கபாலி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை… என்பது போல ஆயிரம் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் பாஸ் நான்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த்.

கபாலி திரைப்படம் உலகளவில் கிட்டதட்ட 9,000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முதல் நாள் மட்டும் வசூல் உலகளவில் ரூ. 104 கோடியை எட்டியுள்ளதை தயாரிப்பாளர் தாணு உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ரூ. 21 கோடி வரை வசூலித்துள்ளது.

இரண்டாவது நாளான சனிக்கிழமை ரூ. 15.8 கோடியையும் ஞாயிற்றுக்கிழமை ரூ. 14.6 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆகமொத்தம் தமிழகத்தில் மட்டும் ரூ. 50 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது.

இதுவரை எந்தவொரு படமும் தமிழகத்தில் இச்சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழத்தை தவிர்த்து இந்தியாவில் மட்டும் ரூ 67.5 கோடியை வசூல் செய்துள்ளது.

முதல் மூன்று நாட்களில் வெளிநாடுகளில் கபாலியின் வசூல் விவரம்….

  • அமெரிக்கா மற்றும் கனடாவில் ரூ.27 கோடி
  • பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரூ.4.25 கோடி
  • மலேசியாவில் ரூ.14 கோடி
  • சிங்கப்பூரில் ரூ.5 கோடி
  • ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ரூ.23 கோடி
  • மற்ற நாடுகளில் ரூ.10 முதல் ரூ.12 கோடி
  • ஆக மொத்தம் ரூ.85 கோடிவரை வசூல் செய்துள்ளது.

வட அமெரிக்காவில் வெளியான இரண்டே நாட்களில் 3.5 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.24 கோடி) வசூலித்துள்ளது.

அதாவது ‘பாகுபலி’க்கு அடுத்த இரண்டாவது தென்னிந்தியப் படமாக கபாலி இருக்கிறது.

மேலும் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 185-200 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி (ஜீலை 22-24) வரை உலகளவில் கபாலி 6வது இடத்தை பெற்றுள்ளது. அதன் வசூல் விவரம்…

1. #StarTrek – $89.6M
2. #Tarzan – $51.1M
3. #IceAge – $51M
4. #Skiptrace – $44M
5. #TSLOP – $39.3M
6. #Kabali – $32M

கமல் உடல் நலம் குறித்து டாக்டர் என்ன சொல்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததால் கமல்ஹாசன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் தெரிவித்துள்ளதாவது..

“கமல்ஹாசன் அவர்களின் கால் எலும்பு முறிந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.

அவர் இன்னும் அப்சர்வேஷனில் வைக்கப்பட்டுள்ளார்.

குறைந்தது ஒரு மாதம் கமல் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றனர்.

கமலின் ஓய்வின் காரணமாக ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு செப்டம்பருக்கு தள்ளிப் வைக்கப்படவுள்ளது.

அஜித்துக்கு அடுத்து பாபி சிம்ஹாதான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிகர்தண்டா படத்தில் தான் ஏற்ற ‘அசால்ட் சேது’ என்ற கேரக்டர் பெயரை தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயராக சூட்டியவர் பாபி சிம்ஹா.

இவர் தற்போது இப்பட நிறுவனம் சார்பாக ‘வல்லவனுக்கும் வல்லவன்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

இத்துடன் ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம் இணைந்துள்ளது.

இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கிவரும் இப்படத்தில் ஷிவதா நாயர், பூஜா தேவரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் 16 கெட்டப்பில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

கிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு சென்னையை அடுத்துள்ள பழவேற்காடு ஏரியில் இப்படத்தின் முக்கிய காட்சியை படமாக்கியுள்ளனர்.

கடைசியாக இந்த ஏரியில் அஜித்தின் ‘சிட்டிசன்’ படம்தான் படமாக்கப்பட்டதாம்.

அதன்பிறகு பாபி சிம்ஹாவின் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெறி படத்தில் பாரீஸ்; விஜய் 60 படத்தில் கோயம்பேடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிய தெறி படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமெண்ட், குடும்பம் என அனைத்தும் கலந்து இருந்தன.

இதில் சென்னை பாரீஸ் அருகே வில்லன்களுடன் விஜய் மோதும் சண்டைக் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது.

அதுபோல் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 60 படத்திலும் விஜய் மோதும் சண்டைக் காட்சி பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இதற்காக கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இக்காட்சியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதர்வாவுடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதியின் ராசி நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணிதன் படத்தை தொடர்ந்து அதர்வா நடித்து வரும் படம் செம போதை ஆகாத.

பத்ரி வெங்கடேஷ் இயக்கிவரும் இப்படத்தில் மிஷ்டி மற்றும் அனைகா ஷோட்டி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் ஜான்விஜய், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், மனோபாலா உள்ளிட்டோர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடவிருக்கிறாராம்.

இவர் விஜய்சேதுபதியின் வெற்றி படங்களான பீட்சா, சேதுபதி படங்களில் நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலா பால்-விஜய் விவாகரத்து…? இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்த தெய்வத்திருமகள் படத்தை டைரக்டர் விஜய் இயக்கினார்.

அப்படத்தின் போது டைரக்டர் விஜய்-அமலா பாலுக்கிடையே காதல் உருவாக, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2014-இல் திருமணம் செய்து கொண்டனர்.

பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிப்பதில்லை. ஆனாலும் அமலா பால் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பை தொடர்ந்தார்.

இது விஜய் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், இதுவரை இருவர் தரப்பிலும் எவ்வித மறுப்பு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows