‘கபாலி’ மாஸ்? லாஸ்..? ரஜினிக்கு அடுத்த தலைவலி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இந்தியளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் கபாலி.

இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்துள்ளது என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார்.

மேலும் படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் அதிபர்களிடம் இதுகுறித்த நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் படம் வெளியாகி கிட்டதட்ட 8 மாதங்களை கடந்துள்ள நிலையில், படம் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது என குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் கபாலி படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது என்றார்.

இவரை தொடர்ந்து சேலம் விநியோகஸ்தர் நந்தா அவர்களும் கபாலி படம் தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வாட்ஸ் அப் ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் கபாலி படத்தை மதுரையில் ரிலீஸ் செய்த இம்பாலா தியேட்டர் உரிமையாளர் மணிவர்மா அவர்களோ கபாலி படம் தனக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

கபாலி நஷ்டம் என்று கூறி ரஜினியை களங்கப்படுத்தாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தியேட்டரில் கபாலி 220 நாட்களை கடந்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறிவருவதால் இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kabali Mass or Loss Rajinis next headache

‘நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்கனுமா?’ – ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு தடையை தொடர்ந்து தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

முக்கியமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை நெடுவாசல் பகுதிகளில் மீத்தேனை எடுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பான போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றது.

இதுதொடர்பாக ஜிவி. பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை பகிர்ந்து நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்க வேண்டுமா என்ன? என்று கேட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட புகைப்படம் இதோ…

G.V.Prakash KumarVerified account‏@gvprakash
நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்க வேண்டுமா என்ன ??????

ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற லா லா லேண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா உலகில் உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள்.

தற்போது கடந்தாண்டுக்கான 89வது விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லா லா லேண்ட் படத்துக்கு சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 6 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.

காதலை இசை மூலம் வெளிப்படுத்தும் திரைப்படமாக ‌அமைந்த லா லா லேண்ட படத்தை இயக்கிய டேமியன் சாஜெல்லேவுக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது.

நடனத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த லா லா லேண்ட் கதாநாயகி எம்மா ஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இசைக்கும், பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இரு பிரிவுகளிலும் விருது வழங்கப்பட்டது.

இதே போல் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதையும் லா லா லேண்ட் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் லினஸ் சாண்ட்க்ரீன் தட்டிச் சென்றார்.

மொத்தம் 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட லா லா லேண்ட் திரைப்படம் 6 விருதுகளை வென்றது.

‘மூன்லைட்’ திரைப்படம் மூன்று விருதுகளையும், ‘ஹாக்ஸா ரிட்ஜ்’ படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளது.

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை  ‘Moon light’  திரைப்படம் வென்றது. முதலில், ‘La La Land’ திரைப்படம் விருது பெற்றதாக தவறுதலாக அறிவிக்கப்பட்ட உடன் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

La la land movie won six oscar awards

ஒரே பாணியில் தயாராகும் விஜய்-சூர்யா-சிம்பு படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் சில காட்சிகள் 1980ஆம் ஆண்டுகளில் நடப்பது போல் உருவாகி வருகிறதாம்.

இந்த காட்சிகளில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் இதுபோன்று 1980 ஆண்டுகளின் காட்சிகள் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்கு முன்பே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திலும் இதுபோன்ற காட்சிகள் இடம் பெற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The connection between Vijay Suriya and Simbu movies

பகலவனில் விஜய்க்கு பதிலாக வேறு ஹீரோவை இயக்குகிறாரா சீமான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில வருடங்களுக்கு சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.

சமூகம் சார்ந்த பிரச்சினையை கதைக்களமாக கொண்ட இப்படத்திற்கு பகலவன் எனவும் பெயரிடப்பட்டு இருந்தது.

ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் விஜய் நடிக்காமல் இருந்து வந்தார்.

சீமானும் அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் இப்படத்தை சீமான் மீண்டும் துவங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, ஹீரோவாக விஜய்சேதுபதி அல்லது விஜய் ஆண்டனி நடிப்பார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Instead of Vijay another hero may act in Seemans Pagalavan

‘முந்தானை முடிச்சு’ புகழ் தவக்களை மரணம்; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் திரு.கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காமெடி நடிகராக பிரபலமானவர் சிட்டிபாபு என்ற தவக்களை.

அதனைத் தொடர்ந்து இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணமான இவருக்கு தற்போது 42 வயதாகிறது. குழந்தை இல்லை.

இந்நிலையில் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது..

தனது இயல்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனி முத்திரை பதித்தவர். திரு. சிட்டிபாபு என்ற தவக்களை அவர் எதிர்பாராதவிதமாக காலமானதை அறிந்து மிகவும் வேதனையடைகிறோம்.

அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும், நடிகர் சமூகத்துக்கும் மிகபெரிய இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கிறோம்.

இவ்வாறு நடிகர் சங்கம் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Munthanai Mudichu fame actor Thavakalai passed away

More Articles
Follows