கோடையில் ரிலீசாகும் அருள் நிதி படம்

கோடையில் ரிலீசாகும் அருள் நிதி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்ற கோட்பாடு சில நேரங்களில் மறைந்து போவதை போல தோன்றலாம். ஆனால் அது நல்ல திறமையான இயக்குனர்கள் மிகச்சிறந்த, புதுமையான கதைகளுடன் வரும்போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. தற்போது இயக்குனர் பரத் நீலகண்டன் K13 மூலம் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். படத்தின் டீசர் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கி இருக்கிறது. எற்கனவே தணிக்கை செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் இது குறித்து கூறும்போது, “டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசிகர்களை தயார்படுத்துவதற்கான ஒரு வழிமுறை தான். எங்கள் புத்திசாலித்தனமான ரசிகர்கள் டிரெய்லரின் உண்மையான இலக்கணத்தை புரிந்து கொண்டதும், அதில் முக்கிய கதாபாத்திரங்களை புரிந்து கொண்டதும், அதை பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடல்களை விரைவில் வெளியிடவும், இந்த கோடை விடுமுறையில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

நடிகர்களின் அபார நடிப்பை பற்றி SP சினிமாஸ் சாந்தபிரியா கூறும்போது, “தயாரிப்பாளர்கள் அருள்நிதியை பற்றி தொடர்ந்து புகழ்ந்து வருவதை பார்க்க செயற்கையாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை, இது ஒன்றும் புதிதல்ல. இன்று, சமூக ஊடகங்கள் மற்றும் வலை தளங்களில் பார்வையாளர்களிடமிருந்து வரும் பல கருத்துக்களில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது தெளிவாகிறது. அவர் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட ஒரு நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். அவர் நடித்தால் அந்த திரைப்படத்திற்கு அதுவே பெரிய அளவில் வலு சேர்க்கிறது. இதனை ஒரு தயாரிப்பாளராக வெறுமனே சொல்லவில்லை, மக்கள் ஏற்கெனவே அவரை அங்கீகரித்து, பாராட்டியுள்ளனர்” என்றார்.

K13 ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சாம் சிஎஸ் அவரது பின்னணி இசையால் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளார். எஸ்.பி. சினிமாஸ் சார்பில் எஸ்பி சங்கர் மற்றும் சாந்தபிரியா தயாரிக்க இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பரத் நீலகண்டன். அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இது ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு, கோடை விடுமுறையில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் நடிகர் சமுத்திரகனி பேச்சு

நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் நடிகர் சமுத்திரகனி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)ஸ்டண்ட் யூனியனின் 52 ம் ஆண்டு விழா சென்னையில் ஸ்டண்ட் யூனியனில் இன்று காலை நடை பெற்றது..விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் எஸ்.தாணு,சமுத்திரகனி, ஜாக்குவார் தங்கம், தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் சுற்றியுள்ள இடங்களில் மரக் கன்றுகளை நட்டு வைத்தார்கள் …மூத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் 5 பேர், மூத்த ஸ்டண்ட் நடிகர்கள் 5 பேரையும் கெளரவப் படுத்தினர்…

சமுத்திரகனி பேசும் போது இப்போ இங்கே நுழையும் போதே காசு கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்கள்..காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு இந்த தலை முறையினரே தள்ள பட்டு விட்டோம்…அடுத்த தலை முறையினரின் கதி என்னவாகும் …யோசித்து பார்க்க வேண்டும்…ஒவ்வொருத்தரும் மரம் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.மேற்கு தொடர்ச்சி
மலையில் உள்ள மரங்களை வெட்டாதீர்கள்..அந்த மரங்கள் தான் எங்கள் நாட்டை பாதுகாக்கும் அரண் போல இருக்கு…எங்கள் நாடு இயற்கையிலிருந்து பாதுகாக்கப் படுவதே அந்த மரங்கள் தான்..அதை பாது காக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் என்று ஜப்பான் அரசாங்கம் நமக்கு உதவி செய்கிறது..நம்ம நாட்டு மரங்கள் இன்னொரு நாட்டுக்கும் உதவியா இருக்குன்னு அவங்களே சொல்லும் போது நாம எப்படி பாது காக்கணும்…நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் என்று பேசினார்
விழாவில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர்…
விழாவிற்கு வந்தவர்களை தலைவர் சுப்ரீம் சுந்தர் மற்றும்
செயலாளர் பொன்னுசாமி பொருளாளர் ஜான் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரவேற்றனர்

