ஜெயிக்கப்போவது யாரு பட இசையை இமான் வெளியிட்டார்

ஜெயிக்கப்போவது யாரு பட இசையை இமான் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jeyikka povathu yaaru movie songs launch by Music director Immanடிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்கபோவது யாரு“

இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார்.

மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட்

இசை – சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின்

படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது…

கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார்.

ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார்.

இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன்.

இதுவரை ஒரு படம் எடுப்பதற்கான 15 துறைகளையும் ஒரே ஒரு மனிதன் ஜாக்கிசான் அவர்கள் “ ஜோடியாக் “ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012 ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.

அதற்கு பிறகு நான் 29 துறைகளில் பணியாற்றி இந்த படத்தை முடித்துள்ளேன். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும் இடம்பெறும் என்று நம்பிக்கையுடம் கூறுகிறார் இயக்குனர் சக்திஸ்காட்.

இந்த படத்தின் இசையை நூறு படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Jeyikka povathu yaaru movie songs launch by Music director Imman

jeyikka povathu yaaru movie stills (7)

குடியரசு தினத்தில் நாடோடிகள்-2 படம் தொடங்கியது

குடியரசு தினத்தில் நாடோடிகள்-2 படம் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadodigal 2 shoot started on Republic Day 20182009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
கலை – ஜாக்கி
எடிட்டிங் – ரமேஷ்
பாடலாசிரியர் – யுகபாரதி
சண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்
நடனம் – திணேஷ், ஜானி
மக்கள் தொடர்பு – மெளனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.

மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது.

இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.

Nadodigal 2 shoot started on Republic Day 2018

nadodigal2 team

ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்க்கும் மன்னர் வகையறா

ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்க்கும் மன்னர் வகையறா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mannar Vagaiyara movie release more than 300 theatres in TNவிமல் தயாரித்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா.

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆனந்தி, சாந்தினி, ஜீலி, நீலிமாராணி, பிரபு, ரோபோ சங்கர், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரோமோ வீடியோக்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஒரு காட்சியில்… விமல் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் ஒரு திருமண நிகழ்வில் மொய் வைக்க செல்கின்றனர்.

அப்போது தன் பெயருடன் தேவர் என்ற ஜாதி பெயரை சொல்கிறார் ரோபோ சங்கர்.

அதற்கு மொய் எழுதும் பெண்ணோ.. என்ன சார்? இந்த காலத்துல ஜாதி எல்லாம் பெயரோடு வச்சிருக்கீங்க என்று கேட்கிறார்.

ஏம்மா.. ஐஸ்வர்யா ராய், ஷில்பா செட்டி, லட்சுமிமேனன் இவங்க எல்லாம் ஜாதி பெயர வச்சிருக்கும்போது, தமிழ்நாட்டுக்காரன் நான் தமிழ்நாட்டுல என் பெயரை ஜாதியோட சேர்த்து சொல்லக்கூடாதா? என கேட்கும் விதமாக அந்த ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்த்துள்ளார்.

Mannar Vagaiyara movie release more than 300 theatres in TN

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது; கமல்-ரஜினி-விஜயகாந்த் வாழ்த்து

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது; கமல்-ரஜினி-விஜயகாந்த் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja gets Padma Vibhushan Award Rajini Kamal wished himநாளை இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.

எம்.ஆர்.ராஜகோபால், நாகசாமி, ஞானம்மாள், தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் வாசுதேவன் ஆகியோர் பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கு(98) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் இளையராஜாவுக்கு தொலைபேசியில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பத்ம விபூஷண் விருது பெற்றது குறித்து இளையராஜா சற்றுமுன் கூறியதாவது…

பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இளையராஜா கூறியுள்ளார். மேலும் மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

Ilayaraja gets Padma Vibhushan Award Rajini Kamal Vijaykanth wished him

 எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது .
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா(1)
பத்ம விபூஷன் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.(2)
பிப்-16ல் நாகேஷ் திரையரங்கம்; கின்னஸ் சாதனை இயக்குனரின் அடுத்த அதிரடி

பிப்-16ல் நாகேஷ் திரையரங்கம்; கின்னஸ் சாதனை இயக்குனரின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari Ashna Zaveri starrer Nagesh Thiraiyarangam release on 16th Feb 2018ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”.

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது.

“நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரி நாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார்.

காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர்மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில்,தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள “நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக்.

திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திகில் பட பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Aari Ashna Zaveri starrer Nagesh Thiraiyarangam release on 16th Feb 2018

பாலியல் தொல்லை கொடுத்தால் கையை வெட்டுவேன்; அனுஷ்கா ஆவேசம்

பாலியல் தொல்லை கொடுத்தால் கையை வெட்டுவேன்; அனுஷ்கா ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Anushka Shetty speech about Sexual harassmentசினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஆக்சனிலும் வெளுத்து கட்டுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு அந்த இடத்தை விஜயசாந்தி பிடித்து வைத்திருந்தார்.

தற்போது அதுபோன்ற ஆக்சன் படங்களுக்காகவே அனுஷ்காவை இயக்குனர் நாடுகின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஆக்சனை போன்றே நேரிலும் கொதித்து எழுந்து பேசியுள்ளார் அனுஷ்கா.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பாலியல் தொல்லை குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
பாகுபலி-2 படத்தில் நடந்த மாதிரியே ஒருவன் என்னை அத்துமீறி தொட்டான். அவனை கொல்ல வேண்டும் என்று எனக்கு கோபம் வந்தது.

அப்படி செய்ய முடியாமல் ஓங்கி அவனை அறைந்தேன். அந்த சம்பவம் நடந்த அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை.

ஒரு பெண்ணை யாராவது தொட்டால் அதில் அன்பு இருக்க வேண்டும். ஆதரவு இருக்க வேண்டும். பாதுகாப்பை உணர வைக்க வேண்டும். கவுரவமாகவும் இருக்க வேண்டும்.

அந்த உணர்ச்சி ஒரு தைரியத்தை கொடுக்கும். அதற்கு மாறாக அந்த தொடுதலில் ஆசை இருந்தால் அந்த மாதிரி செய்பவன் கைகளை வெட்ட வேண்டும் என்றுதான் தோன்றும்” என்று பேசினார்.

Actress Anushka Shetty speech about Sexual harassment

More Articles
Follows