Breaking: ரஜினி-தனுஷ் கூட்டணியின் காலா ரிலீஸ் குறித்த அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலியை தொடர்ந்து ரஜினியின் காலா படத்தையும் ரஞ்சித்தே இயக்கியுள்ளார்.

ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை நடிகர் தனுஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இதனிடையில் ரஜினியின் மற்றொரு படமான 2.ஓ படமும் தயாராகி வருகிறது.

ஆனால் அந்த பட வெளியீடு தாமதமாகி வருவதால் காலா படத்தை முதலில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதுபற்றிய அறிவிப்பை இன்று மாலை 7 மணிக்கு ஒரு மாஸான போஸ்டருடன் அறிவிக்க உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

Wunderbar films, Superstar Rajinikanth’s #kaalaa release date will be announced by 7 pm today with a #mass + #style = #RAJINI poster .. Thalaivar fans, get ready to CELEBRATE

ஷாம் உடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார்.

ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஷாம் ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார்
இசை – ஷ்யாம் மோகன்
பாடல்கள் – மோகன்ராஜ்
ஸ்டன்ட் – ஸ்டன்ட் சிவா
கலை – T.N கபிலன்
நடனம் – விஷ்ணுதேவா
எடிட்டிங் – அருண்தாமஸ்
தயாரிப்பு – 2M cinemas ” K.V. சபரீஷ்
எழுத்து இயக்கம் – சாரதி

முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இது .

சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் டிரெண்டாகியுள்ளது.

விஜய்-சூர்யா படங்களில் நடித்தவருக்கு தலையில் பயங்கர அடி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் போன்ற படங்களில் நடித்தவர் வித்யூத் ஜம்மால்.

இவர் தற்போது ஜங்கி என்ற அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென எதிர்பாராமல் அவரது தலையில் பலத்த அடி விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியான படக்குழு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது அவர் குணமாகி வருவதாக கூறப்படுகிறது.

லைகாவுடன் இணைந்த சிம்பு-விஜய்சேதுபதி; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய் ஆகிய 4 ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைகின்றனர்.

இதில் நாயகிகளாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை அமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீகர்பிரசாத் எடிட்டிங் செய்ய மணிரத்னமே தன் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரிக்கிறார்.

இத்துடன் லைக்கா நிறுவனமும் இணைந்துள்ளது.

இந்நிலையில் செக்கச் சிவந்த வானம் என்று இப்படத்திற்கு தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் ஜுங்கா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘ஜுங்கா’.

இந்த படத்தின் ஆடியோ விநியோக உரிமையை பிரபல திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியுள்ளது.

இயக்குனர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணைந்த ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு இசை அமைத்த சித்தார்த் விபின் தான் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

இவரது இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான ஃபிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும்

இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டியன் இருவரும்
நாயகிகளாக நடிக்கின்றனர்.

மெர்சல் தயாரிப்பாளருக்காக ரஜினியை இயக்குகிறாரா அட்லி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கரின் உதவியாளராக ரஜினியின் எந்திரன் படத்தில் பணிபுரிந்தவர் அட்லி.

அப்போதே சூப்பர் ஸ்டாருக்கு அறிமுகமாகி விட்டார் அட்லி.

இதனையடுத்து ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட்டார்.

எனவே அட்லி படத்தின் அடுத்த ஹீரோ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் ரஜினியை சந்தித்து அட்லி கதை சொன்னதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தை மெர்சல் தயாரிப்பாளர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை இது உறுதியானால் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

More Articles
Follows