கே. ராஜன் வெற்றி.: சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் முடிவுகள்

கே. ராஜன் வெற்றி.: சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் முடிவுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் ஒன்பது பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் 469 பேர்
தேர்தலில் வாக்களித்தவர்கள்
359 பேர்

வாங்கிய வாக்கு விவரம்
தலைவர்
கே.ராஜன் 230
திருவேங்கடம் 124
செல்லாத ஓட்டு 5

செயலாளர்
கே.காளையப்பன் 186
ஸ்ரீராம் 109
அல்டாப் 53
செல்லாத ஓட்டு 11

துணைத் தலைவர்
எஸ்.நந்தகோபால் 196
அனந்த் 154
செல்லாத ஓட்டு 9

பொருளாளர்
பி.முரளி 176
சஞ்சய்லால்வானி 175
செல்லாத ஓட்டு 8

இணைச்செயலாளர்
சாய் என்கிற சாய்பாபா 199
ராஜகோபால் 147
செல்லாத ஓட்டு 13

*செயற்குழு உறுப்பினர்கள்*
மெட்ரோ ஜெயகுமார்
கிருஷ்ணன்
சந்திரன்
பிரபுராம்பிரசாத்
தியாகு
பன்னீர்செல்வம்
மனோகர்
சொக்கலிங்கம்
ஆனந்தன்
சுதாகர்
கிருஷ்ணமூர்த்தி
ராஜா ரகீம்
குரோம்பேட்டை பாபு
ஏ.ஜி.ரகுபதி
கருணாகரன்
நானி செல்வம்
ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

K. Rajan wins .: Chennai Kanchipuram Tiruvallur District Film Distributors Association Election Results

தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படத்தை தமிழில் வெளியிடும் AR என்டர்டைன்மெண்ட்ஸ்

தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படத்தை தமிழில் வெளியிடும் AR என்டர்டைன்மெண்ட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது.கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.சிறந்த ஒளிப்பதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது . மேலும் ஆஸ்கர் விருதிற்காகவும் பரிந்துரை செய்யப்பட்டது . இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார் . தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார் . மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை AR என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பாளர் அமித் குமார் அகர்வால் கைப்பற்றி தமிழில் டப்பிங் செய்து தற்போது அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளார் .

கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்து ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .

ஜல்லிக்கட்டு

AR Entertainments to release national award winning film Jallikattu in Tamil

விஜய் பிறந்தநாளுக்கு முன்பே ‘தளபதி 66’ படத்தின் மெகா விருந்து

விஜய் பிறந்தநாளுக்கு முன்பே ‘தளபதி 66’ படத்தின் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்குவதால் இது விஜய் நடிப்பில் உருவாகும் முதல் தெலுங்கு படம் என்றும் கூறலாம்.

இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்பதால் தற்காலிகமாக ‘தளபதி 66’ என்று அழைக்கப்படுகிறது.

வம்சி இயக்கும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

‘விஜய் 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக ஜூன் 21-ம் தேதி மாலை 6.01 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Mega party of ‘Thalapathy 66’ before Vijay’s birthday

கர்ப்பிணி மனைவி லலிதாவுடன் சென்று தன் குரு கமலிடம் ஆசி பெற்ற ஷோபி

கர்ப்பிணி மனைவி லலிதாவுடன் சென்று தன் குரு கமலிடம் ஆசி பெற்ற ஷோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘விக்ரம்’.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இந்த படம் ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கமல் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் “விக்ரம்” பட வெற்றிக்கு வாழ்த்து கூறி, தனது குடும்பத்துடன் குரு கமலஹாசனிடம் ஆசி பெற்றுள்ளனர் நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி

கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரங்களை ஆட்டுவிக்கும் பிரபல நடன இயக்குநர் ஷோபி மற்றும் அவரது மனைவி நடன இயக்குநர் லலிதா ஷோபி ஆகிய இருவரும் தங்களது மகள் ஸ்யமந்தகமணி அஷ்விகா ஷோபி உடன் தனது குருவான உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து “விக்ரம்” படத்திற்கு வாழ்த்து கூறியதுடன், அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார்.

நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர்.

அவர் தனது கர்ப்பமாக உள்ள தனது மனைவி லலிதா ஷோபியுடன், திரைத்துறையில் அவர்களது குருவாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் கமல்ஹாசன் அவர்களை, “விக்ரம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், நடன இயக்குநர் லலிதா ஷோபி அவர்களை அக்கறையுடன் உடல்நலம் விசாரித்து அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.

Shobi and his pregnant wife Lalita received blessings from Kamal

3 கெட்டப்பில் சிங்கிள் ஷாட் மூவி.; அசத்தும் ஆதேஷ் பாலா.; 50 சினிமா பிரபலங்கள் ஆதரவு

3 கெட்டப்பில் சிங்கிள் ஷாட் மூவி.; அசத்தும் ஆதேஷ் பாலா.; 50 சினிமா பிரபலங்கள் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஆதேஷ் பாலா
மற்றும் அவரின் குழுவினர்கள் சேர்ந்து உருவாக்கிய புதிய முயற்சி.

நடிகர் ஆதேஷ் பாலா அவர்கள் எப்போதும் எதை செய்தாலும் புதிதாக செய்ய வேண்டும் என்று ஆழமாக யோசித்து குழுவினரிடம் பேசி முடிவு எடுப்பார்.

