தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அர்விந்த் சாமி மற்றும் ஹன்சிகா நடித்துள்ள படம் போகன்.
இமான் இசையமைத்துள்ள இப்படத்தை பிரபுதேவா மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சற்றுமுன் சென்னையில் ஈஞ்சம்பகாக்கத்தில் நடைபெற்றது.
இதில் ஜெயம் ரவி பேசும்போது…
“போகன் என் வாழ்க்கையில் முக்கியமான படம். பிரபுதேவா தயாரிப்பில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என்றார்.
ஹன்சிகா பேசும்போது… “ஜெயம் ரவி மற்றும் லட்சுமணன் ஆகியோரின் வெற்றி கூட்டணியில் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
பிரபுதேவா பேசும்போது… “ஹன்சிகாவின் நடிப்பை அடிக்கடி சூப்பர் சூப்பர் என்பேன்.
ஜெயம் ரவி நடிப்பில் ஒரு குட்டி கமல்ஹாசனைப் போன்றவர்” என்றார்.