அட்லி பிறந்தநாளில் ‘ஜவான்’ பட ‘பட்டாசா..’ பாடல் வெளியீடு

அட்லி பிறந்தநாளில் ‘ஜவான்’ பட ‘பட்டாசா..’ பாடல் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் திரை ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் – ‘ஜவான்’ படத்திலும் இவர்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒரு பாடலில் ஜொலித்திருக்கிறது.

‘ஜவான்’ படத்தில் இடம்பெற்ற ‘பட்டாசா..’ எனத் தொடங்கும் பாடலின் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் இயக்குநரான அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது..!

இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய நட்சத்திர ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன்.

இவர்கள் தங்களுடைய ஒருமித்த ஒத்துழைப்பால் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் வரலாற்றை தொடர்கிறார்கள். ‘ஓம் சாந்தி ஓம்’ மற்றும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ போன்ற படங்களில் இவர்களின் மாயாஜாலம் ரசிகர்களால் மறக்க இயலாது.

‘லுங்கி டான்ஸ்..’, ‘டார்ட்-ஈ- டிஸ்கோ..’ போன்ற தரவரிசையில் முன்னிலையில் பெற்ற பாடல்கள் – இவர்களின் மாயாஜால கெமிஸ்ட்ரியின் வரலாற்றுக்கு சான்றாகும். இது ரசிகர்களை தொடர்ந்து மயக்கி வருகிறது.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக் கான் – தீபிகா படுகோன் இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர்.

இவர்களின் தீவிர ஆதரவாளர்களை மகிழ்விக்க, படத்தின் தயாரிப்பாளர்கள் ‘பட்டாசா..’ எனத் தொடங்கும்.. இந்த ஜோடி திரையில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கும் பாடலின் காணொளியை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த டைனமிக் இரட்டையர்களின் மாயாஜாலத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்வையிடுவார்கள்.

‘ஜவான்’ திரைப்படம் இந்திய திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்தெறிந்திருக்கிறது.

விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுகளை பெற்றிருக்கிறது. படத்தின் கதை, புத்திசாலித்தனமான திரைக்கதை, பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஷாருக்கான் -தீபிகா படுகோன் எனும் ஜோடியின் நிரந்தரமான மாயாஜால கெமிஸ்ட்ரி ஆகியவை… அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கி இருக்கிறது. இந்த வெற்றி தேரோட்டம் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து பயணிக்கிறது.

‘ஜவான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பட்டாசா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் மாயாஜாலம் மிக்க நடனமும், நடிப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் கூடிய ஆதங்கத்தை அதிகரித்திருக்கிறது.

இந்த ஆண்டின் பொழுதுபோக்கு பாடல்கள் ஒன்றாக அமைந்த இந்தப் பாடல் வரிகளும் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது.

அதன் காட்சி அமைப்புகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர்கள் விவேக் மற்றும் அறிவு எழுதி இருக்க, பின்னணி பாடகர் நகாஷ் அஜீஸ், அறிவு மற்றும் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

இதற்கு அனிருத் இசையமைக்க, ஃபாரா கான் நடனம் அமைத்துள்ளார்.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார்.

கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

ஜவான்

Jawans colourful love song of the year Pattasa Song Video Out

இறைவனுக்கு A சர்டிபிகேட் கொடுத்தது சென்சார் போர்டு

இறைவனுக்கு A சர்டிபிகேட் கொடுத்தது சென்சார் போர்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர்-28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில், ‘இறைவன்’ படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும், ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’ஆதிபகவன்’ படத்துக்கும் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

jayam ravi’s iraivan movie gets A certificate by Censor Board

துக்க வீட்டில் சேனல் TRP.. YouTube Views.? எல்லையே கிடையாதா என நடிகர் சங்கம் கண்டிப்பு

துக்க வீட்டில் சேனல் TRP.. YouTube Views.? எல்லையே கிடையாதா என நடிகர் சங்கம் கண்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிறப்பு இறப்பு இரண்டுமே அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது.. இதில் இறப்பு என்பது ஒரு குடும்பத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இதில் சினிமாக்காரர்களும் விதிவிலக்கல்ல.

