எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை யூடிப்பில் ஆவணமாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர் ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ. எம். பஷீர். அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கி கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார் பஷீர்.

இந்தநிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை இந்த இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக தற்போது, ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்’ (History of Legent MGR) என்கிற தலைப்பில் கிட்டத்தட்ட 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில்(Net Boss Channel) பதிவேற்றியுள்ளார் பஷீர்.. இந்த வீடியோக்களை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மற்ற சோஷியல் மீடியாக்களிலும் பார்க்க முடியும்..

பத்திரிகையாளர் மணவை பொன்.மாணிக்கம் எழுதிய ‘எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்’ மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட ‘புகழ்மன செம்மல் எம்.ஜி.ஆர்’ ஆகிய இரண்டு புத்தகங்களில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் குறித்த அருமையான, சுவாரஸ்யமான நிகழ்வுகளை படித்து நெகிழ்ந்துபோன பஷீர், அவற்றை காலத்தால் அழிக்க முடியாத வீடியோ பதிவுகளாக மாற்றும் முயற்சியில் உடனே இறங்கினார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த வீடியோக்கள் உருவாக்கும் பணியை துவங்கிய இவர், இதற்காக சுமார் 5 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.. இத்தனைக்கும் காரணம் எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதர் மீது கொண்ட தீராத காதல் என்கிறார் ஜெ. எம். பஷீர்..

இதுகுறித்து அவர் கூறும்போது, “என் தந்தை S.M,ஜமால், எம்.ஜி.ஆர் மீது கொண்ட அளவுகடந்த பற்று காரணமாக, அவரது படங்களில் உடையலங்கார நிபுணராக பணியாற்றினார்.. எனக்கு எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவிலையே தவிர, அப்பா மூலமாக அரைப்பற்றி கேட்டபடியே ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாகத்தான் வளர்ந்தேன். அவரை பார்த்துதான் மற்றவர்களுக்கு உதவும் குணத்தை வளர்த்துக்கொண்டேன்..

இந்த புத்தகங்களை படித்த போது தெரிந்து கொண்ட விஷயங்கள் மற்றும் எம் ஜி ஆர் அவர்களை பற்றி ஏற்கனவே நான் அறிந்து கொண்ட விஷயங்கள் இவற்றை ஏன் ஒரு வரலாற்று ஆவணமாக, அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் விதமாக, வீடியோக்களாக உருவாக்க கூடாது என, என் மனதில் தோன்றியது..

இதோ கடந்த 60 நாட்கள் இடைவிடாத உழைப்பில் அந்த பணியை திருப்திகரமாக செய்து முடித்துவிட்டேன்.. இதுவரை இந்த வீடியோக்களை சுமார் 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளார்கள்..

வெளிநாடுகளில் வாழும் எம் ஜி ஆரின் ரசிகர்கள் இலங்கை, சிங்கப்பூர் , மலேசியா, ஜப்பான் , துபாய் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து போன் செய்து என்னை பாராட்டியதோடு அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை சொல்லி அத்தனையும் பேச சொன்னார்கள்.

இந்த கொரோனா காலத்தில் மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை அளிப்பவையாக இந்த வீடியோக்கள் இருக்கும்” என கூறியுள்ளார் ஜெ. எம். பஷீர்.

52 ஆண்டுகள்… 70MM ஸ்கீரின்.. 1004 சீட்.. ஊரடங்கால் வருமானமின்றி அகஸ்தியா தியேட்டர் நிரந்தரமாக மூடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ரோ ரெயில் பணியால் முடங்கிய சென்னை அகஸ்தியா திரையரங்கை, ஊரடங்கு தொடர்வதால் நிரந்தரமாக மூடப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 70 எம் எம் திரையில் 1004 இருக்கைகளுடன் மூன்று தலைமுறை முன்னனி நாயகர்களின் ஏராளமான வெற்றிப்படங்களை திரையிட்ட 53 ஆண்டுகள் பழமையான அகஸ்தியாவின் மலரும் நினைவுகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

1967ல் பாமா விஜயத்துடன் வட சென்னையின் தண்டையார் பேட்டையில் தொடங்கப்பட்டது அகஸ்தியா திரையரங்கம். 1973ல் வெளியான எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக 300 நாட்கள் ஓடி சாதனைப்படைத்தது..!

தொடர்ந்து காவல்காரன், மீனவ நண்பன் என எம்.ஜி.ஆர் படங்கள் இங்கு சக்கை போடு போட்டது. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான சிவந்த மண், சொர்க்கம் படங்களும் திரையிடப்பட்டதாக கூறும் திரையரங்க நிர்வாகத்தினர் இந்த திரையரங்கில் அப்போது குறைந்த பட்ச கட்டணம் 1 ரூபாய் 10 காசு மட்டுமே என்கின்றனர்.

அப்போது தொலைக்காட்சி இல்லை என்பதாலும் வெகு சில திரையரங்குகளிலே படம் ரிலீஸ் செய்யப்படும் என்பதாலும், தினமும் மக்கள் திருவிழாக்கூட்டமாக கூடியதாகவும், டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் காத்திருந்து அடுத்த காட்சி பார்த்து சென்றதாக திரையரங்கு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினியின் அறிமுகப்படமான, அபூர்வ ராகங்கள், பைரவி, படிக்காதவன், கமல்ஹாசனின் விக்ரம் , அபூர்வ சகோதரர்கள், குருதி புனல், தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை 70 எம்.எம் திரையில் காண்பித்து பலதரப்பு ரசிகர்களையும் குதூகலப்படுத்தியது இந்த திரையரங்கம்..!

