ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 16 வயது மாணவர் உயிரிழப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக அரசியலே பார்த்திராத வகையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் நடந்து வருகின்றது.

எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தற்போது வரை இளைஞர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் பகுதியில் சில இளைஞர்கள் ரயிலை மறிக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞர் லோகேஷ் காலமானார்.

இதையறிந்த மாதவன் கூறியதாவது…

I am heart broken … this is not correct -pls pray for-#Logesh he is just 16. Guys pls maintain peace.do this sensibly.#Jallikattu
— Ranganathan Madhavan (@ActorMadhavan)

Jallikattu protest turns tragic as 16-yr-old electrocuted in Salem

‘நடிகர்களை அனுமதிக்கிறாங்க; அரசியல்வாதிகளை விடமாட்டுறாங்க…’ – தொல்.திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தொடர்பாக போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இதுகுறித்து பேச மக்கள் நல கூட்டணி சார்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

அப்போது அவர் பேசியதாவது…

ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதை வரவேற்கிறோம்.

ஆனால் அவர்கள் ஒரு அமைப்பை மட்டும் சுட்டிக்காட்டி சாடி வருவது ஏன்? அவர்களுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள்.

போராட்ட களத்திற்கு நடிகர்கள் அனுமதிக்கும் அவர்கள், அரசியல்வாதிகளை விடமாட்டுறாங்க.” என்று பேசினார்.

Thirumavalavan talks about Students Jallikattu Protest

மோடியை சந்தித்த பின்னரும் சென்னை திரும்பாத ஓபிஎஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழக இளைஞர்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ஆனால் ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என மோடி தெரிவித்து விட்டார்.

இதனையறிந்த போராட்டக்காரர்கள் தங்கள் அறவழிப் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை சென்னை திரும்ப இருந்த முதல்வர் தன் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

காவேரிக்கு முடியாது; ஜல்லிக்கட்டுக்கு ஏன்.? நடிகர் சங்கத்துக்கு இளைஞர்கள் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தி வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக ஆதரவாக நடிகர் சங்கம், தங்களது சங்க மைதானத்தில் நாளை மௌன போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி பிரச்சனையில் நடிகர் சங்கம் பங்கேற்காது என சில மாதங்களுக்கு முன்பு கூறிய நடிகர் சங்கம் தற்போது மட்டும், ஜல்லிக்கட்டுக்கு போராடுவது ஏன்? என போராட்டக் குழுவினர் கேட்டு உள்ளனர்.

இளைஞர்கள் மீது இருக்கும் மீடியா கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள் என்று கூறி, நடிகர் சங்க போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் புரட்சி மாணவர்கள்.

Jallikattu protestors voice against Nadigar Sangam

நாளை நடிகர் சங்கம் போராட்டத்தில் அஜித் இணைவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பீட்டா அமைப்பை தடை செய்து, ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் அறவழிப் புரட்சி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை ஜனவரி 20ம் தேதி மௌன போராட்டம் நடத்த உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இதில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுடன் நடிகர் அஜித்தும் கலந்து கொள்வார் என அவரது தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

Will Ajith participate in Nadigar Sangam protest for Jallikattu

வரலாறாக மாறிய ஜல்லிக்கட்டு புரட்சி… வாயே திறக்காத அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமல் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து, ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.

சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கிற அளவுக்கு வரலாறாக அமைந்துள்ளது.

இதற்கு ஜிவி. பிரகாஷ், ஹிப்ஹாப் ஆதி, லாரன்ஸ், மயில்சாமி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் அறிக்கை வாயிலாகவும் வீடியோ பதிவாகவும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது குறித்து எந்தவொரு அறிவிப்பையோ ஆதரவையோ முன்னணி நடிகரான அஜித் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Whether Ajith will break his Silence in Youth’s Jallikattu Protest

More Articles
Follows