தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒரு ஆணுக்கு இனையான கம்பீர தோற்றத்துடன் கிராப் தலையுடன் கையில் துப்பாக்கியுடன் ஒரு புரொஃபஷனல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தனது உடல் மொழியாலும் ஆக்ஷன் ஸீக்வன்ஸ்களிலும் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
இதே போல் தான் எடுக்கும் கதாபாத்திரங்களுடன் பொருந்தி நடிக்கும் இயல்பு கொண்ட தன்ஷிகா சினிமா உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடேயே அதிகரித்துள்ளது.
ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் “யோகி டா” என்ற படத்தில் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
கவுதம் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தின் திரைக்கதை கதாநாயகியை மையப்படுத்தி காதல், ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த படத்திற்கு கவுதம் கிருஷ்ணாவுடன், ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர்.
தன்ஷிகா கதாநாயகியாக நடிக்க, வேதாளம், காஞ்சனா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வரும் கபீர் சிங் இதில் வில்லனாக நடிக்கிறார். சாயாஜி ஷிண்டே, மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக S.K. பூபதியும், படத்தொகுப்பளராக G.சசி்குமாரும், இசையமைப்பாளராக A. R.ரஹ்மானின் சகோதிரியான இஷ்ராத் காதறியும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷ் ,கௌதம் கிருஷ்ணா ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர் ஆகியோரும் பணிபுரி்கின்றனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ட்விட்டரில் டிரெண்டாகியுள்ள நிலையில் படத்தின் பூஜை இன்று, டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தன்ஷிகாவின் “யோகி” கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ‘யோகி டா’ திரைப்படம் ரசிகர்களுக்கான ஆக்ஷன் டீரிட்டாக இருக்கும்.
Kabali fame Dhanshika next movie titled Yogi da