‘பொன்னியின் செல்வன்’ நாயகனுக்கு அதிக பட்ஜெட்டை ஒதுக்கிய வேல்ஸ் பிலிம்ஸ்

‘பொன்னியின் செல்வன்’ நாயகனுக்கு அதிக பட்ஜெட்டை ஒதுக்கிய வேல்ஸ் பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

இவர் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த படங்களுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ரவி படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 1’.

இது பான் இந்தியா படமாக தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மொழிகளில் வெளியானது. இதனால் தற்போது இந்தியா முழுக்க தெரிந்த நடிகராகி விட்டார் ஜெயம் ரவி.

இதனையடுத்து இந்தாண்டு 2023 மார்ச் மாதம் ‘அகிலன்’ படம் வெளியானது.

வரும் ஏப்ரல் 28 அன்று ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.

‘பொன்னியின் செல்வன் 2’-ல் அதிக முக்கியத்துவம் ஜெயம் ரவிக்கு தான் இருக்கும் ஏனெனில் கதையின் நாயகனே அவர் தான்.

இதைத் தொடர்ந்து ரவி நடிப்பில் ‘இறைவன்’, ‘சைரன்’ ஆகிய படங்கள் இந்த வருடமே வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் எம். ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படம் ரூ. 100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறது.

இதையடுத்து அவர் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi and Vels films joins for mega budget film

SK 21 இல் நிச்சயம் அது இருக்காது. உண்மையை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்

SK 21 இல் நிச்சயம் அது இருக்காது. உண்மையை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி SK 21 இல் இனைந்து நடிப்பது உறுதியாகிவிட்டது.

இருவரும் நேற்று ஒரு விழா மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர் .

அவர்கள் ஒன்றாக நடனமாடுவதை பார்வையாளர்கள் பார்க்க முடியுமா என்று தொகுப்பாளர் கேட்டபோது, ​​​​எங்க ரெண்டு பேருக்கும் இடையே நடனம் இல்லை என்று தெரிவித்தார் சிவகார்த்திகேயன் .

“எங்கள் காம்போவில் இருந்து நீங்கள் அனைவரும் நடனம் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் ஆனால் இந்த படத்தில் அது நடக்கவில்லை.

இது ஒரு வித்தியாசமான மற்றும் சிறப்பான படமாக இருக்கும்” என்றார் அவர் .

Sivakarthikeyan shares interesting fact about SK 21

குட்லக்-கை மீண்டும் துவங்கிய ஹரி & ப்ரீதா.; சூர்யாவுடன் கூட்டணி தொடருமா.?

குட்லக்-கை மீண்டும் துவங்கிய ஹரி & ப்ரீதா.; சூர்யாவுடன் கூட்டணி தொடருமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர்.

தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர்
மாண்புமிகு எம்.அப்பாவு எம்.எல் .ஏ
தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் mla,
மாண்புமிகு பி.கே.சேகர் பாபு mla,
மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் mla, டைரக்டர் ஹரி தந்தை கோபால கிருஷ்ணன், ஹரியின் மாமனார் நடிகர் விஜயகுமார், ரிய ஹரி, ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம். அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார்.

மற்றும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், எஸ்.ஆர்.பிரபு, மோகன் நடராஜன், எம்.எஸ். முருகராஜ், கார்த்திக் சந்தாணம், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், சுகுமார், ஶ்ரீதர்,
நடிகர் தலைவாசல் விஜய், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் கார்த்திக் ராஜா, இயக்குனர் அலெஸ் பாண்டியன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் ராஜேஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஓ.ஏ.கே.சுந்தர், ஶ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வந்தவர்களை டைரக்டர் ஹரி, ப்ரிதா ஹரி வரவேற்றனர்.

முன்னணி நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது.

இந்த திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக, பல திரை ரசிகர்களின் வாழ்வில் நினைவலைகளின் சின்னமாக விளங்கிய இடமாகும்.

குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கில் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த திரு எம் ஜி ஆர், திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, திருமதி ஜானகி ஆகியோருடன் தற்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் திரைப்படம் பார்த்து ரசித்த பெருமை இந்த திரையரங்கிற்கு உள்ளது.

மிகவும் புகழ்மிகு அரங்கமாக இருந்த இந்த திரையரங்கம் தான் இப்பொழுது ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ எனும் பெயரில் சென்னை சாலிகிராமத்தில் மீண்டும் உதயமாகிறது. இதனை முன்னணி இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவக்கியுள்ளனர்.