பிரபலங்கள் வீட்டில் மரணம் நடைபெற்றால் அதை செய்தியாக வெளியிடுவது தவறில்லை. ஆனால் சமீப காலமாக யூடியூப் சேனல்களின் அதிகப்படியான வருகையால் செய்தி சேனல்களின் பொறாமை நிறைந்த போட்டிகளால் அளவுக்கு மீறி நடைபெற்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நடிகை மீனாவின் கணவர் மரணத்தின் போது அவரது உடல் எரிக்கப்படும் வரை மீடியாக்கள் நுழைந்து அதனை படம் பிடித்து காட்டிய போது மீனா வருத்தமுற்றார்.

மேலும் நடிகர் அஜித்தின் தந்தை மரணம் அடைந்த போதும் இதே போன்றே நடைபெற்றது.

அதுபோல விவேக், மயில்சாமி, மனோபாலா, மாரிமுத்து, விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் மீடியாக்களின் வரம்பு மீறிய படப்பிடித்தலை கண்டோம்.

இதை பொதுமக்கள் கண்டித்த நிலையில் தற்போது நடிகர் சங்கமும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்..

செப்டம்பர் தேதி: 21.09.2023

தென்னிந்திய நடிகர் சங்க அறிவிப்பு
அன்புடையீர்!

திரையுலகில், நடிகர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும் பொது மக்களின் பாராட்டுகளிலும், கவனிப்புகளிலுமே புகழடைகிறது. அதற்கு பெரும் பங்காற்றுவது ஊடகத்துறையும், ஊடகவியலார்களும்தான்..!

அக்கலைஞர்களை, படைப்புகளைத் தாண்டி அவர்களது குடும்பம் மற்றும் திறமைகள், குணாதிசயங்கள், சமூக பங்களிப்புகள் போன்றவற்றை மக்களுக்கு கொண்டு செல்வதில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி, இணைய ஊடகங்களின் பங்களிப்பு பெரும் பங்காற்றுகிறது..!

ஆனால் சமீபத்தில் எதிர்பாராமல் மறைந்த திரு மாரிமுத்து, திரு.விஜய்ஆண்டனி அவர்களின் மகள் இழப்பின் போது ஊடகத்துறை நண்பர்கள் நடந்து கொண்டது பலரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது..!

இறுதி நிகழ்வில் நடந்த ஊடகத்துறையினரின் செயல்பாடுகள் எல்லை மீறி பலரையும் சங்கடத்திலும், விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறோம்..!

துயரம் தரும் செய்திகள் சம்பந்தப்பட்டோரை சேரும் முன்பே, தவறான தகவலால் பரபரப்பாக்குவதும், அதிர்ச்சியால் உடைந்து துயரத்தில் நிற்கும் குடும்பத்தை ஊடக நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் எந்தவிதத்தில் நியாயப்படுத்துவது?

துயரத்தால் தாக்குண்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வரும் கலைஞர்களையும், ஊடக பரபரப்பிற்கு உள்ளாக்குவது எந்தவிதத்தில் சரியானது?

எதிர்பாராத இழப்பினால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் குடும்பத்தினரும், துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களும் அவர்களுக்கு உதவ வந்த கலைத்துறை நண்பர்களும், ஊடக நெருக்கடியில் சிக்கி, இறுதி நிகழ்வுகளைக்கூட முழுமையாக செய்யவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் சரியானது.

கலைஞர்களின் இறுதி நிகழ்வை மக்களுக்கு கொண்டு சென்று நிரந்தர புகழ் சேர்க்கவேண்டும் என்ற ஊடக நண்பர்களின் செயல்பாட்டின் எல்லைகள் எதுவரை?

எதிர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க ஊடக செயல்பாட்டின் எல்லைகளை தீர்மானிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

எங்கள் கலைஞர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொறுப்புணர்ந்து உங்களுக்குள் தீவிரமான சுயக்கட்டுப்பாட்டை ஊடகத் தோழர்கள் கொண்டு வர வேண்டும். அரசும் இதை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்பதே எம் வேண்டுதல்.

(M.நாசர்),
தலைவர்,

Nadigar Sangam condemns TV and YouTube activities at death funerals

அண்ணன் சூர்யாவுடன் இணைய ஆர்வம்..; அடுத்த 2 படம் ரெடி – கார்த்தி

அண்ணன் சூர்யாவுடன் இணைய ஆர்வம்..; அடுத்த 2 படம் ரெடி – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கார்த்தியின் நடிப்பில் அவரது 25வது படமாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் #ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகி வருகிறது.

