BREAKING நடிகரும் டாக்டருமான சேதுராமன் திடீர் மரணம்

Just In Actor cum Doctor Sethuraman passed away தமிழில் சந்தானத்துடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தில் 3 நாயகர்களில் ஒருவராக நடித்தவர் டாக்டர் சேதுராமன்.

இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இப்படத்தை அடுத்து வாலிபராஜா’ என்ற படத்திலும் நடித்தார்.

இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.

கடந்த 2016 பிப்ரவரியில் காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் உமையாள் என்கிற உமாபதியை திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் ஆகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. இவருக்கு தற்போது வயது 36 ஆகிறது.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் இவர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.

இவரின் இல்லம் சென்னை பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் அருகில் உள்ள அபார்ட்மெண்டில் உள்ளது.

இதே அபார்ட்மெண்டில் தான் நடிகர் சதீஷ் வசித்து வருகிறார். இவரின் மறைவை சதீஷ் உறுதி செய்து பதிவிட்டுள்ளார்.

Just In Actor cum Doctor Sethuraman passed away

Overall Rating : Not available

Latest Post