‘கபாலி’க்காக காத்திருக்கும் ‘காபில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பாலிவுட் நடிகர் ராகேஷ் ரோஷன்.

இவர் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது மகன் ரித்திக் ரோஷன் பார்வை இல்லாதவராக நடித்துள்ள படம் காபில்.

இதன் ட்ரைலரை பார்த்த ரஜினி, அப்படக்குழுவை பாராட்டி இருந்தார்.

இதனையடுத்து, காபில் படத்தை கபாலி நாயகனுக்காக ஸ்பெஷலாக திரையிட முடிவு செய்துள்ளாராம் ராகேஷ் ரோஷன்.

2017 ஜனவரி 25இல் இப்படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது.

Kaabil movie special screening for Kabali Rajinikanth

நிர்வாண காட்சியால் சிக்கலில் கீர்த்தி சுரேஷின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் அறிமுகமாகும்போதே ஒப்புக் கொண்டு நடித்த படம் பாம்பு சட்டை.

இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும் படத்தின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

அதற்கு காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள பாபி சிம்ஹாவின் நிர்வாண காட்சிதானாம்.

இப்படத்திற்கு யு சர்ட்டிபிகேட் கிடைத்தாலும், படத்தில் அக்காட்சி உள்ளிட்ட சில காட்சிகளை வெட்டச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் படத்தின் முக்கியமான காட்சியை வெட்டினால் கதை பாதிக்கப்படும் என்பதால் படக்குழு தீவிர யோசனையில் இருக்கிறதாம்.

ஆடம்தாசன் இயக்கியுள்ள இப்படத்தை மனோபாலா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy suresh’s movie Paambhu Sattai into trouble

மீண்டும் ஜெய் உடன் காமெடி வேடத்தில் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி வேடத்தில் இருந்து ஹீரோ வேடத்துக்கு தாவிய பின், காமெடி கேரக்டர்களை தவிர்த்து வந்தார் சந்தானம்.

தற்போது சர்வர் சுந்தரம், மன்னவன் வந்தானடி, சக்கப் போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெய் பிரணித்தா நடித்துவரும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் கெஸ்ட் ரோலில் காமெடி செய்யவிருக்கிறாராம் சந்தானம்.

மகேந்திரன் ராஜாமணி இயக்கியுள்ள இப்படத்தில் காளிவெங்கட், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படம் பைரவா உடன் 2017 பொங்கலுக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் ஜெய் உடன் சந்தானம் இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘தனுஷ் பற்றி அப்படி சொல்லாதீர்கள்…’ மனம் திறந்த அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் திருமணம் செய்த இரண்டே வருடங்களில் இயக்குனர் விஜய்யை பிரிந்தார் நடிகை அமலாபால்.

இவர்களின் பிரிவுக்கு நடிகர் தனுஷ் ஒரு காரணம் என செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து அமலாபால் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

“சினிமா வாய்ப்புகள் வந்தது. மேலும் எனக்கும் விஜய்க்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஆனால் தனுஷ்தான் காரணம் என செய்திகளை கேட்டபோது கஷ்டமாகவும் அசிங்கமாகவும் இருந்தது.

அவரை பற்றி அப்படி சொல்லாதீர்கள்.

என்னை விஜய்யுடன் சேர்த்து வைக்க தனுஷ் முயற்சிகளை எடுத்தார் என்பதுதான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

வடசென்னை, விஐபி 2 படங்களில் தனுஷ் உடன் அமலா பால் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Amala Paul open talk about her Divorce issues

அமீர்கானின் தங்கல் ரீமேக்கில் அஜித்…? விஜய்-சூர்யா ரசிகர்கள் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு, அதனை பூர்த்தி செய்யும் வகையில் வெளி வந்துள்ள படம் தங்கல் (யுத்தம்).

இப்படத்திற்காக அமீர்கான் ஏற்றுக் கொண்ட வேடம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சூர்யா ரசிகர் ஒருவர் தங்கல் பட தமிழ் ரீமேக்கில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வியை நடிகை நீது சந்திராவிடம் எழுப்பினார்.

யாவரும் நலம், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீது சந்திரா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த நீது… அஜித் அடிப்படையில் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் என்பதால், அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.

இதனால் கடுப்பான விஜய், சூர்யா ரசிகர்கள் அவரையும் அஜித்தையும் கலாய்க்க ஆரம்பித்தனர்.

பின்பு என்ன? தெரிந்த கதைதானே… ட்வீட்டர் கலவரமானது.

Vijay and Suriya fans reaction to Neetu Chandra tweet about Ajith act in Dangal tamil remake?

சூப்பர் ஸ்டாருக்காக காத்திருக்கும் ரசூல் பூக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகப்பிரம்மாண்டமாக தயாராகிவரும் 2.0 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

லைக்கா தயாரித்து வரும் இப்படத்தை முழுக்க முழுக்க 3டியில் படமாக்கி வருகிறார் ஷங்கர்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை விரைவில் தொடங்கவிருக்கிறார் ரஜினி.

எனவே, சூப்பர் ஸ்டாருக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம் சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி.

More Articles
Follows