*பேட்ட* பட உரிமையை கலைப்புலி தாணு வாங்கியது உண்மையா.?

*பேட்ட* பட உரிமையை கலைப்புலி தாணு வாங்கியது உண்மையா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaipuli Thanu refused that he have bought theatrical rights of Pettaகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் ‘பேட்ட’.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்களை வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பேட்ட படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாகவும் கிட்டதட்ட ரூ. 120 கோடிக்கும் மேல் இந்திய தியேட்டர் வெளியீட்டு உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. (நம் தளத்தில் வெளியாகவில்லை.)

ஆனால் இதை தாணு தரப்பு மறுத்துள்ளது. பேட்ட படம் வியாபாரம் தொடர்பாக எதுவும் தொடங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kalaipuli Thanu refused that he have bought theatrical rights of Petta

மீண்டும் இம்சை அரசன்.; ஷங்கர்-வடிவேலுவை சமாதானம் செய்த லைகா.?

மீண்டும் இம்சை அரசன்.; ஷங்கர்-வடிவேலுவை சமாதானம் செய்த லைகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imsai Arasan 24th Pulikecei will commence again soonசிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’.

டைரக்டர் ஷங்கர் தயாரித்த இப்படத்தில் வடிவேலு 2 வேடங்களில் நடித்தார்.

தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகத்தை இந்த கூட்டணியே பணியாற்ற முடிவு செய்தது.

இதன் சூட்டிங்குங்காக பல லட்சம் ரூபாய் செலவில் அரங்குகளும் உருவாக்கப்பட்டன.

ஆனால் சில நாட்களிலேயே வடிவேலு பிரச்சினை செய்ய சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷங்கர்.

சங்க நிர்வாகிகள் சமாதானம் செய்தும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.

லைகா நிறுவனம் தான் இந்த சமாதானத்தை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

Imsai Arasan 24th Pulikecei will commence again soon

2.0 பட இந்திர லோகத்து சுந்தரிக்காக 20 கோடி செலவு செய்த லைகா

2.0 பட இந்திர லோகத்து சுந்தரிக்காக 20 கோடி செலவு செய்த லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

EndhiraLogathu Sundariyeஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0,

ரூ.543 கோடியில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்திய சினிமாவிலேயே இந்த பட்ஜெட்டில் தயாராகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை உலகமெங்கும் நவம்பர் 29ந் தேதி திரையிட உள்ளனர்.

இதில் இடம்பெற்றுள்ள இந்திர லோகத்து சுந்தரி என்ற பாடல் வீடியோ கடந்த 24ந் தேதி வெளியானது.

இப்பாடலை மட்டும் 10 நாட்கள் 4 பிரமாண்ட செட்டில் படமாக்கியிருக்கிறார்களாம்.

இந்த பாடலை மட்டும் படமாக்க ரூ. 20 கோடி வரை செலவு செய்துள்ளதாம் லைகா.

உலகளவில் இவ்வளவு பட்ஜெட்டில் இதுவரை எந்தவொரு பாடலும் படமாக்கப்படவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தளபதி 63-க்காக விளையாட்டு மைதான செட் அமைக்கும் அட்லி

தளபதி 63-க்காக விளையாட்டு மைதான செட் அமைக்கும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 63தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை மீண்டும் இயக்கவுள்ளார் அட்லி.

இப்படத்தை 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார் கல்பாத்தி அகோரம்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படம் ஒரு விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் சூட்டிங்கை 2019 ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை புறநகர் பகுதியில் ஒரு விளையாட்டு மைதான செட்டை அமைத்து வருகிறாராம் அட்லி.

முதல்வன் 2 படத்தில் நடிக்க ஷங்கருக்கு ஓகே சொல்வாரா விஜய்.?

முதல்வன் 2 படத்தில் நடிக்க ஷங்கருக்கு ஓகே சொல்வாரா விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Vijay say OK to Director Shankars Mudhalvan 2ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.

சூப்பர் ஹிட்டான தன் படத்தின் 2ஆம் பாகத்தை அவர் இயக்குவது இதுதான் முதன்முறையாகும்.

இதனையடுத்து கமல் நடிக்கவுள்ள இந்தியன்2 படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர்.

இந்நிலையில் 2.0 படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிகளில் ஷங்கர் கலந்துக் கொண்ட போது ஒருவர் முதல்வன் 2 படம் பற்றி கேட்டார்.

முதல்வன் 2 படக்கதைக்கு நடிகர் விஜய் சரியாக இருக்கும் பட்சத்தில், அவரை நடிக்க வைப்பேன். என் படத்தின் ஹீரோக்களை கதை தான் தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார்.

விஜய் ஓகே சொல்வாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Vijay say OK to Director Shankars Mudhalvan 2

விஜய்-விக்ரம்-சிம்புவை இணைக்க மணிரத்னம் மெகா ப்ளான்

விஜய்-விக்ரம்-சிம்புவை இணைக்க மணிரத்னம் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maniratnam plans to direct Vijay Vikram and Simbu in his next movieமலையாளம், ஹிந்தி படங்களில் டாப் ஹீரோக்கள் இணைந்து நடிப்பது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் தமிழ் சினிமாவில் இது எப்போதாவது நடக்கும் அரிய நிகழ்வாக மாறிவிட்டது.

அண்மையில் இந்த அரிய நிகழ்வை நடத்தி காட்டியவர் மணிரத்னம்.

அவர் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய், சிம்பு ஆகிய நான்கு ஹீரோக்களை நடிக்க வைத்தார்.

தற்போது மீண்டும் அது போன்ற ஒரு மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டை கையில் எடுக்க உள்ளாராம்.

அதில் விஜய், விக்ரம், சிம்பு ஆகிய மூவரையும் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே விக்ரம் மற்றும் சிம்பு உடன் இணைந்திருக்கிறார் மணிரத்னம்.

தற்போதுதான் முதன்முறையாக விஜய்யுடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maniratnam plans to direct Vijay Vikram and Simbu in his next movie

More Articles
Follows