அந்த வரிசையில் #அந்தஇரவில் – #AndhaIravil நிச்சயமாக புதிய மைல் கல்லாக தமிழ் சினிமாவிற்கு இந்த குறும்படம் பல விருதுகள் மற்றும் பல மேடைகள் கூட்டிக்கொண்டு போகும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

அந்த இரவில் குழுவில் உள்ளவர்கள் பற்றி ஒரு அறிமுகம் முதலில் இசையமைப்பாளர் ” ரமேஷ் வினாயகம் ” இவர் எல்லோருக்கும் பரிச்சயம் ஆனவர் தான் ” நலதமயந்தி , அழகிய தீயே ” போன்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர்.
எடிட்டிங் மற்றும் டிசைன் தம்பி அன்பு திறமையானவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் வலம் வருவார்.

தம்பி சுந்தர் பாலா வளர்ந்து வரும் பி ஆர் வோ மற்றும் நடிகர். சத்தம் ஒலி அமைப்பு சரவணன் ராமச்சந்திரன் வாழ்த்துக்கள் உங்கள் உழைப்பு அபாரமானது.

ஒளிப்பதிவாளர் சுபாஷ் அலெக்சாண்டர், முருகவேல் மாணிக்கம், ஆல்பர்ட், கண்ணன் இவர்களின் உழைப்பு வார்த்தைகளால் சொல்லி விட முடியாது சப்டைட்டில் அப்துர் ரஹ்மான் ராயன் அருமையான உழைப்பு
எங்கள் அனைவரையும் அன்போடு அரவணைத்து எங்களோடு நீங்கள் இறங்கி வேலை பார்த்த நடிகர் மிகச்சிறந்த மனிதர் மற்றும் இயக்குனர் கலைமூவிஷ் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதிக்க வரும் அண்ணன் ஆதேஷ் பாலா அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

அந்த இரவில் – முதல் பார்வை வெளியிட்ட அனைத்து திரைப்பட நட்சத்திரங்கள் உங்களுக்கு மனாதார நன்றி.

நண்பனாக, அண்ணனாக , தம்பியாக, உங்களில் ஒருவனாக எப்போதும் நன்றி பத்திரிகை செய்தி ஊடகம் நண்பர்கள் இல்லையென்றால் நான் இல்லை என்றும் அன்புடன் உங்கள் ஆதேஷ் பாலா

விரைவில் அடுத்த அறிவிப்பு அந்த இரவில் படத்தை பற்றி உங்களுக்கு வரும்…

இது சாதாரண குறும்படம் தானே என்று நினைத்து விடாதீர்கள் 10 நிமிடங்கள் சிங்கிள் சாட் மூன்று கேரக்டர்களில் ஒரே நடிகர் ஏற்று நடிப்பது மிகச் சவாலாக இருந்தது.

Director Subramanyam siva
Actor Chaams
Actor Sampathram
Actor Elayas
Actor Thangadurai
Director Hariganesh
Director hariuthra
Actor Doubt Senthil
Actress RekaNair
Actress Sabbitaroi
Actress Sindhuja
Actor George vijay
Actor sriram karthik
Music Director Sterlin nithya Martin
Music director ganesh chandrasekaran
Director Karuppaiha murugan
Actress saranya ravichandran
Tamil veethi CEO satheesh Muthu
Actor Ebenezer Devaraj
Actor Massravi
Actor Rajkamal
Lyricist Ganakaravel s
Director RDM
Payilvan Ranganathan Journalist
Karna producer
Actor chinrasu
Actor kingkong
Actor kadhal saravanan
Miss Tamilnadu 2021 Sana
Actress jessy
Actor Albert
Actor Singam jayavel
Actor Adhithya kathir
Director Cable shankar
Lyricist VJP
Producer Vajara Ram
Pattimandra Naduvar Subbiah
Actor Gajaraj
Cinematographer & Director JeevanJeevan
Isr selvakumar Director
Sriram padmanaban director
Actor Kavariman Raja
Director Gayathri senthilkumar
Actor Arul varma
Journalist Filmstreet rajesh
Actor kumaravadivel
Actor Roshan Rajeshkrishna
Director PR vijay
Writer Piraimathi kuppusamy
Director karthi k
Director vengat
Director Vijaymani
Director Muthuraj
Actor vinoth sagar
Director bagavathi bala
Director durai ramachandran
Journalist muthukumar
Erode Dr sanjay mimicry
Suresh rajagoplan
Actor Kadhal Sugumar

“அந்த இரவில்” குறும்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு பெருமைபடுத்திய அனைவருக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள்

#Andhairavil Team

50 cinema celebrities supports Aadesh Bala’s Andha Iravil short film

Lights On Media-வின் முதல் படைப்பாக ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

Lights On Media-வின் முதல் படைப்பாக ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lights On Media வழங்கும், இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், இளைஞர்கள் குழுவின் புது முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகும் “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இளம் படக்குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி “பருந்தாகுது ஊர்க்குருவி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில், சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதே இப்படம்.

புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கூடலூர் மண்வயல் கிராமம் அருகே மனிதர்கள் நடமாடாத இருள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் படக்குழு கடும் உழைப்பில் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளது.

இதுவரை திரையில் கண்டிராத புது அனுபவமாக இத்திரைப்படம் இருக்கும்.

இயக்குநர் ராம் அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கோ.தனபாலன் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.

சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா.P, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில்
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன், இசை – ரெஞ்சித் உண்ணி (ஜிமிக்கி கம்மல் புகழ்), சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Lights On Media’s first work ‘Parunthakudu Urkuruvi’

More Articles
Follows