ஜெயம் ரவியின் 26வது படத்தை இயக்கும் அஹமது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அடங்க மறு’.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கோமாளி’ படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்க வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இதில் ஹீரோயின்களாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, கோவை சரளா, பிரேம்ஜி அமரன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோரும் நடிக்க ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து ஜெயம் ரவியின் 25-வது படமாக ‘தனி ஒருவன் 2’ படம் உருவாகவுள்ளது. இப்படத்தை அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்குகிறார்.

இதனையடுத்து ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய அஹமது இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் ஜெயம் ரவி.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது உருவாகவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் விவரம் வருமாறு…

‘Mr. லோக்கல்’ படத்தை முடித்து விட்டு மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் ஷூட்டிங், நேற்று தொடங்கியது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஏப்ரல் இறுதியில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

இதில் தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Sivakarthikeyan romance with Aishwarya Rajesh in Pandiraj direction

மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா & ஷாரூக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், தயாரிப்பாளர் என வலம் வரும் மாதவன் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு.

இப்படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

அதாவது ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானார் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்.

ஆனால் அவரது குற்றம் நீருபிக்கப்படவில்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது என்பதை பார்த்தோம்.

இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்து வருகிறார். இவருடன் சிம்ரன் நடிக்கிறார்.

இந்நிலையில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சூர்யா சம்மதித்து இருக்கிறாராம். இந்த கேரக்டர் திருப்பு முனையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதே கேரக்டரை ஹிந்தியில் ஷாருக்கான் செய்ய உள்ளராம்.

15 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா – மாதவன் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriya and Shahrukh Khan will be acting in Madhavans direction

துடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் கதைகளுக்கு, துடிப்பான இளம் கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு ஹரிஷ் கல்யாண் ஒரு பொக்கிஷமாக இருக்கிறார். “பியாா் பிரேமா காதல்” படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 15-ந் தேதி வெளிவர இருக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படம் வர்த்தகரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ இந்த படம் காதலை பற்றியும், புரிதலை பற்றிய படம் இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான கதையாக இருக்கும். இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் எல்லாருடைய வாழ்விலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நடந்திருக்கும் அல்லது கேள்விபட்டாவது இருப்பார்கள். இந்த கதையின் நாயகியும், நாயகனும் உங்களில் ஒருவராக இருக்கலாம்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு இசை ஒரு பெரிய காரணமாக இருக்கும். ‘கண்ணம்மா’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு, எங்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள்து. ஒளிப்பதிவாளர் கவின், இந்த படத்தில் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடம் பெற்று தரும் என நம்புகிறேன். கதாநாயகி ஷில்பா மிகவும் உன்னதமான நடிகையாவார். அவருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பெருமையே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. பாலாஜி கப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது.

இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். இந்த உண்மையை நாங்கள் பிரச்சாரமாக சொல்லவில்லை ஆனால் ஆழமாக சொல்கின்றோம். என்னுடைய கதாபாத்திரமான கௌதம் எல்லா இளைஞர்களையும் கவரும். இந்தப் படத்தின் கதாநாயகன் கௌதம் லே, லடக் ஆகிய இடங்களுக்கு தன்னை இனம் கண்டு கொள்ள செல்கிறான். இந்த காட்சி ரசிகர்களை மிகமிக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை” என ஹரிஷ் கல்யாண் கூறுகிறார்.

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் ராக் ஸ்டார் யஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் கன்னட படங்கள் வெளி மாநிலங்களில் பிரபலம் ஆவதில்லை. ஆனாலும் அண்மையில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இந்தியா முழுவதும் பிரபலமானது.

பிரஷாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் யஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளில் இப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

சுமார் 50 கோடி செலவில் தயாரான இப்படம், 250 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கன்னடப் படத்திற்கான அதிகபட்சமான வசூல் இது எனவும் சொல்லப்படுகிறது.

தற்போது ‘கேஜிஎப்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 13) ஆரம்பமாகியுள்ளது.

அத்தியாயம் இரண்டில் கேஜிஎப் தங்கச் சுரங்கத்தை நாயகன் யஷ், எப்படி ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதுதான் கதையாக அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

KGF Chapter 2 Movie started with Pooja today

‘ஹீரோ’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமெடுக்கும் எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. ‘குற்றம் தண்டனை’ படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதை எழுதினார். இதுதவிர பல நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளரான இவர், மைத்திரி மூவி மேக்கர்ஸ்-ன் ஒன்பதாவது தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ‘ஹீரோ’ என்ற படத்தை இயக்குகிறார். நேரடி தமிழ் படமாக உருவாகும் ‘ஹீரோ’ அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும்.

‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’ பாணியில் விளையாட்டு த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதுதில்லியில் ஆரம்பமாகும்.

இப்படத்தின் கதாநாயகியாக ‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். ‘காலா’, ‘கபாலி’ புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும்.

More Articles
Follows