“ஒரு க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படம் மனித வேட்டையையும் உள்ளடக்கியது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி இப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் ஆழமாக பின்னப்பட்டுள்ளன. மேலும் பல ஆரவாரமான அம்சங்களும் கொண்ட தனித்தன்மை கூட்டணியாக உருவாகி வருகிறது..” என்கிறார் நாயகன் கார்த்தி.

தென்னிந்திய சினிமாவின் மிக பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார்.

துணிச்சலான மற்றும் உற்சாகமான அதேசமயம் ஆர்ப்பாட்டமில்லாத இந்த கதாபாத்திரமும் இயக்குநர் ராஜூ முருகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வமும் தான் என்னை இந்த படத்துக்குள் இழுத்து வந்தது.

#குக்கூ மற்றும் #ஜோக்கர் என அவருடைய முந்தைய இரண்டு படங்களை நான் ரொம்பவே ரசித்திருக்கிறேன். மேலும் இந்த சமூகம், இங்குள்ள கலாச்சாரம் குறித்த அவரது புரிதல் ரொம்பவே அழகானது” என்கிறார் கார்த்தி..

குறிப்பாக வாழ்க்கை, ரொமான்ஸ், நட்பு மற்றும் மதுபோதை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக ராஜூ முருகன் எழுதிய ‘வட்டியும் முதலும்’ என்கிற அவரது கட்டுரை தொகுப்பும் மேலும் அதை தழுவி #ஜப்பான் போன்ற ஒரு க்ரைம் கதை உருவானதும் நடிகர் கார்த்தியை திகைக்க வைத்து விட்டது.

“சர்வதேச அளவிலான பார்வையாளர்களை கவரும் விதமான சாத்தியம் இந்த ஜப்பான் படத்துக்கு இருக்கிறது.

அதனால் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் வரவேண்டும் என நான் விரும்பினேன். அவருடைய பார்வை இப்படத்தை மாற்றும் என நாங்கள் நம்பியதை போலவே நாங்கள் இப்போது சாதித்திருக்கிறோம் என்றும் நினைக்கிறேன்.

பக்காவான உள்ளூர் சுவையில் அதேசமயம் உலகத்தரத்தில் இதை வழங்குகிறோம்” என்கிறார் கார்த்தி.

“திரையுலகில் சகோதரர்கள் ஒரே காலகட்டத்தில் நடிகர்களாக பயணித்து வருவது அரிதான ஒன்று.. அதனால் அண்ணனுடன் (சூர்யா) எப்போது ஒரே படத்தில் இணைந்து நடிக்கப் போகிறீர்கள் என பலரும் கேட்கின்றனர்.

நானும் அண்ணனும் சேர்ந்து நடிப்பதற்கான பொருத்தமான கதைகளை இருவருமே கேட்டு வருகிறோம். முன்பு கூட பயந்தேன்.. ஆனால் இப்போது உறுதியாக இருக்கிறேன். அதனால் நிச்சயமாக இருவரும் இணைந்து நடிப்போம்..” என ஒரு சந்தோஷ தகவலையும் ரசிகர்களுக்கு பரிமாறியுள்ளார் கார்த்தி.

#ஜப்பான் படத்தை தொடர்ந்து ‘சூது கவ்வும்’ புகழ் நலன் குமாரசாமி இயக்கத்தில் பேண்டஸி ஆக்சன் படமாக உருவாகி வரும் படம் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

அடுத்தாக ‘96’ புகழ் சி.பிரேம்குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க உள்ளார் கார்த்தி.

Karthi talks about acting with his brother Suriya

ஜாதி வன்மம் இல்லாத உலகத்தில் என் மகள்.. நானும் இறந்து விட்டேன்..; விஜய் ஆண்டனி அறிக்கை

ஜாதி வன்மம் இல்லாத உலகத்தில் என் மகள்.. நானும் இறந்து விட்டேன்..; விஜய் ஆண்டனி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா என்பவர் தற்கொலை செய்து கொண்டு கொண்டார்.

