ஜோதிகா கோயில் பேச்சு; மன்னிப்பு கேட்க இந்து அமைப்புகள் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் விருது விழா நிகழ்ச்சி தனியார் டிவியில் ஒளிப்பரப்பானது. அதில் நடிகை ஜோதிகா பேசினார்.

ஜோதிகா பேசியதாவது,… தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றது, கண்டிப்பாக பார்க்கனும் என்றார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன்.

உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என் பட சூட்டிங் மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது.

எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள்.

தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என பேசினார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த பேச்சு இந்துக்களிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

அகில உலக ஆன்மிக இந்து மத கட்சி தலைவர் ஜெயம் ஜேஎஸ்கே கோபியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை கட்ட வேண்டுமென்றால் மருத்துவமனை கட்டுங்கள் என ஜோதிகா சொல்லியிருக்கலாம். அதை விடுத்து கோயிலுக்கு பதிலாக மருத்துவமனை கட்டுங்கள் என ஏன் சொன்னார்?

ஏற்கெனவே இந்துக்களை மதம் மாற்ற ஒரு கூட்டம் அலைந்துக் கொண்டிருக்கிறது. எனவே ஜோதிகா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்து தமிழர் கட்சித் தலைவர் இராம. ரவிக்குமார் என்பவர் கூறியுள்ளதாவது…

அடிப்படையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஜோதிகா. இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களை கட்ட வேண்டாம் என அவர் சொல்லவில்லை.

ஆனால் இந்து கோயிலை மட்டுமே சொன்னது தவறு. கலை கூத்தாடி ஜோதிகா தமிழர் கட்டிடக் கலையை கொச்சைப்படுத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Jyothikas Speech Controversy She should apologise for hurting Hindu beliefs

அஜித்-ஷாலினி ஜோடிதான் முன்னுதாரணமா..? ஹலோ ஆப் அலப்பறைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தபோது தன் காதலை வெளிப்படுத்தி நாயகி ஷாலினியை திருமணம் செய்துக் கொண்டார் நடிகர் அஜித்.

இவர்களின் திருமணம் கடந்த 2000 ஆண்டில் 24 ஏப்ரலில் நடைபெற்றது.

தற்போது அஜித் ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஹலோ ஆப் என்ற சமூக வலைத்தளத்தில் அஜித் திருமண நாள் (ஏப்ரல் 24) மற்றும் அஜித் பிறந்த நாள் மே 1 ஆகிய இரண்டையும் சேர்த்து நிறைய ஹேஷ்டேக்குகளை அறிவித்துள்ளனர்.

அதன்படி நிறைய டிரெண்ட்டாகியும் வருகிறது.

ஆனால் இது போல டிரெண்டுக்காக சில அறிவிப்புகளையும் ஹலோ ஆப் வெளியிட்டுள்ளது.

அதில் திரையுலகில் காதல் திருமணம் செய்த பல ஜோடிகளுக்கு அஜித் & ஷாலினி தான் முன்னுதாரணம் என தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு முன் பல காதல் திருமணங்களை திரையுலகம் பார்த்திருக்கிறது.

அப்படியிருக்கையில் இவர்களை முன்னுதாரணம் என சொல்வது ஏனோ..?

மேலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை கவர்வதற்காகவே ஹலோ ஆப்பில் நிறைய ட்ரெண்டுக்களை அறிவிக்கின்றனர்.

அங்கு பணிபுரிவர்களில் பலர் தல தளபதி ரசிகர்களாக  இருப்பதாலேயே இப்படியொரு செய்கை எனவும் கூறப்படுகிறது.

ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட மற்ற ஹீரோக்களை இவர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை எனவும் அடிக்கடி நிறைய புகார்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Helo App trends and Supports for Vijay and Ajith

ஊரடங்கில் உணவில்லாத இந்தியர்கள்; உறங்காமல் உருகும் AR ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னதான் இசைப்புயல் என ஏ.ஆர். ரஹ்மான் வர்ணித்தாலும் அவரது இசை மட்டுமே புயல். ஆனால் அவரது இதயம் மிக மென்மையானது என்பதை பலரும் அறிவர்.

தான் உண்டு. தன் வேலையுண்டு என அமைதியாக எதையும் எடுத்துக் கொள்பவர் அவர்.

ஆனால் தற்போது ஊரடங்கு சமயத்தில் அவர் ஒரு விஷயம் வருத்தமடைய செய்துள்ளதாம். இதனால் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விவரம் வருமாறு…

புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற பாடலுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பாடலை ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் என்பவர் எழுதி உள்ளார்.

