பைபிளை பாலோ செய்யும் ரஜினிகாந்த்-அஜித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரம்போ என்ற படத்தில் அறிமுகமானாலும் சினிமா பாதையில் மற்ற வில்லன்களை ஓரங்கட்டி வருபவர் ஜான் விஜய்.

ரஜினியுடன் கபாலி மற்றும் அஜித்துடன் பில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்தாண்டில் மட்டும் இவரது நடிப்பில் ஒரு டஜன் படங்கள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் ரஜினி மற்றும் அஜித் பற்றி இவர் கூறியதாவது….

“இருவருமே பெரிய நடிகர்களாக இருந்தாலும் மிகவும் எளிமையான மனிதர்கள்.

“எவன் ஒருவன் தன்னை தாழ்த்திக்கொள்கிறானோ அவன் மென்மேலும் உயர்த்தப்படுவான்” என பைபிளில் (Bible) கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் இதை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருவதால், இந்த உயரத்தை அடைந்துள்ளனர்’ என கூறினார்.

டபுள் ஹீரோ; டபுள் வில்லன்… கலக்கும் ஜெயம் ரவி-அரவிந்த்சாமி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து லக்ஷ்மன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி, ஹன்சிகா இணைந்து நடித்து வருகின்றனர்.

‘போகன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனி ஒருவன் அரவிந்த் சாமியும் இணைந்துள்ளார்.

இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்டோர் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குனர் லக்ஷ்மன் பேசியதாவது..

காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இப்படம் அமையும்.

இதில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி ஆகிய இருவருமே ஹீரோவாகவும் அவர்களே வில்லன்களாகவும் நடித்துள்ளனர்.

இருவருக்கும் ஒரே மாதிரியான வேடம் என்றாலும், இரு மாறுபட்ட குணாதிசயங்களை அவர்களின் கேரக்டர்கள் கொண்டு இருக்கும்” என்றார்.

என் ‘அப்பா’…. பேச முடியாமல் தவிக்கும் அபிநயா (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பில் உருவாகியுள்ள அப்பா என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

எனவே தற்போது இப்படத்தின் புரோமோசன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் திரையுலகின் பிரபலங்கள் பலரும் தங்கள் அப்பா பற்றி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் மோகன்லால், சூர்யா, ஏஆர் முருகதாஸ், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் தங்கள் அப்பா பற்றி கருத்து தெரிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் நாடோடிகள் அபிநயா தனது அப்பாவை பற்றி பேசியுள்ளார்.

அவரால் வாய் திறந்த பேச முடியாது என்பதால் அவர்களின் உணர்வுகளை தனது மொழியில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ காட்சியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் கலங்கி போவீர்கள் என்பது மட்டும் உண்மை.

அந்த வீடியோ இதோ உங்களுக்காக…

எம்ஜிஆருக்கு அடுத்து ரஜினிதான்.. கபாலி இன்னொரு தீபாவளி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கு நாம் அறிந்ததே.

ஆனால் விரைவில் வெளியாகவிருக்கும் கபாலி முதன்முறையாக மலாய் மொழியில் டப் செய்யப்பட்டுள்ளதால் மலேசியாவில் இதன் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்கு இப்படி ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததாம்.

அதன்பின்னர் 42 ஆண்களுக்கு பின்னர் ‘கபாலி’ படத்திற்குதான் இப்படி ஒரு மாபெரும் வரவேற்பு உள்ளதாம்.

கபாலி ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அங்குள்ள ரசிகர்கள் தங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் கபாலி டிசைனை வரைந்து அசத்தி வருகின்றனர்.

இவையில்லாமல் பெரிய பெரிய பேனர்கள், கட்அவுட்களை மலேசிய தலைநகர் கோலாம்பூர் மற்றும் பினாங்கு பகுதிகளிலும் அதிகம் காண முடிகிறதாம்.

இதில் ஹைலைட்டாக ரசிகர்கள் கூறியது என்ன தெரியுமா? இந்த வருடம் ரெண்டு தீபாவளியாம்.

அதாவது கபாலி வரும் நாள் அவர்களின் மற்றொரு ‘தீபாவளி” என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த கபாலி இன்னும் எத்தனை ஆச்சரியங்களை தரப்போகிறதோ?

‘ரெமோ’ நிலைமை என்ன..? காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த வரும் படம் ரெமோ.

ரூ. 35 கோடியில் தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர் டி ராஜா தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் இம்மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

வருகிற ஜீன் 23ஆம் தேதி ரெமா படத்தின் பர்ஸ்ட் லுக்கும், ஜீலை 1ஆம் தேதி செஞ்சிட்டாளே என்ற சிங்கிள் ட்ராக்கும் வெளியாகவுள்ளது.

ரஜினியுடன் இணைய மறுத்து விக்ரமுடன் இணையும் சிம்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட மாதங்களுக்கு பிறகு வந்தாலும் சிம்புவின் இது நம்ம ஆளு படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே தனது அடுத்த படத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார் சிம்பு.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் நாளை வரவிருப்பதாக கூறப்படுகின்றது.

எனவே, இப்படத்தை அடுத்த ஜீன் மாதம் 17ஆம் வெளியிடவிருந்தனர்.

அந்த சமயம் ரஜினி நடித்துள்ள கபாலி வெளிவரவுள்ளதால் இப்படத்தை ஒத்தி வைத்துவிட்டார்களாம்.

இதன்படி ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.

விக்ரமின் இருமுகன் படமும் ஆகஸ்ட் 2ஆம் வாரத்தில் வெளியாகவிருப்பதால், இருவரும் இணைந்தே வரக்கூடும் எனத் தெரிகிறது.

More Articles
Follows