம்மா ஷோபாவிடம் அவர் மறுத்த காரியத்தை தெரிவித்தாராம்.

எனக்கு தனுஷ் ரொம்ப இஷ்டம். அவரோட ரசிகை நாம எல்லாரும்.

அப்புறம் ஏன் முடியாது சொன்னீர்கள். என்று தெரிவித்துவிட்டு, பின்னர் எஸ்ஏசி சாரை நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்.

அவருடைய கேரக்டர் பெரிய அளவில் ரீச்சாகும்” என்று பேசினார்.

More Articles
Follows