மனிதநேய ஆர்வலர் கென் கிராகனின் முன்முயற்சிக்கு இணங்க இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறாராம் ஏஆர்ஆர்.

இதன்மூலம் வரும் தொகையை காலநிலை மாற்ற திட்டங்களுக்கு செலவு செய்யப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு பூமி தினத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த நேரலையில் நீல் மோர்கன் இணைந்து உரையாற்றினர்.

அப்போது பேசிய மோர்கன், “ஊரடங்கு குறித்து பூமியின் மாசு குறைந்திருக்கிறது. சுத்தமான காற்று கிடைக்கிறது. பூமி தன்னையை புதுப்பித்து கொள்கிறது எனப் பேசினார்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது…

“ஊரடங்கில் பசியோடு தவிக்கும் மக்களை நினைக்கிறேன். அன்றாட உணவு தேவைக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையிலே நிறைய இந்தியர்கள் உள்ளனர்.

அவர்களை நினைக்கும் போது உறங்க முடியவிலை. இந்த பூமியில் அவர்களும் ஒரு பகுதியினர்,” என உருக்கமாக தெரிவித்துள்ளார் ஏஆர்ஆர்.

AR Rahman feel about Peoples suffer in Lock down

ஜோதிகாவின் கோயில் பேச்சுக்கு SV சேகர் & திரௌபதி இயக்குனர் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் விருது விழா நிகழ்ச்சி தனியார் டிவியில் ஒளிப்பரப்பானது. அதில் நடிகை ஜோதிகா பேசினார்.

ஜோதிகா பேசியதாவது,… தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றது, கண்டிப்பாக பார்க்கனும் என்றார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன்.

உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என் பட சூட்டிங் மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது.

எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள்.

தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என பேசினார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு .கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று.

இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Jothika 100% immatured speech.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம்.

கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். Ask Ur FATHER IN LAW
இவரை தொடர்ந்து சமீபத்தில் வெளியான திரௌபதி பட இயக்குனர் மோகனும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்… அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள்.. என பதிவிட்டுள்ளார்.

SV Sekar and Mohan condemn Jyothikas Controversy Speech about Temple

சத்தியம் டிவி ஊழியர்களில் 27 பேருக்கு கொரோனா..; டிவி சேனல் மூடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மருத்துவர்களை தாக்கிய கொரோனா தொற்று தற்போது பத்திரிகையாளர்கள் அதிகளவில் தாக்கத் தொடங்கியுள்ளது.

இவர்கள் கொரோனா தொற்று நோயாளிகளிடம் குறைந்த இடைவெளியில் தொடர்பில் இருந்தத்தால் வைரஸ் தாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தினகரன் நாளிதழ், சத்தியம் டிவி, பாலிமர் டிவி செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தினசரி 50 பேருக்கு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சத்தியம் டிவி அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில், மேலும் 27 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் தொலைக்காட்சி நிறுவனத்தை மூட உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கூடுதல் தகவல்… : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்கள், கொரோனாவால் உயிரிழந்தால் ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

27 staffs of Sathiyam TV channel test Covid positive

கொரோனா நோய் பரப்பிய சீனக்காரன் சிறந்தவனே… – டைரக்டர் பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க மறுத்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை தாக்கினர்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் பேரரசு அவர்களும் தன் கண்டனத்தை கவிதையாக தெரிவித்துள்ளார்.

மனித வைரஸ்
————-
இறந்து
தெய்வமானவர்களை
அடக்கம் செய்ய,
இறக்காத
பிணங்கள்
மறுக்கின்றன!

மனசாட்சியை
புதைத்துவிட்டு
மருத்துவரை
புதைக்க,
மனித நோய்கள்
தடுக்கின்றன!

இதயத்தில்
தொற்றுநோய் உள்ளவன்
சொல்கிறான்
பிரேதத்தில்
தொற்று நோயென்று!

நன்றிகெட்ட
உன்னைவிட
நோய் பரப்பிய
சீனக்காரன்
சிறந்தவனே!

கோயில்
மூடப்பட்டுவிட்டது!
தெய்வங்கள்
அடைபட்டுவிட்டது!

இன்று
மருத்துவனே
நடமாடும் தெய்வம்!
அந்த தெய்வத்தையும்
கல்லாக்கி விடாதடா
கலிகால மனிதா!

இப்படி
நன்றிகெட்டு
வாழ்வதற்கு
கொரோனா வந்து
சாவதுமேல்!
*பேரரசு

Director Perarasu talks about Dr Simon burial and Corona

More Articles
Follows