தெலுங்கிலும் பட்டைய கிளப்பும் ‘ஜிகர்தண்டா’ பட ரீமேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேன்ன் உள்ளிட்டோ நடிப்பில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’.

2014ல் வெளியான இப்படம் பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை பெற்று தந்துள்ளது.

தற்போது 5 ஆண்டுகளுக்னு பிறகு ‘வால்மீகி’ என்ற பெயரில் தெலுங்கில்ரீமேக் செய்து கடந்த வாரம் வெளியிட்டுள்னர்.

அங்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

தமிழில் சித்தார்த் நடித்த கேரக்டரில் தமிழ் நடிகர் அதர்வா நடிக்க, பாபி சிம்ஹா கேரக்டரில் வருண் தேஜ் நடித்துள்ளார்.

பார்வையற்ற இளைஞருக்கு சினிமாவில் வாய்ப்பளிக்கும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் பார்வையற்ற சிறுவன்.

இவர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் உள்ள கண்ணான கண்ணே… என்ற பாடலை பாடியுள்ளார்.

அதை ஒருவர் ரசித்து கேட்டு, அவரை பாட வைத்து அந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை அந்த பாடலுக்கு இசையமைத்த இமான் இணையத்தில் பார்த்துள்ளார்.

உடனே அவரின் விவரம் வேண்டும் என அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.

சில மணி நேரங்களிலேயே அந்த சிறுவன் குறித்த விபரம் கிடைத்து விட்டதாம்.

இதனையடுத்து விரைவிலேயே அவரை திரைப்படத்தில் பாட வைக்க உள்ளதாகவும் இமான் உறுதியளித்துள்ளார்.

பிகில் விழா ஒளிபரப்பு; சன் டிவி மேல் கடுப்பான விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரு வேடங்களில் விஜய் நடித்துள்ள பிகில் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இப்பட வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சன் டிவி பெற்றுள்ளதால் மற்ற மீடியாக்களுக்கு அனுமதியில்லை.

இந்த நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நேற்று சன் டிவியில் ஒளிப்பரப்பினர்.

ஆனால் இதில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை அவர்கள் எடிட் செய்துள்ளனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் முழு நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லையே என்ற கடுப்பில் இருந்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியும் தன்னுடைய பேச்சையும் முழுவதுமாக காட்டவில்லை என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினியின் தர்பாரை லண்டனுக்கு ஷிப்ட் செய்த முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஆண்டுகளாக 2 வருடத்திற்கு 1 படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் தற்போது அதிரடியாக ஒரே வருடத்தில் 2 படங்களை கொடுத்து வருகிறார்.

எனவே நாளுக்கு நாள் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

காலா, 2.0, பேட்ட படங்களை தொடர்ந்து தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்பட சூட்டிங் இந்த செப்டம்பர் மாதம் 30ல் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கவுள்ளனர்.

இதற்காக லண்டன் பறக்க உள்ளது தர்பார் படக்குழு. அங்கு சில பாடல் காட்சிகளை படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinis Darbar shooting in London updates

‘பிகில்’ பட போஸ்டரை கிழித்து கறிகடை வியாபாரிகள் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பிகில்’.

அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அடுத்த மாதம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஆளும் அதிமுக அரசை கடுமையாக சாடியிருந்தார் விஜய்.

இதற்கு பல அமைச்சர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் கறிக்கடை வியாபாரிகள் இப்படத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

அதாவது பிகில் பட போஸ்டரில் இறைச்சி வெட்டும் முட்டி (கட்டை) மீது செருப்புக் கால் வைத்து விஜய் அமர்ந்திருப்பார். இதனை கண்டித்து தான் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்களின் மனுவில்…

“இந்தியாவில் உள்ள அனைத்து மீன் வியாபாரிகள், இதர அனைத்து இறைச்சி வியாபாரிகளும் அதிகாலை தொட்டு வணங்கி தொழில் செய்யும் முட்டி, கத்தி மீது செருப்புக்கால் வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளை செறுப்பால் அடித்த உணர்வை ஏற்படுத்து விட்டீர்கள் அந்தக் காட்சியோடு படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.

இதைச் சுட்டிக்காட்டி ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும், இயக்குநர் அட்லீக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு பதில் நோட்டீசாக ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் செருப்பு காலால் முட்டி, கத்தியை மிதித்து போஸ்டர் வெளியிட்ட காட்சியை நியாயப்படுத்தி பதில் கோரப்பட்டது.

ஆகவே இந்தியாவில் உள்ள மொத்த இறைச்சி வியாபாரிகளையும் கொச்சைப்படுத்தும் பிகில் திரைப்படத்தில் அந்தக் காட்சி சம்பந்தப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை மிதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை கொடுக்க வந்த கறிக்கடை உரிமையாளர்கள் பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டம் செய்தனர்.

இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு நிலவியது.

Meat sellers protest against Vijays Bigil movie

விஷ்ணு விஷாலுடன் இணையும் ப்ரியா பவானி ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெர்ஸி பட தமிழ் ரீமேக் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இத்துடன் எஃப்.ஐ.ஆர் என்று பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்துவிட்டு தன் நெருங்கிய நண்பரும் சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குநருமான செல்லா என்பவரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

Priya Bhavani Shankar to star opposite with Vishnu Vishal

More Articles
Follows