தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கலைப்புலி தாணு கூட்டணியில் உருவாகியுள்ள படம் கபாலி.
இப்படத்தின் பாடல்களை நேற்றே இணையத்தில் வெளியிட்டனர்.
இந்நிலையில் இன்று ஜுன் 12ஆம் தேதி மிகச்சரியாக காலை 11.06 மணிக்கு இப்படத்தின் இரண்டாவது டீசரை வெளியிடவிருந்தனர்.
ஆனால், அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, டீசரை தற்போது வெளியிட முடியவில்லை. இன்னும் சில நாட்களில் வெளியிடவுள்ளோம் என அறிவித்திருக்கிறார் தாணு.
இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி திரையுலகில் நடைபெறுவது வழக்கம்தான். ஆனால் மற்றவர்களோ, கடைசி நொடி வரை காக்க வைத்துவிட்டு, அதன் பின்பே அறிவிப்பார்கள்.
ஆனால் ரஜினி ரசிகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முன்பே அறிவித்து இருப்பது தாணுவின் பெருந்தன்மையை காட்டுகிறது.