ஜீவாவுக்கு ஜோடியானார் அர்ஜுன் ரெட்டி படபுகழ் ஷாலினி பாண்டே

ஜீவாவுக்கு ஜோடியானார் அர்ஜுன் ரெட்டி படபுகழ் ஷாலினி பாண்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva and Shalini pandeyகலகலப்பு-2′ படத்தினை தொடர்ந்து நடிகர் ஜீவா தனது அடுத்த படத்தை டான் சாண்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

ஜீவாவின் 29வது படமாக உருவாகும் இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் புகழ் ஷாலினி பாண்டே நடிக்க போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், “காமெடி த்ரில்லர் ஜேனரில் இந்த படம் உருவாகிறது.

இதற்கு `விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் ஒன்றும் இடம்பெறுகிறது.

படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தற்போது தமிழ் படமான ‘100% காதல்’ என்னும் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ரசிகர்களுக்கு 2017 மெர்சல் தீபாவளி; 2018 மெர்சல் பொங்கல்

விஜய் ரசிகர்களுக்கு 2017 மெர்சல் தீபாவளி; 2018 மெர்சல் பொங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal stillsஇந்த வருடம் அக்டோபர் 18ஆம் தேதி விஜய் நடித்த மெர்சல் படம் வெளியானது.

எனவே இந்த வருட தீபாவளி மெர்சலாக்கி கொண்டாடினர் விஜய் ரசிகர்கள்.

இப்படம் வந்து 100 நாட்களை நெருங்கும் வேளையில் அடுத்த வருடம் 2018 பொங்கல் தினத்தில் ஜனவரி 14ல் ஜீடிவியில் இப்படத்தை ஒளிப்பரப்பாக இருக்கின்றனர்.

எனவே அடுத்த வருட பொங்கலையும் விஜய் ரசிகர்கள் மெர்லாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜன-28ல் லிப்ரா புரொடக்சன்ஸ் பிரமாண்ட குறும்பட திருவிழா..!

ஜன-28ல் லிப்ரா புரொடக்சன்ஸ் பிரமாண்ட குறும்பட திருவிழா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra production contestசில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நல்லதற்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றான லிப்ரா புரடக்சன்ஸ் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாக கடந்த நவ-29ல் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டன.

இந்தநிலையில் தான் இந்த விழாவை வரும் ஜன-28ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி தள்ளி வைப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தப்போட்டியில் குறும்படங்கள் கலந்துகொள்ள இருகின்றன.

அதுமட்டுமல்ல, சில சர்வதேச திரைப்பட நடுவர்(ஜூரி)களும் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

அதனால் இந்த குறும்பட விழா முன்னைவிட இன்னும் பிரமாண்டமாக, மற்ற குறும்பட விழாக்களுக்கு முன்னோடியான நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதனால் இந்த நீண்ட தாமதத்திற்காக லிப்ரா புரொடக்சன்ஸ் உங்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.

கலகலப்பு 2 படத்தின் கலர்புல் டீசர் யூடியூப்பில் சாதனை

கலகலப்பு 2 படத்தின் கலர்புல் டீசர் யூடியூப்பில் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalakalappu 22012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.

முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது.

கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர். C இயக்க அவ்னி மூவி மேக்கரிஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்று பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு, படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர் யூடியூப்பில் No.1 – ல் டிரெண்டாகி தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

கலகலப்பு – 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

கலகலப்பு 2 படத்தை, 2018 ஆம் வருட தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Youtube Link : https://www.youtube.com/watch?v=wiF-WlWS3dE

ரசிகர் மன்ற நிர்வாகி விபத்தில் பலி; கதறி அழுது கார்த்தி நேரில் அஞ்சலி

ரசிகர் மன்ற நிர்வாகி விபத்தில் பலி; கதறி அழுது கார்த்தி நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DSB0jsFUQAEk9W9கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி நேற்று விபத்தில் பலி – நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி

கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) கார் விபத்தில் பலியானார்

ஜீவன் குமார் அவரது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்

கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது

இதில் பலத்த காயம் அடைந்த நான்குபேரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்

ஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்

திரளான மாவட்ட நிர்வாகிகளும் ரசிகர்களும் கலந்து இறுதிச்சடங்கில் கொண்டனர்

ஜீவன்குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரில் சென்று இறுதிச்சடங்கில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்,

நிறைய பேச வேண்டியது இருக்கு.; ரஜினி பேச்சால் ரசிகர்கள் மகிழ்ச்சி

நிறைய பேச வேண்டியது இருக்கு.; ரஜினி பேச்சால் ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஇந்தாண்டில் 2வது முறையாக தன் ரசிகர்களை சந்தித்து அவர்களின் ஆயுட்கால ஆசையான போட்டோ எடுப்பதை நிறைவேற்றி வருகிறார் ரஜினிகாந்த்.

டிசம்பர் 31ல் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என ரஜினி பேசியிருந்தார்.

அவரின் இந்த பேச்சு பல டிவிக்களில் விவாத பொருளாகிவிட்டது.

இந்நிலையில் இன்று 2வது நாளாக தன் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

அப்போது அவர் பேசியதாவது…

ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள்.

நேற்று சந்திப்பில் மிகவும் கட்டுப்பாடுடன் நடந்துக் கொண்டீர்கள். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.

இன்னும் நிறைய பேச வேண்டும் என நினைக்கிறேன். நிறைய பேச வேண்டிய நேரம் இருக்கு. மேடை இருக்கு. என்றார்.

அவர் அரசியல் மேடையை பற்றி சொன்னதை புரிந்துக் கொண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

டிசம்பர் 31ஆம் தேதி ரஜினியுன் அறிவிப்புக்காக உங்களை போல நாங்களும் காத்திருக்கிறோம்.

More Articles
Follows