‘கபாலி’ இயக்குநர் ரஞ்சித்துடன் இணையும் கதிர்-ஆனந்தி

Ranjithகபாலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விரைவில் மீண்டும் ரஜினியை இயக்கவிருக்கிறார் ரஞ்சித்

இந்நிலையில் தனது அடுத்த அவதாரமாக தயாரிப்பாளர் ஆகிறார் ரஞ்சித்.

தயாரிப்பு நிறுவனத்திற்கு நீலம் புரொடக்சன் என பெயரிட்டு, ‘பரியேறும் பெருமாள்’ (PARIYERUM PERUMAL) என்ற படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்

இயக்குநர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

‘கிருமி’ பட நாயகன் கதிர் நாயகனாக நடிக்க, ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறாராம்.

ஜனவரி மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

படப்பிடிப்பு முழுவதும் நெல்லையில் நடைபெறுவதால் அந்த மாவட்ட மக்களை நடிக்க வைப்பதிற்கான தேர்வு இப்பொழுது நடைபெற்று வருகிறது.

Overall Rating : Not available

Related News

எழுத்தாளராக தன் பயணத்தை ஆரம்பித்து தற்போது…
...Read More
கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…
...Read More
இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.…
...Read More
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில்…
...Read More

Latest Post