தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில், இந்தி நடிகர் இர்பான் கான் மும்பையில் நடைபெற்ற ‘மடாரி’ பட புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது ‘கபாலி’ படத்தின் போஸ்டர் டிசைனும் ‘மடாரி’ படத்தின் போஸ்டர் டிசைனும் ஒன்றாக இருப்பதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்… “கபாலி குழுவினர் எங்களது போஸ்டரை அபகரித்துக் கொண்டார்கள். நாங்கள் எடுத்திருப்பது ஒரு சின்ன படம்தான்.
போஸ்டர் டிசைன் ஒன்றும் பெரிய விஷயமில்லை. இரண்டு படத்தையும் நீங்கள் பாருங்கள்” என்று பதிலளித்தார்.
ஆனால் ‘மடாரி’ டிசைனர் உருவாக்கிய போஸ்டர்தான் ஒரிஜினல். கபாலி பட போஸ்டர் ஆனது ரஜினி ரசிகர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கபாலி குழுவினருக்கு சற்று சங்கடம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
‘கபாலி’ மற்றும் ‘மடாரி’ ஆகிய இந்த இரண்டு படங்களும் ஜூலை 15ம் தேதி வெளியாகவுள்ளது.