கபாலி விமானம் : பறந்து வந்து சென்னையில் தவித்த ரசிகர்கள்

கபாலி விமானம் : பறந்து வந்து சென்னையில் தவித்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali flight fansரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி பட விளம்பரத்துடன் விமான சேவையில் ஏர் ஏசியா ஈடுபட்டது.

எனவே, எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெயர், புகழ் ரஜினியின் கபாலி படத்திற்கு கிடைத்தது.

இதன்படி பெங்களூரில் இருந்து வரும் ரசிகர்கள் சென்னையில் வந்து படம் பார்த்து செல்ல்லாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு கட்டணம் ரூ. 8000 என தெரிவிக்கப்பட்டது.

எனவே, கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண சுமார் 150க்கும் மேற்பட்ட தீவிர ரஜினி ரசிகர், ரசிகைகள் ஏர் ஏசியா விமானம் மூலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுக்கு சத்யம் சினிமாஸில் படம் திரையிடப்படும் என கூறப்பட்டதாகவும் அதன்பின்னர் வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஏர் ஏசியா இந்தியா பிரிவின் சிஇஓ அமர் அப்ரோல் தெரிவிக்கையில்…

“விமானம் காலை 7 மணிக்கு சென்னைக்கு வந்தது. சத்யம் சினிமாஸில் காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய படம் 12 மணிக்கு தான் தொடங்கும் என தெரிவித்தனர்.

எனவேதான் பிரசாத் ஸ்டுடியோவுக்கு மாற்றினோம். பின்னர் ரசிகர்கள் 12 மணிக்கு காட்சிக்கு ஒப்புக் கொண்டதால் பிரச்சினை முடிக்கப்பட்டது” என்றார்.

கபாலி பிரிமீயர் ஷோ கலெக்ஷன் எவ்வளவு..?

கபாலி பிரிமீயர் ஷோ கலெக்ஷன் எவ்வளவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth stillsஇன்று உலகம் முழுவதும் 4,500 மேற்பட்ட திரையரங்குகளில் கபாலி படம் வெளியானது.

இந்நிலையில் வெளிநாடுகளில் மட்டும் இப்படத்தின் பிரிமீயர் ஷோ திரையிடப்பட்டது.

எனவே மற்ற ரசிகர்களை விட முதல் நாளே நாம் பார்த்து விடலாம் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது.

வெளிநாடுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் மொழியில் வெளியானதால் இப்படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

தற்போது அவை வசூலித்த கலெக்சன் தகவல்கள் கிடைத்துள்ளன. இதோ

  • #USA – $1.45 M
  • #UK – £93,835
  • #France – 41,280€
  • #UAE – $1+ M
அதிக விலைக்கு கபாலி டிக்கெட்டை விற்றவர் கைது… ஆனால்…?

அதிக விலைக்கு கபாலி டிக்கெட்டை விற்றவர் கைது… ஆனால்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali stillsதமிழர்கள்… ஏன் இந்தியர்களே எதிர்பாராத வகையில் உலகம் முழுக்க பேசப்படும் படமாக மாறியது ரஜினியின் கபாலி.

எனவே இப்படத்தின் டிக்கெட்டும் எதிர்பாராத வகையில் உயர்த்தப்பட்டது.

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் அதிக விலைக்கு விற்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர் டிக்கெட் விற்ற நபரை கைது செய்தார்களாம்.

ஆனால் அதன்பிறகு அவரிடம் இருந்து கைப்பற்றிய டிக்கெட்டுக்கள் என்ன ஆனது? என தெரியவில்லையாம். (??????)

மேலும் அதிக விலைக்கு விற்கப்படும் தியேட்டர்களில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் தாணு தயாரிப்பில் இணையும் விஜய்-அட்லி

மீண்டும் தாணு தயாரிப்பில் இணையும் விஜய்-அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theri movie stillsபிரபல தயாரிப்பாளரான தாணு தயாரிப்பில் உலகம் முழுவதும் கபாலி இன்று வெளியாகியுள்ளது.

இத்துடன் இவர் தயாரித்து வெளியிட்ட தெறி படமும் இன்று 100வது நாளை கொண்டாடுகிறது.

இந்நிலையில் ‘கபாலி’ படத்தை அடுத்து மீண்டும் தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கவள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை தெறி இயக்குனர் அட்லியே இயக்கவுள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

‘ரஜினி ரசிகர்களை ஏமாற்றினார் ரஞ்சித்.’ – சமுத்திரக்கனி

‘ரஜினி ரசிகர்களை ஏமாற்றினார் ரஞ்சித்.’ – சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakani kabali rajiniசினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ரஜினியின் கபாலி படம் இன்று வெளியானது.

ரசிகர்களைப் போல சினிமா நட்சத்திரங்கள் இப்படத்தை பார்க்க பெரியளவில் திரையரங்குகளில் குவிந்தனர்.

இந்நிலையில் கபாலி படம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் ரசிகர்களை ரஞ்சித் ஏமாற்றிவிட்டார் என்றும் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிங்கம் 3 படத்திற்காக காத்திருக்கிறேன். அது நிச்சயம் கவரும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இது நிஜமாகவே சமுத்திரக்கனியின் ட்விட்டர் கணக்குதானா? இல்லை அவரது பெயரில் யாராவது இது போன்று ட்வீட்களை இடுகிறார்களா? என தெரியவில்லை.

ஆனால் நடிகர் சமுத்திரக்கனி என்ற பெயரிலேயே இந்த கணக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கபாலி ரிலீஸ் ஆன நாளிலேயே நெட்டிலும் லீக்

கபாலி ரிலீஸ் ஆன நாளிலேயே நெட்டிலும் லீக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kabali danceஉலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கபாலி இன்று வெளியானது.

இப்படத்தின் டிக்கெட் விற்பனை எவரும் எதிர்பாரா வகையில் ஜெட் வேகத்தில் பறந்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் விமர்சனங்கள் வரும் வேளையிலேயே படத்தின் நல்ல பிரிண்ட் காட்சிகளும் இணையத்தில் லீக்காகி விட்டன.

தற்போது 110 நிமிடங்கள் ஓடக்கூடிய கபாலி காட்சிகளின் தியேட்டர் பிரின்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில்தான் இதுபோன்று படங்களை வெளியிடும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதனையும் மீறி கபாலி படம் நெட்டில் லீக்காகி இருப்பது ரஜினி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.

More Articles
Follows