கூடுதல் தகவல்…

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ‘அருவா’ என்ற படத்தின் போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனவே ‘அருவா’ படம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா காலகட்டத்தில் சூர்யா நடித்து தயாரித்த ‘சூரரை போற்று’ படம் ஓடிடி-யில் வெளியானபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் இயக்குனர் ஹரி. உங்கள் உயர்வுக்கு காரணமான தியேட்டர்களை மறந்து விடாதீர்கள் என கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் அவர்கள் தற்போது சந்தித்து இருப்பதால் விரைவில் இவர்களின் கூட்டணி உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா மற்றும் ஹரி இணைந்த ‘வேல்’, சிங்கம் சிங்கம் 2 சிங்கம் 3 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriya opened Hari – Preetha’s Good Luck Studios

கீழடி அருங்காட்சியில் சூர்யா ஜோதிகா விசிட்.; தனிப்பட்ட நபருக்கு காவல்துறையா? என மக்கள் கேள்வி

கீழடி அருங்காட்சியில் சூர்யா ஜோதிகா விசிட்.; தனிப்பட்ட நபருக்கு காவல்துறையா? என மக்கள் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் கீழடி கிராமம் உள்ளது.

கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது.

இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை அங்கு அகழாய்வு செய்து, ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க காலக் குடியேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மார்ச் மாதம் 6-ம் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

இன்று ஏப்ரல் 1-ம் தேதி் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நடிகர் சிவகுமார் அவரது மகன் நடிகர் சூர்யா, மருமகள் நடிகை ஜோதிகா மற்றும் அவர்களது உறவினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருமிதம்! வைகைநாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.

தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்.. அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்..குழந்தைகளுடன் அனைவரும் வருக!” என பதிவிட்டுள்ளார்.” என நடிகர் சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் வருகையை முன்னிட்டு அங்கு பார்வையிட வந்த பொதுமக்களை பல மணி நேரம் காவல்துறை காக்க வைத்ததாக கூறப்படுகிறது. ஒரு தனிப்பட்ட நபருக்காக எங்களை ஏன் காக்க வைக்க வேண்டும்? என அங்கு வந்து பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் காவல்துறை யாருக்கு வேலை செய்கிறது எனவும் மக்கள் கேட்கின்றனர்.

உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமதானா.?

சூர்யா - ஜோதிகா

Suriya Jyothika family visits Keeladi museum made controversy

ஏப்ரல் – மே மாதங்களில் சினிமா சூட்டிங் நடத்த தடை; அதிர்ச்சியில் திரையுலகம்

ஏப்ரல் – மே மாதங்களில் சினிமா சூட்டிங் நடத்த தடை; அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடை என்றால் நாம் நினைவுக்கு முதலில் வருவது ஐஸ்கிரீம்.. இரண்டாவது நினைவுக்கு வருவது ஏதாவது குளிர் பிரதேசம்.

தமிழகத்தை பொறுத்தவரை வெயில் கொடுமையை சமாளிக்க ஊட்டிக்கு மக்கள் செல்வது வழக்கம்.

அதுவும் பள்ளி கல்லூரிகளின் விடுமுறை காலம் என்பதால் ஊட்டியில் லட்சக்கணக்கான மக்கள் அந்த காலங்களில் கூடுவது வழக்கம்.

அங்கு கண்களுக்கு குளிர்ச்சியாக பல பூக்கள் பூங்காக்கள் உள்ளன. சில இடங்களில் நீர்வீழ்ச்சியும் உள்ளன.

பொதுமக்கள் அங்கே அதிகம் கூடுவதால் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் சினிமா படப்பிடிப்பை நிறுத்தி வைப்பதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகி உள்ளது தோட்டக்கலைத்துறை.

இந்த நடைமுறை இன்று ஏப்ரல் 1 முதல் ஊட்டியில் நடைமுறைக்கு வருகிறது.

கூடுதல் தகவல்…

ஊட்டி – நீலகிரியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு சூட்டிங் நடத்த தோட்டக்கலைத்துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் ரூ.50 ஆயிரம் கட்டணமும் தேயிலை பூங்காவில் ரூ.25 ஆயிரம் சூட்டிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Govt banned cinema shooting at April and May months

உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கர்.; இதுதான் உண்மையான காரணமா?

உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கர்.; இதுதான் உண்மையான காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் காமெடி செய்து வருபவர் நடிகர் ரோபோ சங்கர்.

இவர் விஜய், அஜித், விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும் குண்டாக காணப்படும் ரோபோ சங்கர் அண்மைக்காலமாக உடல் மெலிந்து காணப்படுகிறார்.

எனவே அவருக்கு என்ன பிரச்சனை.? என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களை கேள்வி கேட்டு வருகின்றனர்.

ரோபோ சங்கர் நடித்து வரும் புதிய படத்திற்காக உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

மேலும் அவருக்கு சமீபத்தில் டைபாய்டு ஜூரம் வந்ததால் உடல் குறைந்து அவர் டயர்ட்டாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

robo shankar revealed the secret behind his weight loss

More Articles
Follows