ரஜினி ரசிகர்களுக்காக ‘கபாலி’ க்ளைமாக்ஸ் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியை நேசிக்கும் அவரது ரசிகர்கள் அவர் உடல் நிலை சரியில்லாத போது அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

அப்படிப்பட்ட ரசிகர்கள் கபாலி படத்தில் நெகட்டிவ்வான க்ளைமாக்ஸ் இருக்கும்போது விட்டு விடுவார்களா என்ன?

கபாலி ரிலீஸ் முதல் நாள் இடம் பெற்றிருந்த க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

எனவே தற்போது மலேசிய காவல்துறையினரிடம் கபாலி சரணடைந்தார் என மாற்றம் செய்து திரையிட்டு வருகின்றனர்.

ஆனால் இக்காட்சி மலேசியாவில் மட்டும்தான் மாற்றமடைந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஒருவேளை தமிழகத்திலும் மாற்றம் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

படத்தின் வெளியீட்டின் போதே செளந்தர்யா ரஜினி மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லியிருந்தார்கள்.

ஆனால் ரஞ்சித் பிடிவாதமாக இருந்து மாற்றாமல் இருந்தார்.

தற்போது ரசிகர்களுக்காக க்ளைமாக்ஸ் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் மனைவி மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமராவதி படத்தில் அறிமுகமாகி இன்று 56 படங்களில் நடித்துள்ளார் அஜித்.

விரைவில் 57வது படத்தில் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவரை அமராவதி படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வா.

இப்படம் 1993ஆம் ஆண்டு வெளியானது. இது இயக்குனரின் இரண்டாவது படமாகும்.

மேலும் கர்ணா, பூவேலி, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார் செல்வா.

இந்நிலையில் இன்று அதிகாலை செல்வாவின் மனைவி மரணமடைந்துள்ளார்.

அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, முகப்பேரில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

 

‘என்னால தூங்க முடியல; ரஞ்சித்துக்கு நன்றி..’- ‘கபாலி’ தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் இளையவர்கள் நடித்து பெயர் வாங்குவது சிரமம்.

ஆனால் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன், மன்னன் படத்தில் விஜயசாந்தி ஆகியோர் இதற்கு விதிவிலக்கு எனலாம்.

அதுபோல் நேற்று முன்தினம் வெளியான ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பெரும் பெயரை பெற்றுள்ளார் தன்ஷிகா.

யோகி என்ற கேரக்டரில் ஆண் பிள்ளை போல உடையணிந்து ரஜினி மகளாக தோன்றினார்.

இவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை நேரில், ட்விட்டரிலும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் தன்ஷிகா கூறியதாவது…

“உங்களுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்த பின் சத்தியமாக என்னால தூங்க முடியல.

இதற்கு எல்லாம் காரணமான ரஞ்சித்துக்கு என் ஆழ் மனதில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் பாடலுக்கு மாணவர்களுடன் ஆட்டம் போட்ட விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தனர்.

இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று முதல் கொண்டாடப்படுகிறது.

இதற்காக இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

எனவே பழைய மாணவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவின் கொண்டாட்டமாக விக்ரம், இன்றைய மாணவர்களுடன் நடனம் ஆட விரும்பினார்.

அதன்படி தனுஷ் நடித்த மாரி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டாராம்.

நிறைவு விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

முதல் நாள் வசூல்: மற்ற படங்களை காலி செய்த ‘கபாலி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்-கலைப்புலி தாணு கூட்டணியில் உருவான கபாலி நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

ரஞ்சித் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் படத்தின் வசூலில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என கூறப்படுகின்றது.

இப்படம் சென்னையில் மட்டும் ரூ 2 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ரூ. 20-24 கோடி வரை வசூலித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மற்ற மாநிலங்கள் விவரம்…

  • ஆந்திரா+தெலுங்கானாவில் ரூ 10 கோடி
  • கேரளாவில் ரூ 4 கோடி
  • கர்நாடகாவில் ரூ 6 கோடி
  • மற்ற மாநிலங்கள் அனைத்து சேர்த்து ரூ 5 கோடி
  • இந்தியாவில் மட்டும் ரூ. 49-50 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இவையில்லாமல் வெளிநாடுகளில்…

  • அமெரிக்காவில் ரூ 16 கோடி
  • மலேசியா, துபாய், சிங்கப்பூரில் ரூ 12 கோடி
  • மற்ற நாடுகள் ரூ 21-26 கோடி வரை
  • ஆக மொத்தம் உலக முழுவதும் ரூ. 104 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இந்திய படங்களிலேயே முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் பெரும் சாதனை படைத்துள்ளதாம்.

மேலும் வசூலில் பல சாதனைகளை படைக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘கபாலி மாஸ் படம் அல்ல; கிளாஸ் படம்..’ குவியும் பாராட்டுக்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவையே ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கபாலிதான்.

எதிர்ப்பார்ப்பு இருந்தளவு படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன.

நேற்று படம் வெளியானதால் முற்றிலும் ரஜினி ரசிகர்களே பார்த்தனர்.

நாம் எதிர்பார்த்து வந்த ரஜினி படம் இது இல்லை என அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் சிலர் ரஜினியை அவருக்கு ஏற்ற வயதில் பார்க்க முடிந்துது.

காளி, முள்ளும் மலரும் படத்தில் பார்த்த ரஜினியை இதில் நாங்கள் பார்த்தோம் என்றனர்.

இன்று மற்ற தரப்பு ரசிகர்களும் குடும்பங்களும் கூட்டம் கூட்டமாக வந்து கபாலியை பார்த்து வருகின்றனர்.

ரஜினிக்கு வயதாகி விட்டது. அவர் அமிதாப்பை போல வேடங்களை ஏற்பது நல்லது என்று கூறியவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாம்.

இதுவரை நாம் பார்க்காத ரஜினியை இதில் பார்க்க முடிகிறது. ஜெயிலில் இருந்து விடுதலை ஆகும் ஒரு நபர் மிகவும் பக்குவப்பட்டு நிதானமாகதான் செயல்படுவார்.

அதுமட்டுமில்லாமல் மனைவி, மகளை இழந்த ஒருவர் அதற்கான மன உளைச்சலில்தான் இருப்பார். எனவே அப்படியான ஒரு கேரக்டரைதான் ரஜினிகாந்த் இப்படத்தில் செய்து இருக்கிறார்.

அதை மிக இயல்பாக செய்து காட்டியிருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் படம் இல்லை. கபாலி ஒரு கிளாஸ் படம். இப்படத்தை பார்க்க பார்க்கதான் உங்களுக்கு பிடிக்கும்.

மேலும் முதல் காட்சி பரபரப்பு, எதிர்மறை விமர்சனங்கள் இவை ஓய்ந்தபின் படத்தை பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என பாராட்டுக்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows