‘ராதே ஷியாம்’ பட 4 மொழி பதிப்பிற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இசையமைப்பாளர்கள் ‘ராதே ஷியாம்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’-ன் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், அது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

இசை என்பது ஒரு திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவதாலும், ‘ராதே ஷியாம்’ பன்மொழிப்படமாக உருவாகி வரும் காரணத்தாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான இசையமைப்பாளர்களை ‘ராதே ஷியாம்’ படக்குழு ஒன்று திரட்டியுள்ளது.

இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாகவும், வித்தியாசமாகவும், விருந்து படைக்கும் வகையிலும் இருக்கும்.

இப்படத்தின் இந்தி பதிப்பிற்கும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.

பாடல்கள் வேறாக இருந்தாலும், அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒரே மாதிரியாக இருக்கும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு நடிகர்கள் உட்பட அனைவரும் முழுமையாக ஒத்துழைத்த காரணத்தால், பாடல்கள் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக படமாக்கப்பட்டன.

‘ராதே ஷியாமின்’ இந்தி பதிப்பிற்கு மிதுன் இரு பாடல்களுக்கும், மனன் பரத்வாஜ் ஒரு பாடலுக்கும் இசையமைத்துள்ளனர். பிரபல கவிஞர்களான குமார் மற்றும் மனோஜ் முன்தஷிர் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, கிருஷ்ண காந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர்.

Justin Prabhakar to Score the 4 Versions of Radhe Shyam

மீண்டும் ‘சின்ன மச்சான்’ கூட்டணி..; பிரபுதேவா & ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே.

உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார்.

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது.

‘மஞ்ச பை’ புகழ் N.ராகவன் இயக்கும் படத்திற்கு, D. இமான் இசையமைக்கிறார்.

மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசிய ஸ்ரீதர்…

“பிரபுதேவா அவர்களுடன் பணிபுரிவது எப்போதுமே ஒரு உற்சாக அனுபவம். ‘சின்ன மச்சான்’ பாடலின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் அவருடன் பணியாற்றியுள்ளேன்.

இது ஒரு ‘ஸ்டைலிஷ் வெஸ்டர்ன்’ பாடல். மிகவும் நன்றாக வந்துள்ளது. பிரபுதேவா, இயக்குநர் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Prabhudeva and choreographer Sridhar come together for a stylish Western number

விஜய் & லோகேஷ் கூட்டணியை இணைக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’.

பொங்கலுக்கு இந்த படம் தியேட்டரில் வெளியாகி 15 நாட்களில் ஓடிடியில் ரிலீசானது.

இப்படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்,

இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது சன் பிக்சர்ஸ்.

இதனையடுத்து தளபதி 66 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த படத்தை மெர்சல் படத்தயாரிப்பாளர் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Mersal combu to reunite for Thalapathy 66?

கமல்ஹாசனுக்காக பிரச்சாரம் செய்யும் விஜய் தங்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ’கில்லி’ மற்றும் சித்தார்த் நடித்த ‘தீயாய் வேலை செய்யனும் குமாரு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிபர்.

இவர் அண்மையில் சென்னையில் வீடு வீடாக சென்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது…

தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக கமல் போராடுகிறார்.

கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்த முறை மாறும். மக்கள் நீதி மய்யத்திற்கு ஓட்டு போடுங்க” என கூறியுள்ளார்.

Ghilli fame actress support Kamals party

‘வலிமை’ அஜித்துக்கு வெறித்தனமான குத்துப் பாடல் போட்ட யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’.

போனிகபூர் தயாரிக்க இதில் அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா என பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஸ்பெயினில் ஒரு ஸ்டைலிஷான பைக்கை வைத்து நடக்கும் சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த காட்சி தான் அப்படத்தின் க்ளைமாக்ஸ் பைட் என சொல்லப்படுகிறது.

எனவே அஜித்துடன் ‘வலிமை’ படக்குழு விரைவில் ஸ்பெயின் பறக்கிறது.

இந்த நிலையில் யுவன் ‘வலிமை’ பட அப்டேட்டை செய்தியாக பதிவிட்டுள்ளார்.

அதில்… ‘வலிமை’ படத்தின் அஜித்தின் ஓபனிங் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

இப்பாடல் நாட்டுப்புற குத்துப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதற்காக ஒரிசாவிலிருந்து பாரம்பரியமிக்க ட்ரம்ஸ் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணிபுரிந்து இருக்கிறார்களாம்.

Exclusive update on Valimai intro song

‘லைவ் டெலீகாஸ்ட்’ வெப் தொடருக்காக தூங்காமல் விழித்து இருந்த காஜல் அகர்வால்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளி வர இருக்கும் “லைவ் டெலிகாஸ்ட்” தொடர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 12 ஆம் தேதி உலகெங்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது.

மாந்த்ரீக சக்திகள் நிறைந்த , ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைக் தொடர் ஒன்றை படமாக்கப்படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே “லைவ் டெலிகாஸ்ட்”.

தொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் “நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்து எடுத்த இடம் மிக மிக பொருத்தமானது.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது.

மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்கு தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது.

படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை.

இந்த படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.

இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்” என்று திகில் மாறா உணர்வுடன் கூறினார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் வைபவ் ரெட்டி, “கயல்” ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம், மற்றும் பலர் நடித்து இருக்கும் இந்த தொடர் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது.

வருகிற 12 ஆம் தேதி “லைவ் டெலிகாஸ்ட்” டிஸ்னி ஹாட் ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி +ஹாட் ஸ்டார் பிரீமியம் ஆகிவற்றில் ஒளிபரப்பு ஆக உள்ளது.

Kajal Aggarwal talks about her working experience in Live Telecast

More Articles
Follows