தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜேஷ் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்பட இருந்த நிலையில், படத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தப் படத்தை TN வெளியிடும் 7 ஜி சிவா என்ற விநியோகஸ்தர் தனக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மெரினா பிக்சர்ஸ் சிங்கார வேலன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதிகள், சேலம் சிவா ரூ 35 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி சிவாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிடத் தடை ஏதுமில்லை என்றும் உத்தரவிட்டார்.
இப்படம் நாளை வெளியாகவிருந்தது.
ஆனால் இன்றுமுதல் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்பதால் இப்படத்தை நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