விஜய்யின் குஷி, கில்லி, அஜீத்தின் தீனா, சூர்யாவின் காக்க காக்க கார்த்தியின் கைதி வரை இந்த திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியவை. வட சென்னையில் பெரிய கார்பார்க்கிங் வசதியுடன் முன் பக்கம் பூங்காவுடன் கூடிய ஒரே திரையரங்கு அகஸ்தியா மட்டுமே..!

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய் என மூன்று தலைமுறை முன்னனி நடிகர்களும் தங்கள் படங்களை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இங்கு வந்து பாக்ஸ் இருக்கையில் அமர்ந்து பார்த்து சென்றது எல்லாம் ஒரு காலம் என்கின்றனர்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மெட்ரோ ரெயில் பணி தொடங்கிய பின்னர் இந்த திரையரங்கிற்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு சிறிய பாலம் அமைக்கப்பட்டு கார்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்தே ரசிகர்களின் வருகையும் வெகுவாக குறைந்து நட்டத்தில் இயங்க தொடங்கியுள்ளது.

1004 இருக்கைகள் கொண்ட இங்கு ஆரம்பகாலம் தொட்டே இவர்களுக்கு எம்.ஜி.ஆர் படங்கள் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அவரது படத்தை திரையிட்டால் எங்கிருந்தாலும் மக்கள் கூட்டம் இங்கு வந்துவிடும் என்கிறார்கள்.

முழு ஊரடங்கிற்கு முன்பாக ரகசிய போலீஸ் 115 படத்தோடு கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அகஸ்தியா திரையரங்கத்தை, தொடர்ந்து இயக்க இயலாமல் நிரந்தரமாக மூடுவது என்று நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இன்னும் சில மாதங்கள் கழித்து திரையரங்குகள் இயக்க அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் முதலில் ஏசி வசதி இல்லாத விசாலமான, திரையரங்குகளுக்கு மட்டுமே முதற்கட்டமாக அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் சென்னையில் குளிர்சாதன வசதியே இல்லாமல் இயங்கி வந்த ஒரே விசாலமான திரையரங்கான அகஸ்தியா மூடப்படுவது குறிப்பிடதக்கது.

இந்த பகுதியில் நாளுக்கு நாள் இடத்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில் வருமானமில்லா சொத்தாக மாறிபோனதால் இந்த திரையரங்கு நிரந்தரமாக மூடப்படுகின்றது என்பதே உண்மை..!

சமந்தா கணவருடன் டூயட் பாடும் பிரியா பவானி சங்கர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையை சேர்ந்த நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா.

இவர் நடிகர் நாகார்ஜீனாவின் மகன் என்பது தங்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.

தற்போது லவ் ஸ்டோரி எனும் படத்தில் நடிக்க உள்ளார் நாகசைதன்யா.

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இப்படத்தை அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு தேங்யூ என்று பெயரிட்டுள்ளனர்.

அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

ரஜினியின் ஆன்மிக பாதை..; அரசியலில் அஜித்.. சிம்புக்கு வாயாடி மனைவி.. பெண் சித்தர் கணிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண் சித்தர் லட்சுமி அம்மாள் என்பவர் அண்மைக்காலமாக மீடியாக்களில் பரபரப்பாக பேட்டி கொடுத்து வருகிறார்.

இவரின் சமீபத்திய பேட்டியில்…

ரஜினி ஓர் ஆன்மிகவாதி. அவர் கிடைக்கும் பாதையில் செல்வார்.

அஜித் அன்புக்கு ஏங்குபவர். கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்.

சிம்பு நல்லவர், குழந்தை மனசு, அவருக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளது. தோஷம் நிவர்த்தி செய்தால் அழகான பெண் கிடைப்பாளர். ஆனால் மனைவி வாயாடியாக இருப்பார்.

இவ்வாறு பெண் சித்தர் லட்சுமி அம்மாள் தன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

6 மாதத்தில் 2000 கோடி நஷ்டம்; சூட்டிங் ஓகே.. தியேட்டர் ஓபனிங் எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

இதனால் சினிமா சூட்டிங் மற்றும் தியேட்டர்கள் திறக்க தடை விதிக்கப்ட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.

நாளை செப்டம்பர் 1 முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமுலுக்கு வருகிறது.

இதில் 75 பேருடன் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

ஆனாலும் திரையரங்குள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் திரையுலகினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனால் இந்த ஆறு மாத காலத்தில் திரையுலகம் 2 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருக்கிறார்.

மேலும் இந்த பொது முடக்கத்தால் பெப்சி தொழிலாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், டெக்னிசியன்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டு உள்ளது. எனவும் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் ஓணம் கொண்டாடி நயன்தாரா விக்னேஷ் சிவன் ரொமான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகமெங்கும் உள்ள மலையாளிகளால் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழர்களும் அண்மைக்காலமாக ஓணம் பண்டிகைக்கு கேரளா ஸ்டைலில் கேரள உடைகள் அணிந்து வருகின்றனர்.

பெண்கள் ஒரு படி அதிகமாக கேரள செட் சாரிகளை அணிந்து செல்பிக்களில் திளைத்து வருகின்றனர்.

கமல், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளத்து பெண்ணான நயன்தாரா ஓணம் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி சென்றாராம்.

தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனது கொச்சி வீட்டில் ஓணம் கொண்டாடி அந்த படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இருவரும் புதுமண தம்பதிகளை போல ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள்? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More Articles
Follows