இவர் 12 வகுப்பு படித்து வருகிறார். தற்கொலைக்கான காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அந்த அறையில் மீரா எழுதியதாக ஒரு கடிதம் சிக்கியது.

அதில் ஐ லவ் யூ ஆல் ஐ மிஸ் யூ ஆல் உள்ளிட்ட சில ஆங்கில வார்த்தைகளை அவர் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடிதம் தொடர்பாக விசாரணையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 21ஆம் தேதி இரவு விஜய் ஆண்டனி உருக்கமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…

என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.

நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். உங்கள்

விஜய் ஆண்டணி,.

என்று அந்த அறிக்கையில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டணி

Vijayantony emotional statement about her daughter death

சினிமா ஏமாற்று வேலை.; ரஜினி விஜய் அஜித் செய்றாங்க.. தெலுங்குல செய்றதில்லை – பேரரசு

சினிமா ஏமாற்று வேலை.; ரஜினி விஜய் அஜித் செய்றாங்க.. தெலுங்குல செய்றதில்லை – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் ‘ஐமா’ படத்தில் யூனஸ் , எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத் தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் பேரரசு பேசும்போது…

”இந்த ஐமா படத்தில் பத்து பாடல்கள் என்ற போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதைப் படத்தில் சரிவர வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் கதாநாயகன் பேசும்போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் நிஜமாகவே நடித்தேன் என்றார். சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.

உண்மை போல நம்ப வைக்க வேண்டும் அவ்வளவுதான். கத்தியால் குத்தும் காட்சி என்றால் நிஜமாகவே குத்தி விட முடியுமா? அப்படி எல்லாம் அபாயகரமான காட்சிகளில் நடிக்கக் கூடாது.

அப்படி டூப் இல்லாமல் அபாயகரமான காட்சியில் நடித்துவிட்டு என்னுயிர்த் தோழன் பாபு தன் 30 ஆண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இப்போது இறந்து விட்டார்.

இதை நாம் கவனிக்க வேண்டும்.எப்படி வேண்டுமானாலும் இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளில் எடுக்க முடியும். எவ்வளவோ படங்களில் எதார்த்தம் மீறி காட்சிகள் வருகின்றன. சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.தெருவில் கழைக் கூத்தாடி செய்யும் ரிஸ்கைக் கூட சினிமாவில் பெரிய கதாநாயகர்கள் கூட செய்வதில்லை.

அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வசதிகள் வந்து விட்டன. மெதுவாக நடந்து வருவதைக் கூட ஓடி வருவது போல் எடுக்க முடியும்.

தமிழ்த் திரைப்படங்கள் பெரிய பெரிய கதாநாயகன் நடிக்கும் படங்கள் கூட செட் போட்டு வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.

அந்தந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். நம் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. எங்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.

இது பற்றி இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது ஆதங்கத்தை வெளியிட்ட போது அதைத் திரித்து திசை திருப்பி விட்டார்கள்.

ரஜினி விஜய் அஜித் சூர்யா படங்கள் ஹைதராபாத்தில் செட்டு போட்டு படமாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு நடிகரின் படங்களும் அங்கேதான் செட்டு போடப்படுகிறது. தெலுங்கு சினிமாக்கள் செட்டுகளை தமிழ்நாட்டில் போடவில்லை. ஆனால் தமிழ் நடிகர்கள் தெலுங்கில் செட்டு போடுகிறார்கள். இதனால் நம் தொழிலாளர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லை. இதைத் தவறாகச் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.

இந்த படம் ஐமா வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது…

” சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆக்சன் ரியாக்சன் விநியோகஸ்தர் ஜெனிஷ் மிகவும் உதவியாக இருக்கிறார் .சிறு முதலீட்டுப் படங்களை வெளியிட்டு பெரிய நிறுவனமாக அவர் உயர்ந்திருக்கிறார். வளர்ந்த பிறகும் அவர் எப்போதும் தனது பணியைத் தொடர வேண்டும் “என்றார்.

இவ்விழாவில் படத்தின் கதாநாயகன் யூனஸ், நாயகி எவ்லின் ஜூலியட் இசையமைப்பாளர் கே. ஆர். ராகுல், ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன் உள்ளிட்ட படக்குழுவினரும் பேசினார்கள்.

Director Perarasu speech at Aaima press meet

More Articles
Follows