விஜய்சேதுபதி-ஸ்ருதிஹாசனின் ‘லாபம்’ கூட்டணியில் தன்ஷிகா

விஜய்சேதுபதி-ஸ்ருதிஹாசனின் ‘லாபம்’ கூட்டணியில் தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali actor Dhanshika team up with Vijay Sethupathis Laabamஇயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

இவர் தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி‘ஹாசன் இணைந்து நடிக்கும் “லாபம்” படத்தை இயக்கி வருகிறார்.

இவர்களுடன் கலையரசன், ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது-

ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் கபாலி, பேராண்மை படங்களில் நடித்த தன்ஷிகாவும் இணைந்துள்ளார்.

Kabali actor Dhanshika team up with Vijay Sethupathis Laabam

ஆடுகளம் எனர்ஜியை அசுரனுக்கும் கொடுத்த ஜிவி. பிரகாஷ்

ஆடுகளம் எனர்ஜியை அசுரனுக்கும் கொடுத்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash reveals There will be Aadukalam energy in Asuranஒரு பக்கம் அரை டஜன் படங்களில் நாயகனாக நடித்து இசையமைத்து கொண்டிருந்தாலும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கும் தனுஷின் அசுரன் படத்திற்கும் இசையைமத்து வருகிறார்.

இப்பட பாடல் தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு இணையத்தள பேட்டியில் அசுரன் பட பாடல் குறித்து பேசியுள்ளார்.

ஒரு பாடலுக்கு பழைய கால நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாகக் கொண்ட கருவிகளை பயன்படுத்தியுள்ளோம்.

ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஒத்த சொல்லால பாடல் போன்ற எனர்ஜியை அந்த பாடல் கொடுக்கும்.

திருநெல்வேலி பாஷை கலந்த பாடலாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.

GV Prakash reveals There will be Aadukalam energy in Asuran

எம்ஜிஆர் பட டைட்டில் கிடைக்காமல் புதிய டைட்டில் வைத்த சிவகார்த்திகேயன்

எம்ஜிஆர் பட டைட்டில் கிடைக்காமல் புதிய டைட்டில் வைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans 16 movie titled Namma Veetu Pillaiசிவகார்த்திகேயன் நடித்து இறுதியாக வெளியான வேலைக்காரன், சீமராஜா மற்றும் மிஸ்டர். லோக்கல் ஆகிய 3 படங்களும் தோல்வியை தழுவியது.

தற்போது மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஹீரோ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.

மேலும் மற்றொரு படமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாண்டிராஜன் படத்திற்கு எஸ்கே 16 என்று தலைப்பிட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வந்தது.

இந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்த ‛எங்க வீட்டுப்பிள்ளை’ தலைப்பை வைக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதை தர மறுத்துவிடவே ‛நம்ம வீட்டுப்பிள்ளை’ என்று தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், சூரி, நட்டி என்கிற நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கின்றனர்.

இப்படம் செப்டம்பரில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

Sivakarthikeyans 16 movie titled Namma Veetu Pillai

அஜித் வராவிட்டாலும் ஹிந்திக்கு அழைத்துச் செல்லும் போனிகபூர்

அஜித் வராவிட்டாலும் ஹிந்திக்கு அழைத்துச் செல்லும் போனிகபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nerkonda Paarvai producer Boney Kapoor talks about Ajith 60வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் கடந்த வாரம் வெளியானது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றி குறித்து போனிகபூர் பேசும் போது…

நேர்கொண்ட பார்வை படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படத்தை அடுத்து அஜித்தின் 60வது படத்தை தயாரிக்கிறேன்.

ஆக்சன் கதையான இதில் பைக், கார் சேஸிங் காட்சிகள் நிறைய உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் சூட்டிங் தொடங்கவுள்ளது.

இப்படத்தை ஹிந்தியில் வெளியிடும் எண்ணமும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே அஜித்தை நேரடி ஹிந்தி படத்தில் நடிக்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அஜித் ஓகே சொல்லவில்லை. எனவே இப்படத்தை ஹிந்திக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கலாம்.

Nerkonda Paarvai producer Boney Kapoor talks about Ajith 60

சிங்கம் சூர்யா-சிறுத்தை சிவா இணையும் பட முக்கிய அறிவிப்பு

சிங்கம் சூர்யா-சிறுத்தை சிவா இணையும் பட முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Important announcement about Suriya 39 on Sivas Birthdayசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது.

தற்போது ‛இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் ‛சூரரைப் போற்று’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா.

இந்த படத்தை அடுத்து அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 12ஆம் தேதி இயக்குனர் சிவாவின் பிறந்த நாள் என்பதால் சூர்யா 39 படத்தின் முக்கிய அறிவிப்பை மாலை 5.40 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Important announcement about Suriya 39 on Sivas Birthday

70 வயது பாட்டியை 20 வயது பெண்ணாக மாற்றிய ‘ஓ பேபி’

70 வயது பாட்டியை 20 வயது பெண்ணாக மாற்றிய ‘ஓ பேபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samanthas Oh Baby based on 70 years old lady became 20 age girlசுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிபில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது.

ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார்.

வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்த காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதை கற்பனை கலந்து, ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

இப்படத்திற்கு ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, ஜுனைத் சித்திக் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்.

மிக்கி ஜே மேயர் இசையமைக்க, டி சாய் மோகன் குமார் வசனமும் பாடல்களும் எழுத, சுனந்தன், வேலு மற்றும் சமன்விதா சசிதரன் பாடல்களை பாடியிருக்கிறார்கள். விட்டல் கோசனம் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறார் .

டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சியினை கவனித்து கொள்ள, நடனம் சின்ன பிரகாஷ் மற்றும் ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியாகவுள்ள ‘ஓ பேபி’ திரைப்படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிக்க, பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் பிரசாத்
படத்தொகுப்பு: ஜுனைத் சித்திக்
இசை: மிக்கி ஜே மேயர்
வசனமும் பாடல்களும்: டி சாய் மோகன் குமார்
கலை: விட்டல் கோசனம்
நடனம்: சின்ன பிரகாஷ், ரகு
சண்டை பயிற்சி: டிராகன் பிரகாஷ்
பாடகர்கள்: சுனந்தன், வேலு, சமன்விதா சசிதரன்
இயக்கம்: பி வி நந்தினி ரெட்டி

Samanthas Oh Baby based on 70 years old lady became 20 age girl

More Articles
Follows