நெசவாளர்களுக்காக கதர் ஆடைகளையே உடுத்திய கடைக்குட்டி சிங்கங்கள்

Kadaikutty Singam team used Cotton cloths for their movieசூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

நமது கிராமங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தாம்பூல தட்டுகளில் மாமன் சீர் எடுத்து வருவது வழக்கம். அனைவரும் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பெண்கள் பட்டு சேலை உடுத்தி மகிழ்ச்சியோடு ஊர் சுற்றி வருவார்கள்.

அதே போல் இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, நாயகி சாயீஷா, ப்ரியா பவானி ஷங்கர், நடிகர்கள் சத்யராஜ், சூரி, விஜி, பானுப்ரியா, ஸ்ரீமன் , இயக்குநர் பாண்டிராஜ் மேலும் படத்தில் நடித்த 25க்கும் மேற்பட்ட நடிகர்கள் இணைந்து பூ, பழங்கள் மற்றும் “ கடைக்குட்டி சிங்கம் “ பாடல் சிடி அடங்கிய தாம்பூல தட்டுகளை எடுத்து வந்தார்கள்.

மதுரையிலிருந்து வந்திருந்த புகழ் பெற்ற நய்யாண்டி மேளகாரர்கள் மற்றும் தப்பாட்டகாரர்கள் முன்னால் அதனை இசைத்துக்கொண்டு வர படக்குழுவினர் பாரம்பரிய முறைப்படி 9 வகையான தாம்பூல தட்டோடு சத்யம் தியேட்டரை சுற்றி மேடைக்கு வருவதை பார்க்கும் போது அது கண்ணுக்கினிய அழகிய காட்சியாகவும், நமது ஊர் மற்றும் கிராமங்களில் நடக்கும் கலர்புல்லான கலாச்சார நிகழ்வு போல் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு நிகழ்ச்சி ஆரம்பமானது.

கடைக்குட்டி சிங்கம் படமானது அப்பா, அம்மா அக்கா, தங்கை, அத்தை, மாமா, முறைப்பெண்கள், சொந்த ஊர், விவசாயம், ஊர் திருவிழா, ஜல்லிக்கட்டு, சிலம்பம் என்று நமது பாரம்பரியம், வாழ்வியல் பற்றிய உன்னதமான படைப்பாக உருவாகியுள்ளது.

கடைக்குட்டி சிங்கம் போன்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய அனைவரும் இணைந்து நமது கலாச்சார முறைப்படி ஒரு விழா துவங்கம் மூன் தாம்பூலம் எடுத்துக்கொண்டு பெண்கள், ஆண்கள் என அனைவரும் இனைந்து தமிழ் சமூதாய முறைப்படி ஊர் சுற்றி வருவது போல் படக்குழுவினர் அனைவரும் மங்கள மேளதாளங்களுடன் தாம்பூலத்தில் படத்தின் இசை தட்டை எடுத்துக்கொண்டு தியேட்டரை சுற்றி வந்து மேடை ஏறி விழாவை துவக்கியது நமக்கு ஏதோ கோலாகலமான விழாவுக்கு நாம் வருகைதந்துள்ளது போல் இருந்தது.

தமிழர் கலாச்சாரம், பண்பு என அனைத்தையும் காக்க வேண்டிய நேரமிது. இந்த காலகட்டத்துக்கு கடைக்குட்டி சிங்கம் போல் ஒரு படம் தேவை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நமது சொந்த ஊரையும், உறவுகளையும் நியாபக படுத்தியது மட்டும் அல்லாமல்.

நமது ஊரில் வேட்டி, சட்டையில் ஆண்களும், பட்டு சேலையில் பெண்களும் ஒன்றாக சேர்ந்து குடும்பமாக இனைந்து சந்தோஷத்துடன் ஊரை வலம் வந்து, எதிரே காணும் ஊர்காரர்களை உறவு முறை சொல்லி நலம் விசாரித்து மகிழ்ச்சியுடன் செல்லும் அந்த நிகழ்வை ஞாபகபடுத்தியது என்பது தான் உண்மை.

அதே போல் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நாயகன் கார்த்தி கதர் வேட்டி, சட்டை அணிந்தே நடித்துள்ளார். அவரை போலவே படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் கதராடையே வழங்கப்பட்டுள்ளது.

நெசவாளர்களின் நலன் கருதி படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நெசவாளர்கள் தயாரித்த கதராடை அவர்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி நெசவாளர்களின் நலன் கருதி தீரன் படத்திலிருந்தே கதராடைகளையே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kadaikutty Singam team used Cotton cloths for their movie

Overall Rating : Not available

Related News

நடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர்.…
...Read More
அட.. இந்த காலத்துல பேமிலி செண்டிமென்ட்…
...Read More
கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர்…
...Read More
கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர்…
...Read More

Latest Post