கோடையை குளிரவைக்க வருகிறது விஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடித்த “ அர்ஜூன் ரெட்டி ”

கோடையை குளிரவைக்க வருகிறது விஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடித்த “ அர்ஜூன் ரெட்டி ”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)விஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடித்து தெலுங்கில் துவாரகா என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் படநிறுவனம் சார்பாக A.N.பாலாஜி தமிழில் தயாரித்துள்ள “அர்ஜூன் ரெட்டி “ படம் இந்த மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளது.

மற்றும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைக்கதை அனைவரையும் ரசிக்க வைக்கும். கோடைக்கு இந்தமாக இந்த அர்ஜுன்ரெட்டி இருக்கும். நெல்லை பாரதியின் பாடல்கள் ஓவொன்றும் ஒருவிதம் அனைத்தும் ரசிக்க வைக்கும் என்கிறார் A.N.பாலாஜி.

ஒளிப்பதிவு – ஸ்யாம் கே.நாய்டு

இசை – சாய்கார்த்திக்

பாடல்கள் – நெல்லை பாரதி

எடிட்டிங் – பிரேம்

தயாரிப்பு – A.N.பாலாஜி

ரஜினி, கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர்

ரஜினி, கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiru aka Chiranjeevi to team up with Shankar for his 153rd projectதமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்தை உலகத்துக்கு சொன்னவர் டைரக்டர் ஷங்கர்.

தமிழில் சில படங்களை இயக்கிய இவர், ஹிந்தியில் ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.

அது ‘முதல்வன்’ பட ரீமேக்கான ‘நாயக்’ படத்தை இயக்கினார்.

ஆனால் அவரது படங்களுக்கு எல்லா மொழியிலும் வரவேற்பு இருப்பதால் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகும்.

கடந்த வருடம் ரஜினி நடித்த 2.0 படத்தை இயக்கி வெளியிட்டார். தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ள ஒரு படத்தை தெலுங்கில் இயக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.

Chiru aka Chiranjeevi to team up with Shankar for his 153rd project

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து STUDIO GREEN ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார்.

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர்.

இதை பற்றி இயக்குநர்கள் பொன்ராம் & M.P கோபி அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ,நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.. அப்போதுதான் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த கனா படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

அதன் காரணமாக திரு.சிவகார்த்திகேயன் அவர்களிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம் அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் அதற்கு பதிலாக அவருடைய கனா பட ஹீரோ தர்ஷன் அவர்களையும் அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ் அவர்களையும் அவர் ரசிகர் மன்ற மாநில தலைவர் மோகன் தாஸ் அவர்களையும் & மிஸ்டர் லோக்கல் பட இயக்குனர் ராஜேஷ்.M அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி சொல்லி பெருமிதம் கொண்டனர் . இயக்குனர்கள் பொன்ராம் அவர்களும் & M.P.கோபி அவர்களும்.

அருண் விஜய்யின் 25வது படத்தை இயக்கும் கௌதம் மேனன்

அருண் விஜய்யின் 25வது படத்தை இயக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay signs his 25th film with director Gautham Menonஅஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியவர் அருண் விஜய்.

இப்படத்தை தொடர்ந்து குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இவை மூன்றும் மாபெரும் ஹிட் அடித்தன.

தற்போது அக்னிச்சிறகுகள், சாஹோ, பாக்சர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

22 வருடங்களாக சினிமாவிலும் இருக்கும் இவர் தற்போதுதான் 25வது படத்தில் நடிக்கவுள்ளார்.

அப்படத்தை கவுதம் மேனன் இயக்கவுள்ளதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Arun Vijay signs his 25th film with director Gautham Menon

More Articles
Follows